Search This Blog

Thursday, November 25, 2010

புதுமைப்பித்தன் சிடி வெளியீட்டு விழா



சென்னை மைலாப்பூரிலுள்ள தேஜா பவனில் புதுமைப்பித்தன் கவிதைகள் மற்றும் கல்வி சிடிக்கள் வெளியீட்டு விழா வியாழக்கிழமை காலை (25.11.2010) அன்று நடைபெற்றது. சிடிக்களை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை அரசுச் செயலர் டபிள்யு.சி.டேவிதார் ஐ.ஏ.எஸ், அவர்கள் வெளியிட தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றச் செயலர் கவிஞர் இளையபாரதி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மேலும் விழாவில் கணித்தமிழ்ச் சங்கத் தலைவர் மா. ஆண்டோபீட்டர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் டாக்டர் அருள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக ஊடகவியல்துறை துறைத் தலைவர் சுந்தரவேஸ்ரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Friday, November 19, 2010

E-கலப்பை 3.0 – புதிய வெர்ஷன் அறிமுகம்


தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.
இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம்.
இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம் தரப்பு செயலியான ‘கீமேனை’ப்பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.


Download: http://thamizha.com/project/ekalappai

தமிழ்கம்ப்யூட்டர்

நவம்பர் மாத தமிழ்கம்ப்யூட்டர் இதழில், நான் எழுதிய யுனிகோட் குறித்த கட்டுரையை படியுங்கள்:

யுனிகோட் தரும் பயன்கள்
http://www.softview.in/antopeter/unicode.pdf

கருத்துக்களை கூறுக.

Monday, November 8, 2010

அமுதசுரபி தீபாவளி மலர்

அமுதசுரபி 2010 தீபாவளி மலரில் வெளியான என் கட்டுரையை படியுங்கள்:

தமிழ் மணக்கும் இணையங்கள்
http://www.softview.in/antopeter/amudhasurabhi_pdf.pdf

கருத்துக்களை கூறுக.