Search This Blog

Monday, September 26, 2011

சென்னை எலியட்ஸ் பீச்சின் அவலநிலை

சென்னையின் கடற்கரைகளில் மெரினா பீச்சை விட அழகும், சுகமும் உடையது பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச்சாகும்.1995 ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், என் வீட்டிலிருந்து 30 km டூவீலர் ஓட்டிச் சென்று சுகமான காற்றை அனுபவித்து வருவேன். சந்தனக்காற்றே, செந்தமிழ் ஊற்றே, சந்தோஷ பாட்டே வாவா!! என பாடிவிட்டுவருவேன். கடின உழைப்பின் நடுவே பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச்சின் தென்றல் சுகத்தை அளிக்கும். மெரினாவை விட்டுவிட்டு எலியட்ஸ் பீச்சிற்கு ஏன் சென்றேன் என நினைக்கலாம். முக்கியமாக எலியட்ஸ் பீச் தூய்மையாக இருக்கும். வெண்மையான மணற்பரப்பு. எந்த மாசும், நாற்றமும் இருக்காது. காதலர்கூட்டமும் குறைவாக இருக்கும். விளையாடுபவர்கள் இருக்கமாட்டார்கள். படித்தவர்கள் கூட்டம் எலியட்ஸ் பீச்சிற்கு உண்டு என்ற சிறு முத்திரை கூட இருக்கும். நேரம் கிடைத்தால் வேளாங்கன்னி மாதாகோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு விசிட் செய்யலாம். இரவு மென்மையும் சுகத்துடன் இல்லம் திரும்புவேன்.

இன்றோ எலியட்ஸ் பீச்சும் மெரினாவைப் போல தலைகீழாக உள்ளது. ஒரே குப்பை கூளங்களும், கடைகளாகவுள்ளது. நாம் மணலில் எங்கு அமர்வதென தெரியாத அளவிற்கு கடைகள் குவிந்துள்ளன. அப்பளம், பாப்கார்ன், கூல் ட்ரிங்ஸ், பொரித்த மீன் கடை, மிளகா பஜ்ஜி, காலிப்ளவர் பக்கோடா, பலூன், பொம்மை கடைகள், ஜஸ்வண்டி, சுண்டல், வேர்க்கடலை என கடைகள் குவிந்து எரிச்சலூட்ட வைத்துள்ளது. இது தவிரை பத்திற்கும் மேற்பட்ட ராட்டினம், கிளி ஜோஷியம், குறி, கழைக்கூத்து, துப்பாக்கி சுடுதல் என அடர்த்தியான வணிகர்களால் மனம் வேதனைப்பட்டது. இது அனைத்தும் இப்போது வந்த மாற்றமே.இது தவிர வாகன பார்க்கிங் தட்டுப்பாடும் பெரிய அளவில் உள்ளது. கடைகளையும், வணிகர்களையும், குப்பைகளையும் அகற்ற அப்பகுதி சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்யவேண்டும்.



Monday, September 19, 2011

தமிழ் ஆவண மற்றும் குறும்படங்கள்


என்னுடைய சாப்ட்வியூ விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் தமிழில் தயாரித்த ஆவண மற்றும் குறும்படங்கள் லிங்ஸ் பட்டியலை உங்களுக்காக அளிக்கிறேன்.

கற்பகத்தரு

http://www.youtube.com/watch?v=VpYHQ7AcwxA


ஸ்பாஸ்டிக் பாகம் 1

http://www.youtube.com/watch?v=bq23w4_Sz_o


ஸ்பாஸ்டிக் பாகம் 2

http://www.youtube.com/watch?v=tQCPHC0I2pg


தெய்வம்

http://www.youtube.com/watch?v=Mw5MClouu58


1999

http://www.youtube.com/watch?v=u-cu9gME8cQ


இரவு சூரியன்

http://www.youtube.com/watch?


மார்னிங் மெலோடிஸ் பாகம் 1

http://www.youtube.com/watch?v=4ZjmJWYp0GY


மார்னிங் மெலோடிஸ் பாகம் 2

http://www.youtube.com/watch?v=77MYUTSjWVA


நவம்பர் 10 பாகம் 1

http://www.youtube.com/watch?v=Zi4OFNYrM98


நவம்பர் 10 பாகம் 2

http://www.youtube.com/watch?v=ADbix5jTyCQ


நல்ல காலம் பொறக்குது

http://www.youtube.com/watch?v=RJuQeb9Zm_0



விடியல் பாகம் 1

http://www.youtube.com/watch?v=vIt0LJ5w--o


விடியல் பாகம் 2

http://www.youtube.com/watch?v=mfQBMVwX_v4

v=c1t_JVy4cjo


Sunday, September 18, 2011

How to make revenue through Blogs?


எங்கள் கணித்தமிழ்ச்சங்கம் தமிழ்மென்பொருள் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பாக இயங்கிவருகிறது. கணினித்தமிழ் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் தமிழகத்தில் அச்சாணியாக கணித்தமிழ் சங்கம் உள்ளது. கணித்தமிழ்ச்சங்கத்தின் இம்மாதக்கூட்டத்தில் வலைப்பூக்களை உருவாக்குதல், பரப்புதல், பொருளாதார ரீதியாக வெற்றி பெற செய்தல் ஆகிய தலைப்பில் கிழக்கு பதிப்பகத்தின் நிர்வாகி முனைவர்.பத்ரி ஷேஸாத்திரி அவர்களை உரையாற்ற அழைத்திருந்தோம். டாக்டர். பத்ரி ஷேஸாத்திரி அவர்கள் வலைப்பதிவு மூலமாக எவ்வாறு வருமானம் ஈட்டுவது என்ற அருமையான உரையாற்றினார். உங்களுக்காக அதன் PPT கோப்பை இணைத்துள்ளேன். http://kanithamizh.in/tech.htm

Tuesday, September 13, 2011

மாலைமலர் லேப்டாப் சிறப்பு மலர் - 13th SEPT



தமிழக அரசு வரும் 15ந்தேதி முதல் சுமார் 9,75,000 லேப்டாப்களை தவணை முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது. இதைப்போற்றும் வகையில் தினந்தந்தி நாளிதழ் குழுமத்திலிருந்து வெளியாகும், மாலைமலர் நாளிதழ் லேப்டாப் சிறப்பு மலரை பிரசுரித்து இலவச இணைப்பாக அளித்துள்ளது. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நாளிதழ் வாங்குவோருக்கு இந்த இலவச இதழ் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச மலரை 25 நாட்கள் நான் தொகுத்து அளித்து முடித்துக்கொடுத்தேன். இன்று பிரசுரமாகி கையில் கிடைத்தவுடன் தான், எனக்கே ஆச்சரியம். இவ்வளவு வேலை பளுவுக்கு இடையே நான் எப்படி படைத்தேன் என்று...? கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர் என்பர், அது போல தகவல் தொழில்நுட்ப அறிவை கிராமந்தோறும் இவ்வரசு செய்ததேன வரலாறு சொல்லும். லேப்டாப், பாதுகாப்பு, இணையம், ஈமெயில், வைரஸ், அரசு இணைய முகவரிகள், வீடியோ கன்பரன்சிங், இணைய சேவைகள் மற்றும் பயன்கள், தமிழ் மென்பொருட்கள் என பல அத்தியாயங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன. இலவசமாக அளித்தாலும் இம்மலர் அழகிய லேஅவுட்டு மற்றும் உயர்தர காகிதம் ஆகிய மதிப்புடன் திகழ்கிறது. ஒவ்வொரு கணினி அடிப்படை வேண்டுவோருக்கும் இம்மலர் அறிவு மலராக இருக்கும். இன்றைய மாலைமலரின் விலை.ரூ.4/= மட்டுமே.

Monday, September 12, 2011

தமிழே ஆயுதம்: காசிஆனந்தன்


அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கூட்டம் சனிக்கிழமை உட்லட்ண்ஸ் ஒட்டலில் நடைபெற்றது. நடராசன்.இஆப, விக்கிரமன், காசிஆனந்தன், மணா, ஒவியர் அரசு மற்றும் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். பார்வையாளராக வந்த காசி ஆனந்தனை, நடராசன் அவர்கள் மேடையில் அமரக்கோரினார். காசி ஆனந்தன் அவர்கள் 5 நிமிடம் பேசியபோது அறையே அமைதி காத்தது. தன்னுடைய எழுத்துப்பணிக்கு கலைமாமணி விக்கிரமன் அவர்களும் ஒரு வழிகாட்டியாக இருந்ததாக தெரிவித்தார். பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் சஞ்சீவி, வையாபுரிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றப்பெருமை தமக்கு உண்டென கூறினார். இவர்கள் ஆசிரியராக இருந்தமையே என் எழுத்துப்பணிக்கு சீரிய பலம் கிடைத்ததாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் கற்ற தமிழை ஈழப்போருக்கும், பிரச்சனைகளுக்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக கூறினார். கற்ற மொழி, என் தொப்புள்கொடி மக்களுக்கு ஆயுதமாக உதவி பெறுவது தமிழுக்கும், தமிழகத்திற்கும், என் ஆசிரியர்களுக்கும் பெருமை என்று கூறினார். மேடையில் பேசிய அனைத்து பேச்சாளர்களும் காசிஆனந்தன் இந்த கூட்டத்திற்கு வந்ததே, இக்கூட்டத்திற்கு பெருமை என்று தெரிவித்தனர். எழுத்தாளர் விக்கிரமனின் மருத்துவ செலவிற்காக நடராசன் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவினார்.

Monday, September 5, 2011

சாஃப்ட்வியூ குறும்படங்கள் வெளியீடு


என்னுடைய ஓராண்டு விசுவல் கம்யூனிகேசன் படிப்பை பயிலும் மாணவ, மாணவியருக்கு மீடியாவில் பணிபுரிய அனைத்து தொழில்நுட்பமும் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு படித்த மாணவ, மாணவியர் குறும்படங்களை இயக்கியிருந்தனர்.

உடலாலும், மனத்தாலும் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக இருக்கும் மனிதர்களை காக்க வேண்டும். மனிதாபிமானத்துடன் அவர்கள் வாழ் வழி செய்ய வேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்தும் “ஸ்பாஸ்டிக்” எனும் குறும்படத்தை மாணவி கே.எச்.நிம்மி இயக்கியிருந்தார். இந்த ”ஸ்பாஸ்டிக்” குறும்படத்தை பாடகி சுதா ரகுநாதன் வெளியிட்டார்.

தமிழர்களின் வாழ்வில் முக்கிய மரமாக திகழ்கிறது பனைமரம், வாழ்வாதார பங்கு கொண்ட பனைமரம் வளர்க்கப்பட வேண்டும் காக்க வேண்டும். தமிழறிஞர்கள் பனைமரத்தை “கற்பகத்தரு” என அழைக்கின்றனர். அதையே பெயராக வைத்து “கற்பகத்தரு” என்ற குறும்படத்தை மாணவர் பி.சதீஷ்குமார் இயக்கியிருந்தார். இந்த ”கற்பகத்தரு” குறும்படத்தை நடிகை சிம்ரன் வெளியிட்டார்.


வல்லமை இணையத்தில் வந்த செய்தி


Friday, September 2, 2011

விநாயக சதுர்த்தி முதல்....


தமிழ்சினிமா.காம் இணையதளம் 1997 முதல் 14 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. செய்திகள், பேட்டிகள், புகைப்படங்கள், ஒலிஒளி காட்சிகளென தினம்தோறும் தன் சேவையை இவ்விணையம் செய்து வருகிறது. முதல்முறையாக அதிகாரபூர்வ தமிழ்திரைப்பங்கள் செப்டம்பர் 1ந்தேதி முதல் இவ்விணையத்தில் ஒளிபரப்பப்படுகிறது. யூ டயுப் வீடீயோ மற்றும் திருட்டு வீடியோ போலின்றி தரத்துடன் (original print) ஒளிபரப்பு உரிமைபெற்ற திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம். நம் வீட்டில் உள்ள இணைய வேகத்திற்கு ஏற்றபடியும் பைல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விநாயகர்சதுர்த்தி முதல் துவக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பச்சேவை வெற்றி பெற ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். முதல் திரைப்படமாக "ஆண்மை தவறேல்" திரைப்படம் (கட்டணம் 2USD) திரையிடப்பட்டுள்ளது. இச்சேவையை அயல்நாட்டிலுள்ள உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்கலாமே?