Search This Blog

Thursday, February 23, 2012

ஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம்?

ஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம்? என்ற தலைப்பில் குமுதம் சிநேகிதி படைத்த கட்டுரையில் என்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளேன்.






Saturday, February 18, 2012

கல்கியின் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது'


கல்கி சதாசிவம் அறக்கட்டளை நினைவாக ஆண்டுதோறும் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது' அளிக்கப்படுகிறது. கல்கி பத்திரிகையை துவங்கவும், நடத்தவும் பக்கபலமாக இருந்த திரு,சதாசிவம் மற்றும் திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக கல்கி சதாசிவம் அறக்கட்டளையை கல்கி குழுமம் நடத்திவருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலமாக சொற்பொழிவு, விருது மற்றும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 18ந்தேதி (பிப். மாலை 6 மணி) நடைபெற்ற விழாவில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் திரு.வகுள் இந்திய பொருளாதாரம் குறித்து 1.15 மணி நேரம் ஆழமான ஆங்கில உரை ஆற்றினார். விசுவல் கம்யூனிகேஷன் கற்கும் 7 ஏழை மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக உதவித்தொகையும் அளிக்கப்பட்டது.


சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருதை தேர்ந்தெடுக்கும் பணியை நான், திரு.கல்கி ராஜேந்திரன் மற்றும் திருமதி.பத்மினி பட்டாபிராமன் (அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை) இணைந்து தேர்வு செய்தோம். ஆண்டு தோறும் வெளியான தமிழ் அச்சு ஊடகங்களின் அனைத்து விளம்பரங்களையும் தொகுத்து தேர்வு செய்தோம். தேர்வுப்பணி அடையாறிலுள்ள கல்கி ராஜேந்திரன் இல்லத்தில் சென்ற மாதம் நடைபெற்றது.

சிறந்த தமிழ் விளம்பர விருது திருப்பூரை சேர்ந்த 'ராம்ராஜ் காட்டன்ஸ்' நிறுவனத்திற்கு ( வேட்டி+ உள்ளாடைகள்) அளித்தோம். விளம்பரத்தை தயாரித்த 'க்ரையான்ஸ்' விளம்பர நிறுவனத்திற்கு பிரதான விருது அளிக்கப்பட்டது.


Friday, February 17, 2012

கணித்தமிழும் பயன்பாடும் கருத்தரங்கம்


நாற்றமிழாம் நற்றமிழ் மன்ற விழா

கணித்தமிழும் பயன்பாடும் கருத்தரங்கம்



சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரியில் 16ந் தேதி மாலை 3 மணிக்கு 'கணித்தமிழும் பயன்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் கணித்தமிழ்ச் சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னாள் சட்டமனற உறுப்பினர் முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். கணித்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.மா.ஆண்டோ பீட்டர் 'கணினியும் தமிழும்' என்ற தலைப்பிலும், கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு.டி.என்.சி.வெங்கடரங்கன் 'கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் 'இணையத்தமிழ் வளர்ச்சி' என்ற தலைப்பிலும் பேசினர்.


Thursday, February 9, 2012

குழந்தைக்கலைக் களஞ்சியம் குறுவட்டு வெளியீடு


சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சிக்கழகம் பல்வகை கலைக்களஞ்சிய புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பத்து தொகுதி கலைக் களஞ்சியங்கள் மற்றும் பொதுக்கலைக் களஞ்சியங்கள் அடங்கிய புத்தக தொகுப்புகள் உலகப்புகழ் பெற்றதாகும், இவற்றை டிவிடியாக தயாரிக்கப்பட்டு பிப்பிரவரி 8ந் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னைப்பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதி, ராமசுப்பிரமணியன் வெளியிட தஞ்சைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் மற்றும் திரு.மா.ஆண்டோ பீட்டர் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சிக்கழக தலைவர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப்பல்கலைக்கழக துணைவேந்தர். கர்ணல்.திருவாசகம், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர். முத்துக்குமரன் மற்றும் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.



Tuesday, February 7, 2012

இயக்குநர் சிம்புதேவன் டேலி குறுவட்டு வெளியீடு



கணக்கு வழக்குகளை தயாரிப்பதில், எளிமையாக்குவதில் டேலி மென்பொருள் இந்திய அளவில் புகழ்பெற்றதாகும். இந்த டேலி மென்பொருளை கற்பிப்பதில் தமிழக அளவில் வல்லுநராக திரு.அ.கிருஷ்ணன் அவர்கள் திகழ்கிறார்கள். திரு.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய டேலி ஆங்கில புத்தகம் மற்றும் டேலி தமிழ் கற்பித்தல் டிவிடி தை மாதம் தயாரானது. இதனை என்னுடைய சாஃப்ட்வியூ பதிப்பகம் பிரசுரித்துள்ளது. இந்த டேலி ஆங்கில புத்தகத்தையும், டிவிடியையும் தமிழ்திரைப்பட இயக்குநர் சிம்புதேவன், வெளியிட நடிகை தாரிணி பெற்றுக்கொண்டார்கள். வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் சிம்புதேவனும், நடிகை தாரிணியும் சாஃப்ட்வியூ விஸ்காம் மாணவர்களுக்கு தமிழ்த் திரையுலக அனுபவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.






Sunday, February 5, 2012

கணித்தமிழ்ச்சங்க மதுரைக்கிளை தொடக்கவிழா

மதுரைக்கிளையின் தொடக்கவிழா டியூக் உணவக அரங்கில் நேற்று(04 -02 -2012 ) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கணித்தமிழ் உறுப்பினர்கள் மாணவர்கள் பேரசிரியப்பெருமக்கள் ஆர்வலர்கள் பத்திரிகை நண்பர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக கணிச்சங்கத் தலைவர் மா. ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர்கள் திரு சுகந்தன்,திரு ஸ்ரீனிவாஸ்பார்த்தசாரதி, மதுரைக் கிளைப் பொறுப்பாளர் திரு கப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவர் ஆண்டோபீட்டர் தமது விளக்கவுரையில்  கணித்தமிழ் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள்,எதிர்காலத்  திட்டங்கள் குறித்து விளக்கினார்.

        தலைமையேற்று சிறப்பித்த மதுரை ஆட்சியர் திரு உ. சகாயம் மதுரைக்கிளைத் தொடக்க விழாவினை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் திரு சுப்ரமணியின் புத்தகத்தை வெளியிட்டு மதுரை கணித்தமிழ் உறுப்பினர் திரு ஜனார்த்தனன் 'டிக் சாப்ட்' நிறுவனரின் மாணவர்களுக்கான இணையதளத்தினையும் ஆட்சியர் தொடங்கிவைத்தார். தலைமையுரையில் கணினியில் தமிழ் உட்புகுத்துவத்தின் இன்றியமையாத் தேவை, தமிழர்களின் ஆங்கில அடிமைமோகம் அதனால் எழும் தீமை குறித்து விரிவாக உரையாற்றினார்.  இத்தகு கேட்டினைக் களைந்து தமிழின் மேன்மை சிறக்க கணித்தமிழ் மதுரைக்கிளை பாடுபடும் என நம்பிக்கைத் தெருவித்தார்.
        சிறப்புரை நிகழ்த்திய முனைவர் ஞானசம்பந்தம், சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் சிந்தனைச்சிற்பி அவர்கள் தமிழின் பொருண்மை ஆழம், அழுத்தம் விட்டிசை இவற்றின் வழியாகக்கூட பொருள் மாறுபடும் பாங்கு ஆகியவற்றை ஆழகாக நகைச்சுவையோடு எடுத்துரைத்தார்.   தமிழ் தட்டச்சு பயின்று தாமே கணினி உள்ளீட்டினை செய்ய உறுதி ஏற்றார்.

       முன்னதாக மதுரைக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு கள்ளிப்பட்டி குப்புசாமி அவர்கள் வரவேற்றார், மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு உமாராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மதுரைக்கிளை பொறுப்பாளர் திரு கப்ரியல் நன்றி நவின்றார். நிகழ்ச்சிகளை மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் பேராசிரியை திருமிகு ஜாஸ்லின் பிரிசில்டா தொகுத்துவழங்கினார். சைவ விருந்துடன் நிகழ்ச்சி இனிது நிறைவுற்றது.
 கணித்தமிழ்ச்சங்க மதுரைக்கிளை தொடக்கவிழா புகைப்படங்கள்


Wednesday, February 1, 2012

கிரிக்கெட் அவமானம்

சின்னசின்ன டீம்களை வென்று பெயர் எடுப்பதிலேயே இந்திய கிரிக்கெட் அணி குறியாகவுள்ளது. மூத்த வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் களம் இறங்கிய இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. நடுவில் பலமில்லாத மேற்கிந்திய தீவு அணியை வென்று பெருமூச்சு விட்டது. அனுபவமான (தாத்தா) வீரர்கள் ஷேவாக், டெண்டுல்கர், லட்சுமணன், டிராவிட், ஜாகீர்கான் ஆகிய வீரர்களைக் கொண்டே, நாம்  எதையும் சாதிக்க முடியவில்லை.  இவர்கள் ஓய்வு பெற்றால் இந்திய கிரிக்கெட் அணியின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ஜிம்பாபே அணிக்கு இணையாக தான் இந்தியாவை ஒப்பிட முடியும். ஒரு பவுலரோ அல்லது பேட்ஸ்மேனோ சாதிக்க முடியவில்லையே ? ஐபில் போட்டி மற்றும் விளம்பரங்களில் மட்டுமே சாதிக்கிறார்கள். இதை ஒரு மோசடி என்பதா ? அல்லது.வெற்றிக்குவிப்பு என்பதா? 

கீழ் கண்பாவைகளை நடைமுறைப்படுத்தினாலேயே முதல் வகுப்பு அணியாக  இந்திய கிரிக்கெட் அணி விளங்கும்.

பிசிசிஐ-யை முழுமையான கிரிக்கெட் வீரர்கள் கொண்ட அமைப்பாக மாற்றவேண்டும்.

உள்நாட்டு போட்டிகளில் இரு வருடமாவது விளையாடியவர்களுக்கே உறுப்பினர் வாய்ப்பு அளித்தல் வேண்டும்,

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிக்காவிற்கு இணையான பவுலிங் பிச்சுகளை உருவாக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்புகளை அரையிறுதிக்கு போட்டிக்கு, பிறகே நேரடி (ஒளிபரப்பாக) செய்தல் வேண்டும்.

தொடர்ந்து 5 போட்டிகளில் 50 ரன் அடிக்காத வீரர்களை மாற்ற வேண்டும். (தூக்ககூடாது)

எப்போதும் டெஸ்ட் அல்லது ஒன்டே கிரிக்கெட் அணி,இரண்டிலும் 3 ஆல்ரவுண்டர்கள் இருக்கவேண்டும்.

கிரிக்கெட் அணியின் கேப்டன், துணைகேப்டன் பதவிகள் இரண்டிலும் பேட்ஸ்மேன்களை போடக்கூடாது. ஒருவர் பவுலராகவோ அல்லது பேட்ஸ்மேன், என மாறி இருக்கவேண்டும்.

அணியின் தேர்வுக்குழுவில் கேப்டன், துணைகேப்டன் இருவரும் இடம்பெறவேண்டும்.

இந்திய பயிற்சியாளர்களை (கபில், சந்தீப் பட்டேல், விஸ்வநாத், பேடி,   ராபின்சிங் போன்ற) நியமிக்கவேண்டும்.

கிரிக்கெட் மைதனங்களில் உள்ள கிளப்புகளை மூடவேண்டும்.

தினமணியில் வெளியான கார்ட்டூனை பாருங்கள். ஒவியர் மதியின் மனது எவ்வளவு வேதனை அடைந்திருக்கும். இவை அனைத்தும் முடியாத பட்சத்தில் பிசிசிஐ அமைப்பை, இந்திய அரசு அணியாக அறிவித்து மாற்றம் செய்தல் வேண்டும்.