Search This Blog

Friday, April 29, 2011

தூத்துக்குடியில் புத்தகக்கண்காட்சி


தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது. தூத்துக்குடியில் புத்தகக்கண்காட்சி இன்று துவங்கி மே 8ந்தேதி வரை நடைபெறும். கண்காட்சி பாஸ்கர் கல்யாண மண்டபத்தில் (சார்லஸ் தியேட்டர் அருகில்) நடைபெறுகிறது.

என்னுடைய சாப்ட்வியூ நிறுவனத்தின்(www.softview.in) கடை எண்: 13. தூத்துக்குடி நண்பர்கள் என் கடைக்கு குடும்பத்தோடு விஜயம் செய்யவும். என்னுடைய கடையில் திரு.சாமிக்கண்ணன் (9840078699) என்ற ஊழியர் விளக்கம் அளிப்பார்.

Wednesday, April 27, 2011

சித்திரை புகைப்பட கண்காட்சி


சித்திரை புகைப்பட கண்காட்சி
http://www.softview.in/Chithirai_Photo_Expo.jpg

Thursday, April 14, 2011

மீண்டும் 'கணையாழி'


கணையாழி கலை, இலக்கிய இதழின் துவக்க விழா சித்திரை முதல் நாள் சென்னை தி.நகரிலுள்ள வாணி மகாலில் நடைபெற்றது. (14.4.2011) தமிழக தேர்தலின் கூச்சல், பரபரப்பு முடிந்த கையோடு ஆரோக்கியமான தமிழ் விழா என "மீண்டும் கணையாழி" விழாவை குறிப்பிடலாம். விழா அரங்கு முழுமையும் தமிழ் நெஞ்சங்களாக காட்சியளித்தனர். கஸ்தூரிரங்கன் நிறுவிய கணையாழியின் புதிய ஆசிரியர்க்குழுவில் மா.ராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு.ராமசாமி, ட்ராட்ஸ்கி மருது, கி.நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினிட்ரெம்மல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விழாவில் ஜெயகாந்தன், நாசர், இந்திரா பார்த்தசாரதி, ஈரோடு தமிழன்பன், முத்துக்குமார், ட்ராட்ஸ்கி மருது, ஞாநி, நரசைய்யா, ஜெயதேவன், குட்டிரேவதி மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். கணையாழி விழாவை மா.ராசேந்திரனின் மகள் தென்றல் தொகுத்து வழங்கினார். கணையாழி முதல் இதழை வாங்கவும், சந்தா கட்டணம் கட்டவும் கூட்டம் அலை மோதியது.

கணையாழி ஒரு பத்திரிகையல்ல, அது ஒரு இயக்கம். இந்த இலக்கிய இயக்கத்தில் பங்கேற்க அனைவருக்கும் ஒர் நல்வாய்ப்பு.

பதவி, அதிகாரம், அரசியல் தொடர்புகள் ராசேந்திரனுக்கு இருந்தாலும், அதை சுவைக்காமல் தமிழை சுவைக்கிறார். பாம்பு அதன் சட்டையை உரித்து உதறுவதுபோல் அனைத்தையும் உதறிவிட்டு ராசேந்திரன் கணையாழியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். மனிதன் தனக்கு விருப்பமானதை தானே செய்ய முடியும். கணையாழி இப்பரந்த தமிழ் உலகில் வெற்றி பெற வாழ்த்துகள்.

Friday, April 1, 2011

உலகத் தமிழனின் மக்கள் தொகை 11 கோடிக்கு மேல்


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.

இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7 வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001 ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011 ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது. எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011 ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் 7.25 கோடி உள்ளதென்றால், தமிழகத்திற்கு வெளியே 4 கோடி தமிழன் இருக்கமாட்டானா? சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் வளைகுடாநாடுகளில் பெரும்பான்மை தமிழர்களே வாழ்கின்றனர். ஈழத்தமிழன் உலகெல்லாம் படர்ந்து விரிந்து கிடக்கிறான். ஆகையால் உலகிலுள்ள தமிழனில் மக்கள் தொகை என்னவென்றால் 11 கோடி என்று குறிப்பிடுங்கள். மேடைப்பேச்சாளர்கள் எப்போதும் தமிழன் 8 கோடி பேர் உள்ளதாகவே குறிப்பிடுகிறார்கள். அது தவறு? இனி தரணியெங்கும் தோராயமாக 11 கோடிக்கு மேல் தமிழன் உள்ளதாக குறிப்பிடுங்கள்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாளர் சந்திரமௌலி தமிழர் என்பது குயிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப முன்னாள் செயலாளர் என்பது குறிப்படத்தக்கது. கணித்தமிழ்ச்சங்கத்திற்கு துணையாக நின்றவர். தற்போது அரசுப்பணிக்காக புதுதில்லியில் குடியேறியுள்ளார்.

தமிழ் மரபு அறக்கட்டளை விழா


தமிழ் மரபு அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு விழா சென்னையிலுள்ள மீனாட்சி பவன் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். திருமதி.சீதாலட்சுமிக்கும், பத்மாவதிக்கும் பாராட்டு செய்யப்பட்டது. அருமையான மூன்று சொற்பொழிவுகளை திரு.ராமச்சந்திரன், திரு.ராஜவேலு, திரு.செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஜெர்மனி சுபாஷினிட்ரெம்மல் விளக்கினார். தமிழ் மரபு அறக்கட்டளையின் வருங்கால திட்டங்களை நான் பட்டியலிட்டு விளக்கினேன். தினமணியில் தமிழ் மரபுப்பணி குறித்த தேவைகளும், விழா சிறப்பு குறித்தும் அருமையான கட்டுரைச்செய்தி வெளியானது.