Search This Blog

Saturday, February 18, 2012

கல்கியின் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது'


கல்கி சதாசிவம் அறக்கட்டளை நினைவாக ஆண்டுதோறும் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது' அளிக்கப்படுகிறது. கல்கி பத்திரிகையை துவங்கவும், நடத்தவும் பக்கபலமாக இருந்த திரு,சதாசிவம் மற்றும் திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக கல்கி சதாசிவம் அறக்கட்டளையை கல்கி குழுமம் நடத்திவருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலமாக சொற்பொழிவு, விருது மற்றும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 18ந்தேதி (பிப். மாலை 6 மணி) நடைபெற்ற விழாவில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் திரு.வகுள் இந்திய பொருளாதாரம் குறித்து 1.15 மணி நேரம் ஆழமான ஆங்கில உரை ஆற்றினார். விசுவல் கம்யூனிகேஷன் கற்கும் 7 ஏழை மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக உதவித்தொகையும் அளிக்கப்பட்டது.


சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருதை தேர்ந்தெடுக்கும் பணியை நான், திரு.கல்கி ராஜேந்திரன் மற்றும் திருமதி.பத்மினி பட்டாபிராமன் (அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை) இணைந்து தேர்வு செய்தோம். ஆண்டு தோறும் வெளியான தமிழ் அச்சு ஊடகங்களின் அனைத்து விளம்பரங்களையும் தொகுத்து தேர்வு செய்தோம். தேர்வுப்பணி அடையாறிலுள்ள கல்கி ராஜேந்திரன் இல்லத்தில் சென்ற மாதம் நடைபெற்றது.

சிறந்த தமிழ் விளம்பர விருது திருப்பூரை சேர்ந்த 'ராம்ராஜ் காட்டன்ஸ்' நிறுவனத்திற்கு ( வேட்டி+ உள்ளாடைகள்) அளித்தோம். விளம்பரத்தை தயாரித்த 'க்ரையான்ஸ்' விளம்பர நிறுவனத்திற்கு பிரதான விருது அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment