சின்னசின்ன டீம்களை வென்று பெயர் எடுப்பதிலேயே இந்திய கிரிக்கெட் அணி குறியாகவுள்ளது. மூத்த வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் களம் இறங்கிய இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. நடுவில் பலமில்லாத மேற்கிந்திய தீவு அணியை வென்று பெருமூச்சு விட்டது. அனுபவமான (தாத்தா) வீரர்கள் ஷேவாக், டெண்டுல்கர், லட்சுமணன், டிராவிட், ஜாகீர்கான் ஆகிய வீரர்களைக் கொண்டே, நாம் எதையும் சாதிக்க முடியவில்லை. இவர்கள் ஓய்வு பெற்றால் இந்திய கிரிக்கெட் அணியின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ஜிம்பாபே அணிக்கு இணையாக தான் இந்தியாவை ஒப்பிட முடியும். ஒரு பவுலரோ அல்லது பேட்ஸ்மேனோ சாதிக்க முடியவில்லையே ? ஐபில் போட்டி மற்றும் விளம்பரங்களில் மட்டுமே சாதிக்கிறார்கள். இதை ஒரு மோசடி என்பதா ? அல்லது.வெற்றிக்குவிப்பு என்பதா?
கீழ் கண்பாவைகளை நடைமுறைப்படுத்தினாலேயே முதல் வகுப்பு அணியாக இந்திய கிரிக்கெட் அணி விளங்கும்.
பிசிசிஐ-யை முழுமையான கிரிக்கெட் வீரர்கள் கொண்ட அமைப்பாக மாற்றவேண்டும்.
உள்நாட்டு போட்டிகளில் இரு வருடமாவது விளையாடியவர்களுக்கே உறுப்பினர் வாய்ப்பு அளித்தல் வேண்டும்,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிக்காவிற்கு இணையான பவுலிங் பிச்சுகளை உருவாக்க வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்புகளை அரையிறுதிக்கு போட்டிக்கு, பிறகே நேரடி (ஒளிபரப்பாக) செய்தல் வேண்டும்.
தொடர்ந்து 5 போட்டிகளில் 50 ரன் அடிக்காத வீரர்களை மாற்ற வேண்டும். (தூக்ககூடாது)
எப்போதும் டெஸ்ட் அல்லது ஒன்டே கிரிக்கெட் அணி,இரண்டிலும் 3 ஆல்ரவுண்டர்கள் இருக்கவேண்டும்.
கிரிக்கெட் அணியின் கேப்டன், துணைகேப்டன் பதவிகள் இரண்டிலும் பேட்ஸ்மேன்களை போடக்கூடாது. ஒருவர் பவுலராகவோ அல்லது பேட்ஸ்மேன், என மாறி இருக்கவேண்டும்.
அணியின் தேர்வுக்குழுவில் கேப்டன், துணைகேப்டன் இருவரும் இடம்பெறவேண்டும்.
இந்திய பயிற்சியாளர்களை (கபில், சந்தீப் பட்டேல், விஸ்வநாத், பேடி, ராபின்சிங் போன்ற) நியமிக்கவேண்டும்.
கிரிக்கெட் மைதனங்களில் உள்ள கிளப்புகளை மூடவேண்டும்.
தினமணியில் வெளியான கார்ட்டூனை பாருங்கள். ஒவியர் மதியின் மனது எவ்வளவு வேதனை அடைந்திருக்கும். இவை அனைத்தும் முடியாத பட்சத்தில் பிசிசிஐ அமைப்பை, இந்திய அரசு அணியாக அறிவித்து மாற்றம் செய்தல் வேண்டும்.
என்னங்க பண்றது செவி சாயக்கணுமே கிரிக்கெட் வாரியம்
ReplyDelete