Search This Blog

Wednesday, December 15, 2010

லயோலா கல்லூரியில் அனிமேஷன் துறை திறப்பு


தமிழகத்தில் புகழ்பெற்ற கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் ஒன்றாகும். அனிமேஷன் மற்றும் மீடியா கல்வியில் கடந்த 20 ஆண்டுகளாக புகழ்பெற்றது, சாஃப்ட்வியு நிறுவனம் ஆகும். இவ்விரண்டு நிறுவனங்களும் சேர்ந்து கூட்டாக மிகப்பெரிய மாபெரும் அனிமேஷன் பயிற்சி மையத்தை லயோலா கல்லூரியில் துவக்கியுள்ளன. லயோலா கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் ஒரு பிரிவாக அனிமேஷன் பயிற்சியை இந்நிர்வாகம் துவக்கியுள்ளது. உயரிய தொழில்நுட்பக் கணினி மற்றும் அதிநவீன மென்பொருட்களுடன் அனிமேஷன் பயிற்சி மிகப்பெரிய அளவில் இயங்கத் துவங்கியுளது. டிப்ளமோ படிப்புகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அனிமேஷன் பயிற்சியை பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் படிக்கலாம். இப்பயிற்சிக்கு வயது, பால் வரம்பு கிடையாது.துவக்க விழா டிசம்பர் 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த லயோலா கல்லூரியின் அனிமேஷன் பயிற்சி மையத்தை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை அவர்கள் துவக்கி வைத்தார்கள். மற்றும் இந்நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் டாக்டர் அவ்வை நடராஜன்,கல்லூரி முதல்வர் ஜெபராஜ் அடிகளார், கல்லூரி செயலர் ஜோஅருண் அடிகளார்,மா. ஆண்டோ பீட்டர், ராஜநாயகம் அடிகளார் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Monday, December 6, 2010

தமிழ் காப்போம்

தமிழில் கிரந்த எழுத்து திணிப்பதை தடுக்கக்கோரி சென்னை கன்னிமரா நூலகத்தில் தமிழ்க் காப்போம் கூட்டம் நடைபெற்றது. இரு அமர்வுகளாக பிரிக்கப்பட்டு 10 மணி நேர நிகழ்ச்சி 4-12-2010 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் அறிஞர்கள் பொன்னவைக்கோ, தெய்வசுந்தரம், அவ்வை நடராஜன், இளங்கோவன் எம்பி, பி.ஆர்.நக்கீரன்
மற்றும் பல பிரபல தமிழ் அறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல் அமர்விற்கு நான் தலைவராக பொறுப்பேற்று பேசினேன். இந்த கிரந்த திணிப்பை நம் தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என எடுத்துக் கூறினேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருவள்ளுவன் இலக்குவனார் நல்ல சுகத்துடன் நூறு வயது காண வாழ்த்துகள்! நம் தமிழுக்கு திருவள்ளுவனைப் போல ஒவ்வொரு தமிழக அஞ்சல் எண்ணுக்கும் ஒருவர் தேவை!