Search This Blog

Monday, October 31, 2011

தீபாவளி திரைப்பட விமர்சனங்கள்



7 ஆம் அறிவு

விமர்சனம்
http://www.tamilcinema.com/CINENEWS/review/2011/7amarivu.asp


நிழற்படகேலரி
http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/movies2011/7amarivu01/photosxml.aspx


வேலாயுதம்

விமர்சனம்
http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2011/raone.asp

நிழற்படகேலரி
http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/movies2011/velayutham/photosxml.aspx


ரா ஒன் - விமர்சனம்

http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2011/raone.asp

Saturday, October 29, 2011

தமிழ்நாடு மீடியா கிளப் - துவக்க விழா



Friday, October 28, 2011

புதுக்கோட்டை ஸ்பெஷல்


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு. கோயில், பலகாரம், பொருட்கள் என கூறிக்கொண்டே போகலாம். ஆனால் புதுக் கோட்டையை பொறுத்த அளவில் என்னை கவர்ந்தது 'ஞானாலயா' நூலகமே. புதுக்கோட்டையில் நுழைந்தவுடன் திருக்கோகர்ணம் என்ற புறநகர் ஊரின், பழனியப்பா நகரில் 'ஞானாலயா' நூலகம் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். இலட்சித்திற்கும் அதிகமான பழமையான நூல்கள் இங்கு உள்ளது. திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் துணைவியாருட்ன் தன் சொத்தைப்போல இந்நூலகத்தை பாதுகாத்து வருகிறார். தம்பதிகள் பழகுவதற்கு மிகவும் இனிமயானவர்கள். அரிய நூல்களாக காந்தியடிகள், பாரதிதாசன், பாரதியார், உவேசா ஆகியோரின் படைப்புகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட நூல்களும் உள்ளன. ஆய்வு செய்வோரும், அயல்நாட்டினரும் இந்நூலகத்திற்கு கண்டிப்பாக விஜயம் செய்கிறார்கள். இந்த வருடம் ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் இந்நூலகத்தைப்பற்றி கட்டுரை வெளியானதை கண்டு மகிழ்ந்தேன். வாசகர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து படிக்கவும். http://www.softview.in//antopeter/g.pdf தமிழ் மரபு அறக்கட்டைளையின் சார்பாக நானும் இந்நூலகத்திற்கு சென்றுள்ளேன். முகவரி: 6. பழனியப்பா நகர்,திருக்கோகர்ணம் அஞ்சல் நிலையம், புதுங்ககோட்டை-2 தொலைபேசி: 0432-2221059

Tuesday, October 25, 2011

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் செல்போன் எண்கள்



உள்ளாட்சி தேர்தல்கள் பாமர மக்களின் எதிர்பார்ப்போடு முடிந்துள்ளன. ஓட்டு போட்டவுடன் போட்டி வேட்பாளரை மறந்து விடுவோம். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் வேட்பாளர் கூறிய அறிவிப்பு களை மறந்து விடுவோம். அடுத்த மாதம் நம் வார்டு எண்ணையே மறந்து விடுவோம். நண்பர்களுக்காக நம் சென்ணை வார்ட்டின் அனைத்து கவுன்சிலர்களின் எண்ணையும் தொகுத்துள்ளேன். உங்கள் வார்டு கவுன்சிலரின் செல்போன் எண்ணை உங்கள் செல்போனில் இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள். நம் பகுதியில் குறையிருந்தால் பேசலாமே? Click and View: goo.gl/pdzsp


சென்னை மேயர் சைதைதுரைசாமியின் தொடர்பு தகவல்கள்

நெ.28. முதல் பிரதான சாலை, சிஐடி நகர்
சென்னை-35
தொலைபேசி : 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095

Friday, October 21, 2011

சென்னை மேயர் தேர்தல் கருத்துகணிப்பு: சைதை துரைசாமி


தேர்தல் கருத்துகணிப்பு: சைதை துரைசாமியா ? மா.சுப்பிரமணியனா ?


சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சாப்ட்வியூ ஊடக கல்லூரி இதழியல் சார்ந்த காட்சி ஊடக படிப்பினை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்த ஊடக கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசியல் மற்றும் சமூகம் குறித்த ஆய்வுகளையும் கருத்து கணிப்பையும் அரையாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறேன். இந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கான கருத்து கணிப்பை என் கல்லூரி மாணவர்கள் செய்தார்கள்.

சைதை துரைசாமியா ? மா.சுப்பிரமணியனா ? எனும் கேள்விக்கு விடை காண 35 மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் கருத்து கணிப்பு தரவுகள் அக்டோபர் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் ஆய்வுகளை நடத்தினர். ஆனால் தேர்தல் கருத்துக்கணிப்பு தேர்தல் ஆணையம் 19ந்தேதி வரை தடைவிதித்திருந்தது.

கருத்துக்கணிப்பின் முடிவில்

தமிழக அரசியல் தலைவராக ஜெயலலிதாவை 60% மக்கள் அனைவரும் ஆணித்தரமாக தெரிவித்தனர். ஆளுங்கட்சிக்கு நற்பெயரும், இலவச திட்டங்களுக்கு மதிப்பும் பொதுமக்களிடையே பரவியுள்ளது.
சென்னை மேயரின் (மா.சுப்பிரமணியன்) சாதனைகளை பெரும்பாலோர் பாராட்டுகின்றனர். ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் நன்மை என்பதாலேயே அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளதாக 45.8% மக்கள் தெரிவித்தனர். மேயர் மா.சுப்பிரமணியனை சுலபமாக அணுக முடியும் . புதிய மேயரை சுலபாக அணுக முடியுமா ? என்ற மனக்குறையும் மக்களிடம் உள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய மண்டலங்கள் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வார்டு உறுப்பினர்கள் சுமார் 165 பேர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர் என்றும் ஆய்வில் தெரிந்தது.

Tuesday, October 18, 2011

Patience pays for BlackBerry users

BlackBerry maker Research In Motion will offer free mobile applications worth over $100 as well as technical support to every enterprise customer as a token of appreciation for subscribers' “patience” during its service disruptions last week.\

(The Hindu, Chennai Edition)

Sunday, October 16, 2011

பிளாக்பெர்ரி: Blackberry or Bad Berry


பிளாக்பெர்ரியின் மீது காதலால் பிளாக்பெர்ரி போல்ட் செல்பேசியை ரூ.27000த்திற்கு வாங்கினேன். பிளாக்பெர்ரி போன் பயன்படுத்துகிறவர்கள் இமெயில், இண்டர்நெட் போன்ற பல்வேறு ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த வாரம் மூன்று நாட்கள் பிளாக்பெர்ரி சேவைகள் துண்டிக்கப்பட்டன. மின்னஞ்சலை பார்க்கமுடியாத சூழல் ஏற்பட்டது. ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் திங்கட்கிழமையில் இருந்து பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களுக்கு இமெயில், மெசஞ்சர் மற்றும் இதர ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. பிறகு மீண்டும் இருநாட்களாக வேலைசெய்கிறதே என்று இருந்தேன். ஆனால் இன்று முதல் மீண்டும் வேலைசெய்யவில்லை. ஏற்கனவே இந்தியாவில் தடைசெய்யவுள்ளதாக அறிவிப்புகள் வரும் சூழலில் அதன் சேவையும் சரிவர இல்லை. தகவல்தொழில்நுட்ப பிரச்னைக்காக அந்நிறுவனம் வருத்தமோ, கவலையோ, அறிவிப்போ தெரிவிப்பதில்லை. பிளாக்பெர்ரியில் யுனிகோட் (தமிழ்) வேலை செய்வதும் இன்று வரை சரிசெய்யப்படவில்லை. அந்நிறுவனம் யுனிகோட்டை ஆன்லைனில் சுலபமாக செயல்படுத்த வேண்டிய பணியையும் பொறுக்கமுடியவில்லை. பிளாக்பெர்ரி பெயரை பேட்பெர்ரி என்று மாற்றுவது நல்லது.

Saturday, October 15, 2011

சி மொழியின் தந்தை டென்னிஸ் ரிச்சி மரணம்


சி மொழியின் தந்தை டென்னிஸ் ரிச்சி மரணம்

1988 ஆம் ஆண்டு, என் கல்லூரி படிப்பை முடிக்கும் இறுதி செமஸ்டரில் சி மொழி தமிழகத்தில் அறிமுகமானது. அப்போது சி மொழிக்கு ஆசிரியர்களோ, புத்தகங்களோ கிடையாது. நான் தட்டிதடவி சி மொழியை நன்கு படித்து முதல்வகுப்பில் தேர்வானேன். 1995களில் சி மொழிக்கு பெரிய டிமாண்ட் உருவாகியது. பிறகு சி யின் அடிப்படையிலேயே அனைத்து புரோகிராமிங் மொழிகளும் உருவாக்கப்பட்டன. சி படித்தாலே புரோகிராமிங் மொழி தெரியுமென்ற நிலை உருவாகியுள்ளது. நான் எந்த கட்டுரை எழுதினாலும், கூட்டங்களில் உரையாற்றினாலும் மாணவர்களை சி மொழி கண்டிப்பாக படிக்கக் கூறி வலியுறுத்துவேன். இந்த சி மொழியை கண்டுபிடித்த டென்னிஸ் ரிச்சி OCT 12 ஆம் தேதி நிறுஜெர்ஸியில் காலமானார். வயது 70. மேலும் தனிமையில் இறந்துள்ளார். இச்செய்தியை அறிந்தவுடன் மனவேதனை அடைந்தேன். இவர் யுனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தையும் உருவாக்க உதவி செய்தவர். கூகுளின் என்ஜின் தயாரிப்பு அடிப்படைகளுக்கு ஆலோசனை அளித்துள்ளார். டென்னிஸ் ரிச்சியால் தானே உலகமே கணினி புரோகிராமிங் மொழி வேலைவாய்ப்பு பெற்றுள்ளது, என்பதை நாம் மறக்ககூடாது.

Sunday, October 9, 2011

வீரமாமுனிவர்


தமிழ்மேதைகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் கிறித்துவ மதகுரு வீரமாமுனிவர். தமிழில் தேம்பாவனியை படைத்தவர். வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மங்கலம்பேட்டை என்ற சிற்றூரின் அருகிலுள்ள (5.8 கிமீ தூரத்தில்) கோணங்குப்பம் என்ற தாழ்த்தப்பட்ட கிரமாத்தில் (காடு) பெரியநாயகி மாதா கோவிலில் உள்ளது. (படத்தில் காண்க) வீரமாமுனிவர் இத்தாலி நாட்டின் வெனிசுலாவில் 1680 ஆம்ஆண்டு பிறந்தார். தமிழகத்திற்கு வந்த அவர் தமிழ்கலாச்சரத்திற்கு ரசிகனாகி தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் கற்றுள்ளார். மேரிமாதாவை தமிழ்பெண்ணாக வடிவமைத்து பிலிப்பைன்ஸில் சிலையை வடிவமைத்துள்ளார். இது அழகான முகபாவம் கொண்ட சிற்பமாகும். கிறித்துவ கோயில்களில் மாதாவிற்கு சேலை உடுத்துவதும், சேலையை காணிக்கையாக அளிப்பதும் இந்த பெரியநாயகி மாதா திருத்தலத்தில் தான். (மாதா காதில் ஜிமிக்கியும் உண்டு)

250 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி காடாக இருந்துள்ளது. ஓநாய்களும், நரிகளும், காட்டுப்பன்றி வாழ்ந்த இடமாகும். வீரமாமுனிவர் இரு மாதாசிற்பங்களுடன் இந்த காட்டிற்கு வந்துள்ளார். அவர் காட்டில் உறங்கும் போது சிறுவர்கள் ஒரு சிலையை மண்ணில் புதைத்து ஒளித்துவிட்டார்கள். சிலை தொலைந்து விட்டதை அறிந்த வீரமாமுனிவர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மிகவும் மனக்கவலையுடன் நொந்து அக்காட்டைவிட்டு தஞ்சை சென்றுள்ளார். தஞ்சை சென்ற அவர் ஏலக்குறிச்சியில் ஒரு கோயிலைக்கட்டி தன்னிடம் இருந்த மற்றொரு சிலையை நிறுவியுள்ளார். பல ஆண்டுகள் கழித்து கோணங்குப்பம் வந்த அவர் இப்பகுதியின் குறுநிலமன்னரை சந்தித்துள்ளார். குழந்தைபேறு இல்லாத இக்குறுநில மன்னர் தனக்கு குழந்தை வரம் வேண்டி வீரமாமுனிவரிடம் முறையிட்டுள்ளார். வீரமாமுனிவரின் அருளாலும், பிராத்தனையாலும் அக்குறுநிலமன்னருக்கு குழந்தை பேறுகிடைத்தது. அதற்கு கைமாறாக வீரமாமுனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க கோணங்குப்பத்தில் அச்செல்வந்தர் பெரியநாயகி திருத்தலத்தை கட்டியுள்ளார். அத்திருத்தல வாயிலில் வீரமாமுனிவருக்கு ஆள் உயர சிலை பராமரிப்பு இல்லாமல் உள்ளமை எனக்கு கவலையாக இருந்தது. விஜயதசமி விடுமுறையில் என்னை மெய்சிலிர்க்க வைத்த தமிழ் திருத்தலம் ஆகும்.

நவம்பர் 8 : வீரமாமுனிவர் நினைவுதினம் ( என் தந்தை மறந்த தினம் )

கூடுதல் தகவல்கள்: http://en.wikipedia.org/wiki/Konankuppam

வீரமாமுனிவர்

தமிழ்மேதைகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் கிறித்துவ மதகுரு வீரமாமுனிவர். தமிழில் தேம்பாவனியை படைத்தவர். வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மங்கலம்பேட்டை என்ற சிற்றூரின் அருகிலுள்ள (5.8 கிமீ தூரத்தில்) கோணங்குப்பம் என்ற தாழ்த்தப்பட்ட கிரமாத்தில் (காடு) பெரியநாயகி மாதா கோவிலில் உள்ளது. (படத்தில் காண்க) வீரமாமுனிவர் இத்தாலி நாட்டின் வெனிசுலாவில் 1680 ஆம்ஆண்டு பிறந்தார். தமிழகத்திற்கு வந்த அவர் தமிழ்கலாச்சரத்திற்கு ரசிகனாகி தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் கற்றுள்ளார். மேரிமாதாவை தமிழ்பெண்ணாக வடிவமைத்து பிலிப்பைன்ஸில் சிலையை வடிவமைத்துள்ளார். இது அழகான முகபாவம் கொண்ட சிற்பமாகும். கிறித்துவ கோயில்களில் மாதாவிற்கு சேலை உடுத்துவதும், சேலையை காணிக்ககையாக அளிப்பதும் இந்த பெரியநாயகி மாதா திருத்தலத்தில் தான்.

250 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி காடாக இருந்துள்ளது. ஓநாய்களும், நரிகளும், காட்டுப்பன்றி வாழ்ந்த இடமாகும். வீரமாமுனிவர் இரு மாதாசிற்பங்களுடன் இந்த காட்டிற்கு வந்துள்ளார். அவர் காட்டில் உறங்கும் போது சிறுவர்கள் ஒரு சிலையை மண்ணில் புதைத்து ஒளித்துவிட்டார்கள். சிலை தொலைந்து விட்டதை அறிந்த வீரமாமுனிவர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மிகவும் மனக்கவலையுடன் நொந்து அக்காட்டைவிட்டு தஞ்சை சென்றுள்ளார். தஞ்சை சென்ற அவர் ஏலக்குறிச்சியில் ஒரு கோயிலைக்கட்டி தன்னிடம் இருந்த மற்றொரு சிலையை நிறுவியுள்ளார். பல ஆண்டுகள் கழித்து கோணங்குப்பம் வந்த அவர் இப்பகுதியின் குறுநிலமன்னரை சந்தித்துள்ளார். குழந்தைபேறு இல்லாத இக்குறுநில மன்னர் தனக்கு குழந்தை வரம் வேண்டி வீரமாமுனிவரிடம் முறையிட்டுள்ளார். வீரமாமுனிவரின் அருளாலும், பிராத்தனையாலும் அக்குறுநிலமன்னருக்கு குழந்தை பேறுகிடைத்தது. அதற்கு கைமாறாக வீரமாமுனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க கோணங்குப்பத்தில் அச்செல்வந்தர் பெரியநாயகி திருத்தலத்தை கட்டியுள்ளார். அத்திருத்தல வாயிலில் வீரமாமுனிவருக்கு ஆள் உயர சிலை பராமரிப்பு இல்லாமல் உள்ளமை எனக்கு கவலையாக இருந்தது. விஜயதசமி விடுமுறையில் என்னை மெய்சிலிர்க்க வைத்த தமிழ் திருத்தலம் ஆகும்.