Search This Blog

Monday, July 26, 2010

உ.வே.சா நூலக இணையம்


தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் உ.வே. சாமிநாத ஐயர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (ஏப்ரல், 1942) தமிழ் உயர்ந்து நின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு. அவர்கள் 1887-ஆம் ஆண்டில் சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார்கள். அது முதல் இறுதிக் காலம்வரையில் தமிழ்த் தாயின் அணிகளை ஒவ்வொன்றாகப் புதுப்பிக்கும் அற்புதமான தொண்டில் தம் காலம் முழுவதையும் அவர்கள் செலவிட்டார்.அவருடைய படைப்புகள் அனைத்தும் சென்னை பெசன்ட்நகரில் உள்ள நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. உ.வே.சா தகவல் பெற இணையம் http://www.uvesalibrary.org

Friday, July 23, 2010

தமிழ் வளர்ச்சிக்கழக இணையம்

தமிழில் களஞ்சியங்கள் மற்றும் நூல்களை அறிய ஒரே நிறுவனம் தமிழ் வளர்ச்சிக் கழகமாகும். தமிழ் வளர்ச்சிக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
http://www.tamilvk.com/

சாஃப்ட்வியூ ஊடகக்கல்லூரி


சாஃப்ட்வியூ ஊடகக்கல்லூரி கடந்த 20 வருடங்களாக சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இயங்கி வருகிறது. தமிழ் சார்ந்த படிப்புகளும், படித்தவுடன் வேலைவாய்ப்பு அளிப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய சக்தி என கூறலாம். விசுவல் கம்யூனிகேஷன், இதழியல், தொலைக்காட்சி தயாரிப்பு, அனிமேஷன், கிராபிக்ஸ், போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி பயிற்சிகள் சாஃப்ட்வியூவில் நடத்தப்படுகிறது.

சாஃப்ட்வியூ பயிற்சிகள்
http://www.softview.in/training/default.asp

சாஃப்ட்வியூ குறித்த வீடியோ காட்சியை பார்ப்போமா?
http://www.youtube.com/watch?v=eq916Mjh2j8

சாஃப்ட்வியூ முகவரி
Softview Media College
117, Nelson Manickam Road,
Chennai - 600029
Tamilnadu, India.
Ph: 23743066/ 23741053
Email : softviewindia@gmail.com
url: http://www.softview.in

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை புதிதாக நான்கு வலைப்பூக்களை மலர விட்டுள்ளது. நாள் கிழமை என்று காத்திராமல் வேலை முடிந்தவுடன் இப்பூக்கள் மலர்ந்துள்ளன. வலைப்பதிவு தொழில் நுட்பம் எளிதானது மட்டுமல்ல, காலத்தை வென்று நிற்கும் திறனுடையதுமாகும். வலைப்பூவின் சிறப்புக்கள்:

1. இணையப் பதிவு (web publishing) என்பது முன்னெப்போதுமில்லாத அளவு எளிமையாகியுள்ளது,
2. வலைப்பூவில் உரையாட முடிகிறது (பின்னூட்டம் மூலமும் நேரடி real time conversation மூலமும்),
3. வலைப்பூ இணையத்தின் பல்லூடகத் திறனை முழுமையாகப் பயன்படுத்துகிறது (multimedia capability),
4. மின் மடல் செய்வதை விடவும் கூடுதல் அனுகூலங்களை வலைப்பூ அளிக்கிறது (உதாரணமாக, embed செய்து ஒளிக்காட்சியை ஓட்டமுடிகிறது).
5. மேலும் சேகரம் செய்யும் திட்டங்களுக்கு (digital archiving schemes) ஏற்ற வகையில் கிட்டங்கியை (database) சுலபமாகத் தேடமுடிகிறது.
6. மடலாடற்குழுவின் சௌகர்யங்களுடன், வலைப் பக்க அனுகூலங்களையும் கூட்டிச் செயல்படுவது வலைப்பூ.
இவைகளை மனத்தில் கொண்டு கீழ்க்காணும் நான்கு வலைப்பூக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றைச் சொல்லும் போது அதில் எப்படி எளிதாகப் பங்கேற்கலாம் என்றும் விளக்குகிறேன்:

I. மரபுச் சேதி: (Heritage News)

தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவரும். இதைத் திறமையாக செயல்படுத்த ஆர்வமுள்ள தமிழர்கள் சேதிக் குறிப்புகளை அனுப்புவதுடன், அவை இணையத்தில் எங்கேனும் வெளியாகியிருந்தால் அதன் தொடுப்பைக் (web link) கொடுத்து உதவலாம். ஒரு செய்திப் பத்திரிக்கை போல் இதை நடத்தும் உத்தேசமில்லை. அதற்கான ஆள்/பொருளாதார பலமில்லை. ஆயினும் ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளும் அளவிளேனும் செய்திகளைத் தரமுடியும். தொடுப்பு பற்றிய மூலாதாரத் தகவலுடன், தொடுப்பு கொடுத்தவருக்கும் நன்றி அறிவிக்கப்படும். (இதனாலேயே என்னை ஒரு 'மரபு அணில்' என்று சொல்லிக் கொள்கிறேன். சேது பந்தனம் செய்த போது அணிலும் பங்கேற்றது. அதன் பங்கேற்பு சிறிதாயினும், பங்களித்துள்ளது என்பது காலத்தில் பதிவாகியுள்ளது!).

II. மரபின் குரல்: Heritage Tunes

முதுசொம் இசையரங்கம் என்றொரு வலைப்பக்கம் இயங்கி வருகிறது. அதை இன்னும் ஊடாட (interactive) வைக்கும் நோக்கமே இவ்வலைப்பதிவு.

1. உங்கள் வட்டார வழக்கு, பேச்சு இவைகளை இத்தளத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். VoiceSnap குழுவுடன் இணைந்து இதைச் செய்துள்ளோம்.
2. மழலைப் பாடல்களை பெரியோரோ, சிறுவர்களோ பாடிப் பதிவு செய்யலாம்,
3. இசைத் துக்கடா (music sample) வை இங்கு அனுப்பலாம்,
4. இலக்கிய உரைகளை அனுப்பலாம்,
5. உங்கள் கவிதை, உங்கள் கதை, உங்கள் நாவல் இவைகளை உங்கள் குரலில் 'காலத்தின் பதிவாக' இங்கு நிரந்தரப்படுத்தலாம்.
6. தமிழின் அமுதம் போன்ற இசை இங்கு பிரவாகம் எடுக்கும் படி செய்யலாம். தமிழ் இசை என்பது பரந்த நோக்கில் 'திராவிட இசை' என்றே இங்கு பதிவாகிறது. எனவே தெலுங்கு, கன்னட, மலையாள, தமிழ் இசைப் பாரம்பரியம் இங்கு பதிவாகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
7. தமிழ் கிராமப்புற இசை பற்றிய பதிவுகள் அரிதாகவே உள்ளன. அவைகளை இங்கு சேகரம் செய்யலாம்.

III. மரபுச் சுவடு: Image Heritage

படங்கள்! ஆகா! அவை சொல்லும் சேதிகள்தான் எத்தனை. அது கல்யாணக் காட்சியாக இருக்கலாம், குழந்தை பிறப்பாக இருக்கலாம், ஊர் தேர் திருவிழாவாக இருக்கலாம். பழைய படங்கள். தமிழக வீடுகள், தமிழக தெரு அமைப்பு, தமிழகக் கோயில்கள், சிற்பங்கள்...அம்மம்மா! எத்தனை உள்ளன. அப்புகைப்படங்களை இங்கு தொடுப்பது நோக்கம். வேறொரு தளத்தில் அது இருந்தால், ஒரு தொடுப்பின் மூலம் அவைகளைக் கோர்த்துவிட முடியும். மிக, மிக எளிய வழியில் நம் சுவடுகளை இங்கு பதிக்கலாம். புற உலகில் (வெளிநாட்டில்) தமிழ்க் கல்வி பயில்பவர்களுக்கு இம்மாதிரிப் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு தம்ழ் இணைய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்படுகிறது.

IV. தமிழ் நிகழ் கலை: Waiting Room (video show)

ஒட்டவைக்கும் (embed) திறன் கொண்டு YouTube, GoogleVideo மற்றும் பிற கிட்டங்களில் கிடக்கும் தமிழ் நிகழ் பற்றிய ஆவணங்களை மிக எளிதாக இங்கு சேர்த்துவிடலாம். இங்கு அனுப்புங்கள் என்றால் யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆனால் கூகுளுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்குமே மேடையில் ஒளிவட்டத்தில் இருக்கவே ஆசை. இதில் தவறில்லை. அவர்கள் கோபுரத்தில் இருந்தால் எல்லோரும் பார்ப்பது எளிதே. அதைத்தான் இவ்வலைப்பூ செய்யப்போகிறது. அனுப்புவருக்கும் சிரமமில்லை. அவர்கள் பார்த்து, ரசித்த ஒரு வீடியோ கிளிப்பை எமக்கு 'html tag' ஆக அனுப்பினால் போதும். இந்த ஒட்டவைக்கும் திறன் கொண்டு நம் வீட்டு வீடியோ (புழக்கடை சினிமா - Garage Cinema) வையும் இங்கு வெளியிடலாம். ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும் போதும் வீடியோ எடுக்கிறோம், படமெடுக்கிறோம், சிலர் பாட்டுக்களை ரெகார்டு செய்வதுமுண்டு. அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இது professional-ஆக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எவ்வளவு சின்ன சேதியாக இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கும் பிறருக்கும் அது ஏதோவொருவகையில் பயன்படும்.

முன்னெப்போதுமில்லாத அளவில் தனிமனிதப் பதிவு என்பது உச்சத்தில் இருக்கிறது. இணையம் என்ற தொழில் நுட்பம் இதைச் சாத்தியப்படுதியுள்ளது. அதைப் பயன்படுத்தி தமிழ மரபுச் சுவடுகளை என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் மின்னுலகில் பதிவு செய்து வைக்கலாமே?

உங்களிடம் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. ஒரு மின்னஞ்சல். அவ்வளவுதான். அம்மின்னஞ்சலில் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் அனுப்பிவிடலாம்.
http://www.tamilheritage.org

சென்னையில் தமிழ்க்கணினி நூல்கள், சிடிக்களுக்கு பிரத்யேக ஷோரூம்


தமிழில் வெளியாகும் தமிழ்க்கணினி நூல்கள் மற்றும் மல்டிமீடியா சிடிக்களை உள்ளடக்கிய விற்பனையகம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள (118) சாஃப்ட்வியூ நிறுவனம், தமிழ்க்கணினி நூல்கள், தமிழ் மென்பொருள் தயாரிப்பு, சிடி, டிவிடிக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தமிழ்க்கணினி நூல்கள் மற்றும் தமிழ் சிடிக்கள் உள்ளடக்கிய பிரத்யேக ஷோரூமை துவங்கி, பிற பதிப்பக தமிழ்க்கணினி நூல்களையும் விற்பனை செய்கிறது. தமிழ்க்கணினி சார்ந்த பொருட்கள் இனி நமக்கு தேவையெனில் வேறெங்கும் சென்று அலையவேண்டிய அவசியமில்லை. தமிழ்க்கணினி சார்ந்த அனைத்து நூல்களையும், சிடிக்களையும் சாஃப்ட்வியூவிலேயே பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி: 044-23741053, 9840738676

http://www.softview.in/publications.asp

Tamil Internet Conference Book

You can download the "Kovai Tamil Internet Conference 2010" Book
that is about 900 Pages - about 30MB file in PDF.
This contains all the 130+ Papers being presented.


Thursday, July 22, 2010

கணினி கலைச்சொற்கள்

தமிழ் தகவல்தொழில்நுட்ப கலைச்சொற்களுக்கான இணையத்தை பார்த்துள்ளீர்களா? டாக்டர்.மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு உருவாக்கியது.

http://www.tcwords.com



தொடக்கப் பள்ளிக்கு தேவையான தமிழ்க் கணினி தேவைகள்

தொடக்கப் பள்ளிக்கு தேவையான தமிழ்க் கணினி தேவைகள்

கணினியையும் பள்ளி மாணவனையும் பிரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்திலோ அல்லது பிரத்யேகமாகவோ அல்லது கூடுதல் சிறப்பு பாடமாகவோ கணினி படிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது. அயல்நாடுகளில் கணினியைக்கொண்டே அனைத்து பாடங்களையும் கற்க வேண்டிய சூழல்உள்ளது. இவை மொழி சார்ந்த பாடங்களுக்கும் பொருந்தும். ஆனால் தமிழகத்தில் ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் பெரும்பாலும் கணினியை இயந்திரமாகவே கருதுகின்றனர். இந்நிலை மாறி ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான கருவியாக கணினியை கருதவேண்டும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்க்கணினி ஆற்றல் அவசியம் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவனை தயார் செய்யும் ஆசிரியர் மற்றும் கல்வி மையமும் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்க்கணினி அறிவு பெற்றிருந்தாலே மேலோங்கி இருக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளம், எழுத்துரு, எழுத்துரு வகைகள், எழுத்துருக்களை பொறுத்தும் முறை, எழுத்துக்கள் உள்ளீட்டு முறை, எழுத்துக்கள் உள்ளீட்டு வகைகள், அதன் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் எழுத்துரு வாரியாக நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ் உள்ளீட்டு விசைமுறைகளாகிய தமிழ் 99, தமிழ் தட்டச்சு, தமிழ் ஒலியியல், தமிழ் பொனடிக் மற்றும் பிற விசை முறைகளை நாம் கற்றிருந்தலே விரைந்து பாடத்திட்ட பணிகளை கையாள முடியும். ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு இவற்றை கற்றுக் கொடுத்தல் அவசியமாகும். மாணவர்களும் சுயமாக இது சார்ந்த பணிகளை தன்னந்தனியாக செய்ய துணிவுள்ளதா என ஆய்வுசெய்ய வேண்டும். இந்த தொழில்நுட்ப சார்ந்த வளர்ச்சிப்பணிகளையும் உடனுக்குடன் மேம்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலான இடங்களில் தமிழ்சார் வன்பொருள் மற்றும் மென்பொருளை வாங்குவதற்கே தயக்கம் உள்ளது. அடிப்படை கட்டுமானமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி மையம் எவ்வாறெல்லாம் மேம்பட்டுடன் இருக்க வேண்டுமென சிந்திக்கவேண்டும். தமிழில் விசைப்பலகைகள், சொற்செயலிகள் மற்றும் பல்வேறு மென்பொருட்கள் இருந்தாலும் வாங்கிப்பயன்படுத்துவதற்கு வெட்கமும், தயக்கமும் ஒரு காரணமாக உள்ளது. சுயமாக இவற்றை நாம் தவிர்த்து ஒவ்வொரு கல்வி மையமும் தமிழ் விசைப்பலகைகள், சொற்செயலிகள் மற்றும் பல்வேறு மென்பொருட்களை

பயன்படுத்த முன்வரவேண்டும். இவற்றின் மூலமாக நாம் கற்றல் தமிழ்க்கணினி பயன்பாட்டை சுலபமாக நாம் அறியமுடியும். நம் தமிழும் அறிவியல் மொழி தானே?

விக்கிபீடியாவின் பின்னணியாய் அமையும் கோட்பாடுகள், விக்கிபீடியாவின் வரலாறு, விக்கிபீடியா சமூகம் தொடர்பான அறிமுகம், கட்டற்ற திறந்த மூல இயக்கம், திறந்த புலமைச்சொத்து தொடர்பான அறிமுக விளக்கங்களும் அக்கோட்பாடுகள் விக்கிபீடியாவை எவ்வாறு உருவாக்க விழைந்தன. விக்கிபீடியா ஊடாக வெற்றியை நிரூபித்தன என்பனபோன்ற தகவல்கள் சிறுவயதிலேயே மாணவர்களுக்கு தெரியவேண்டும். அவ்வாறு போதிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் தானும் விக்கிப்பீடியாவில் தமிழ்ப்பணியாற்ற ஆர்வம் பெருகும். தமிழ் வளர்க்கும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், அதன் தொகுப்புகள் மற்றும் டிஜிட்டல் டிலைப்ரரி ஆகியன இளம்வயதிலேயே மாணவர்கள் பயன்பெரும் வகையில் போதிக்கவேண்டும். தமிழ் இணைய ஆற்றல், மின்னஞ்சல் பயன்பாடு, தேடுப்பொறி பயன்பாடுகள், அனிமேஷன் வாயிலாக தமிழ்க்கணினி தயாரிப்பு, இணைய வாயிலான தேர்வு, தமிழ் மென்பொருட்கள் அறிவை வளர்த்தல் ஆகியவற்றை படிப்படியாக நாம் வளர்க்க வேண்டும்.

ஒரு மருத்துவரின் குறிப்பும், மருந்தும் பிறருக்கு புரியாததன் தன் காரணம் அவற்றிற்கான தமிழ் சொற்கள் இல்லாமையே ஆகும். தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஆயிரக்கணக்கில் தமிழ்மொழி சொற்கள் புழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே புழக்கத்திலுள்ள இச்சொற்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு கலைச் சொற்களை பொருள்பட போதித்தால் நம் தமிழ்மொழி, மேலும் வளர்ச்சி பெறும். தொடக்கப்பள்ளி அளவிலேயே படத்துடன், பொருள்பட கணினி பயன்பாட்டை மாணவர்களுக்கு விளக்கி கற்பித்தால், மாணவ பருவத்திலேயே தமிழ் சொற்கள் ஆழமாக குழந்தைகள் மனதில் பதியும்.

ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் 2டி அனிமேஷன் அறிவை ஆழமாக பெறுதல் வேண்டும். 2டி அனிமேஷன் அறிவை தமிழுக்கு ஏற்றபடி பயன்படுத்துதல் வேண்டும். 2டி அனிமேஷன் அறிவை தமிழ் கற்பிக்கும் கருவி தயாரிக்கும் பணிக்கு ஏற்றபடி பயன்படுத்துதல் வேண்டும். 2டி அனிமேஷனில் கோரல்ட்ரா, போட்டோஷாப், பிளாஷ், டைரக்டர் ஆகிய மென்பொருட்களை கற்றிருத்தல் வேண்டும். இருபரிமாண உருவங்களை தயாரித்து தமிழ் கற்பித்தலுக்கு பயன்படுத்துதல் வேண்டும். தமிழ் உச்சரிப்புக்கும், பேச்சு தமிழுக்கும் கணினி மென்பொருட்களையும் அதன் கருவிகளையும் பயன்படுத்துதல் வேண்டும். 2டி அனிமேஷன் மூலம் பாடங்கள் தயாரிக்கும் அறிவை பெற்று வட்டாரச்சொற்களை வளர்க்கலாம். உதாரணத்திற்கு வீட்டை பெருக்கும் துடைப்பம் தமிழகத்தின் பல பகுதிகளில் வெவ்வேறு சொற்களாக அழைக்கப்படுகிறது. வாரியல், விளக்குமாறு, பெருக்குமாறு, தொடப்பம், வாருகோல் என பல வட்டாரச்சொற்களை நம் வசிக்கும் வட்டாரத்திற்கேற்ப பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாக்கலாம்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் இங்கு குறிப்பிட்ட அனைத்து ஆற்றலையும் பெறமுடியுமா? சிறுபருவத்தில் அனைத்து சிறார்களும் தமிழ்க்கணினி அறிவை பெறமுடியும். தமிழ்க்கணினி அறிவை சிறுபருவத்தில் பெற்றால் தான் இளமைப்பருவத்தில் தமிழ்க்கணினி தயாரிப்பை பல கோணங்களில் நாட்டுக்காக படைக்கமுடியும். அயலக மென்பொருட்களுக்கு இணையாக, நாம் வடிவமைக்கும் முறை, கற்பிக்கும் முறை, இதன் பலன்கள் ஆகியன நம் தமிழ் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பாமரருக்கும் உறுதுணையாக இருக்கும்.