2011 கம்ப்யூட்டர் துறை, இழந்த இரு ஜாம்பாவன்களாக ஸ்டீவ் ஜாப்ஸையும், த.அய்யம்பெருமாளையும் கருதுகிறேன்.
ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவிக்கு மகனாக பிறந்தவர். இவரை ஒரு ஏழ்மைக்குடும்பம் தத்து எடுத்து எடுத்து வளர்த்தது. தத்து எடுத்து வளரும் போது, அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிறந்த மகள் திருமணம் செய்து கொண்ட பின்பு தான், அவளுக்கு தனக்கு அண்ணன் உண்டு என்பது தெரியும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் பௌத்த மதத்தை சேர்ந்தவர். கணைய புற்றுநோயால் மரணம் அடைவோம் என்று தெரிந்தும் அவருடைய உழைப்பை அவர் நிறுத்தவில்லை. கான்பரேன்ஸ் அறையில் கூட்டம் நடத்தும் போது கூட மயக்கம் அடைந்துள்ளார். மைக்ரோ சாஃப்ட் துவங்கிய காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் புரோஜக்ட் பெற்ற நிறுவனமாகும். 20 வயதில் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார். 30 வயதில் 4000 பேர் அவர் நிறுவனத்தில் பணி புரிந்தனர். 40 வது வயதில் இணைய வழி தயாரிப்புகள் மற்றும் வன்பொருள் கண்டுபிடிப்புகளில் இறங்கினார். 50 வயதில் கம்யூனிகேஷன் வன்பொருள் தயாரிப்பில் முதல் இடத்திற்கு இவர் நிறுவனம் சென்றது. 1989 ஆண்டு ஒன்றரை ஆண்டுகள் நான் ஆப்பிள் கணினிக்கான மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் பணிபுரிந்தேன்.ஆப்பிள் மெக்கின்டோஸ் விலை கூடுதலாக இருந்தாலும் அதன் தரத்தை யாரும் குறை கூறியதில்லை. இன்று ஐபோன், ஐபேட் என பல தயாரிப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
விருதுநகரில் நடுத்தர குடும்பத்தில்
திரு.த.அய்யம்பொருள் பிறந்தார். இவர் பள்ளிக் கல்வி மற்றும் இளநிலை பட்டப்படிப்பு தூத்துக்குடியிலும், முதுநிலை பட்டப்படிப்பு கோவையிலும் ஆகும். பட்டம் முடிந்தவுடன் சென்னை வந்தவர் சென்னை எண்ணுர் பவுண்ட்ரிஸ் நிறுவனத்தில் சாதரண உதவியாளராக சேர்ந்தார். தொழிற்சாலையில் நற்பெயரை பெற்ற இவர் படிப்படியாக வளர்ந்து கணினி ஆய்வாளரானார். எண்ணுர் பவுண்ட்ரிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போதே பல கணினி பயிற்சி மையங்களில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றினார். பிறகு 1986 ஆம் ஆண்டு சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷன் என்ற பயிற்சி மையத்தை துவங்கினார். இன்று சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷன் பயிற்சி மையத்தில் 525 கிளைகள் உள்ளன. கணினி அடிப்படைகள், மென்பொருள், வன்போருள் & நெட்வேர்ர்க்கிங், அனிமேஷன், மல்டிமீடியா, ஆங்கிலப் பயிற்சி, ரோபொடிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான பயிற்சிகள் என பல திட்டங்கள் உள்ளன.
நான் 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக சிங்கப்பூர் கணினி தொழில் நுட்ப மாநாட்டிற்கு சென்று திரும்பிய பின், அய்யம்பெருமாளை உடனடியாக அணுகும் படி அழைப்பு வந்தது. அய்யம்பெருமாள் அன்று ஒரு கார் ஷேட்டில் சாதரணமாக அமர்ந்திருந்தார். என்னை சந்தித்து பல ரவுண்டுகள் பேசிய பின்பு
ஆண்டோபீட்டர் ஐடி இண்டஸ்ட்ரி சரிந்துள்ளது. நாம் இருவரும் தோள் கொடுத்து வேலை செய்வோமா?
என்று கேட்டார். அவருடைய உழைப்பின் அருமையை நன்கு அறிந்தவன் நான். அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய உழைப்பை அவருடைய குணத்திற்காகவும், உழைப்பிற்காகவும், சிந்தனைக்காகவும் தான், சிஎஸ்சி நிறுவனத்திற்கு அளித்துள்ளேன். காலம் மாற, மாற நல்ல நண்பரானார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் நெருக்கமாக இருப்பது போல, அவரிடம் இருந்து சிஎஸ்சிக்காக பணிபுரிந்தேன்.
பல நடுத்தர இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கியுள்ளார். ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் படிக்கிறார்கள் என்றால், அந்த பெருமை த.அய்யம்பெருமாளுக்கே உண்டு. உடல்நலத்தை பேணுவதில் அதிக அக்கறை எடுப்பவர். பலருக்கும் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்குபவர். அனைவரும் சுலபமாக இந்த கோடீசுவரரை சந்திக்க முடியும். என்னை அடிக்கடி குடும்பத்தோடு வீட்டிற்கு வர சொல்வார். ஆனால் அவரின் மரணத்திற்கு தான் நான் குடும்பத்தோடு செல்ல முடிந்தது.
இயற்கையை யார் வெல்ல முடியும். செல்வத்தால் மரணத்தை வெல்ல முடியவில்லையே. 2011ல் ஸ்டீவ் ஜாப்ஸ், த.அய்யம்பெருமாள் மரணத்தை இவ்வுலகே ஏற்றுக்கொள்ளாது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனாக அனைவருடைய கைகளிலும் உள்ளார். த.அய்யம்பெருமாள் என் குடும்பத்தின் அனைவருடைய மனதிலும் உயிருடன் உள்ளார். அமரர் திரு.த.அய்யம்பெருமாள் மறைந்ததாக நான் நினைக்கவில்லை.
( இந்த வலைப்பக்கத்தை படித்து விட்டு எழுத்தாளர்.மு.சிவலிங்கம் சி மொழியை கண்டுபிடித்த ரிச்சியை ஏன் குறிப்படவில்லை என கேட்டார். இந்த வலைப்பக்கத்தை பொறுத்த வரை பொருளாதார அளவில் வெற்றி பெற்ற, இவர்களை இழந்துள்ளோம் )
திரு ஐயம்பெருமாள் மறைந்ததை இச்செய்தி மூலம்தான் அறிய வருகின்றேன். கடுமையான உழைப்பாளி. அவரது கணிணிப்பயிற்சிப்
ReplyDeleteபணிகள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான
அடித்தளங்களே. மறைந்தும் மறையாமல் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு அஞ்சலிகள்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
குறைந்த கட்டணத்தில் தரமான கணினி பயிற்சியை சாமன்யரும் பெறும்வகையில் வழங்கி போற்றுதலுக்குரிய பணி செய்த அய்யம் பெருமாள் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.
ReplyDeleteதிரு. அய்யம் பெருமாள் ஐயா இறைத் தன்மை எய்தியது இப்பதிவைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். CSC 10, +2 மாணவர்களுக்கு வழங்கிய இலவச பாடப் புத்தகம் மூலம் பயன்பெற்ற இலட்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete