Search This Blog

Monday, October 18, 2010

உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்


கணிப்பொறி பயிற்சியில் சிஎஸ்சி கப்யூட்டர் எஜுகேஷன் நிறுவனம் தன்னுடைய 25 ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த 25 ஆண்டு விழாவில் புதுக் குடித்தனமாக புது இளமையுடன் பிரம்மாண்ட அலுவலகத்தை வளம் கொழிக்கும் திநகரில் கட்டியுள்ளது. சிஎஸ்சியுடன் நிர்வாக இயக்குநராக தென் தமிழ்நாட்டை சார்ந்த அய்யம் பெருமாள் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் சிறப்புற பணியாற்றி வருகிறார். தன்னுடைய பிரம்மாண்ட கணினி அலுவலகத்தை 1986ல் சிஎஸ்சியின் முதல் கிளையான, வண்ணாரப்பேட்டையில் படித்த பழைய மாணவர் சந்தோஷை வைத்து திறந்து வைக்கிறார். பிரபல அறிஞரோ, அமைச்சரோ திறந்து வைக்க வேண்டிய கணினி வளாகத்தை மாணவனை திறந்து வைத்து மனம் மகிழ்ந்து உள்ளதென சிஎஸ்சி நிர்வாகத்தை சொல்லலாம்.

Tuesday, October 5, 2010

பிறந்த நாளில் தமிழ் வலைப்பூ

பெருங்கவிக்கோ மகன் திரு.வா.மு.சே.திருவள்ளுவரின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ்ப்பணி’ என்ற வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டது. வலைப்பூவின் அறிமுகவிழாவில் சென்னை முன்னாள் மேயர் கணேசன், மேயர் மா.சுப்பிரமணியன், மறைமலை இயக்குவனார் மற்றும் எண்ணற்ற தமிழ் உணர்வாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிகழ்ச்சி நிரலின்படி நான் வலைப்பூவிற்கான வாழ்த்துரையை சிறப்புற பேசினேன். ஒவ்வொரு தமிழனும் தங்கள் பிறந்த நாளில் தமிழ்ப்பூவை நிறுவினால், நம் தமிழ் மொழிக்கே அதிக வலைப்பூக்கள் இருக்கும்.

Sunday, October 3, 2010

தேசிய மொழிகள் மாநாடு


தமிழ் மொழி அகாதெமியின் 13வது தேசிய மொழிகள் மாநாடு 3-10-2010 (ஞாயிறு) அன்று வேலூர் தொழிற்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது. நீதியரசர் ஜெகதீசன், வழக்கறிஞர் காந்தி, லேணா தமிழ்வாணன், சாரதாநம்பிஆரூரான், ஜி.விஸ்வநாதன், எஸ்.பி.முத்துராமன், முனைவர்.ராஜேந்திரன்(மாவட்ட ஆட்சியர்), மணிமேகலைகண்ணன் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். 95% அறிஞர்களுக்கு பேருந்து பயணம் சென்னையிலிருந்து ஏற்பாடு செய்யப்படிருந்தது. நான் “இணையத்தில் தமிழ்” என்ற தலைப்பில், பேச்சாளராக முதல் அமர்வில் கலந்து கொண்டேன். மிக மகிழ்ச்சியான ஞாயிறாக இருந்தது.