Search This Blog

Sunday, October 16, 2011

பிளாக்பெர்ரி: Blackberry or Bad Berry


பிளாக்பெர்ரியின் மீது காதலால் பிளாக்பெர்ரி போல்ட் செல்பேசியை ரூ.27000த்திற்கு வாங்கினேன். பிளாக்பெர்ரி போன் பயன்படுத்துகிறவர்கள் இமெயில், இண்டர்நெட் போன்ற பல்வேறு ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த வாரம் மூன்று நாட்கள் பிளாக்பெர்ரி சேவைகள் துண்டிக்கப்பட்டன. மின்னஞ்சலை பார்க்கமுடியாத சூழல் ஏற்பட்டது. ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் திங்கட்கிழமையில் இருந்து பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களுக்கு இமெயில், மெசஞ்சர் மற்றும் இதர ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. பிறகு மீண்டும் இருநாட்களாக வேலைசெய்கிறதே என்று இருந்தேன். ஆனால் இன்று முதல் மீண்டும் வேலைசெய்யவில்லை. ஏற்கனவே இந்தியாவில் தடைசெய்யவுள்ளதாக அறிவிப்புகள் வரும் சூழலில் அதன் சேவையும் சரிவர இல்லை. தகவல்தொழில்நுட்ப பிரச்னைக்காக அந்நிறுவனம் வருத்தமோ, கவலையோ, அறிவிப்போ தெரிவிப்பதில்லை. பிளாக்பெர்ரியில் யுனிகோட் (தமிழ்) வேலை செய்வதும் இன்று வரை சரிசெய்யப்படவில்லை. அந்நிறுவனம் யுனிகோட்டை ஆன்லைனில் சுலபமாக செயல்படுத்த வேண்டிய பணியையும் பொறுக்கமுடியவில்லை. பிளாக்பெர்ரி பெயரை பேட்பெர்ரி என்று மாற்றுவது நல்லது.

No comments:

Post a Comment