Search This Blog

Monday, December 6, 2010

தமிழ் காப்போம்

தமிழில் கிரந்த எழுத்து திணிப்பதை தடுக்கக்கோரி சென்னை கன்னிமரா நூலகத்தில் தமிழ்க் காப்போம் கூட்டம் நடைபெற்றது. இரு அமர்வுகளாக பிரிக்கப்பட்டு 10 மணி நேர நிகழ்ச்சி 4-12-2010 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் அறிஞர்கள் பொன்னவைக்கோ, தெய்வசுந்தரம், அவ்வை நடராஜன், இளங்கோவன் எம்பி, பி.ஆர்.நக்கீரன்
மற்றும் பல பிரபல தமிழ் அறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல் அமர்விற்கு நான் தலைவராக பொறுப்பேற்று பேசினேன். இந்த கிரந்த திணிப்பை நம் தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என எடுத்துக் கூறினேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருவள்ளுவன் இலக்குவனார் நல்ல சுகத்துடன் நூறு வயது காண வாழ்த்துகள்! நம் தமிழுக்கு திருவள்ளுவனைப் போல ஒவ்வொரு தமிழக அஞ்சல் எண்ணுக்கும் ஒருவர் தேவை!

1 comment:

  1. தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில் பங்கேற்று ஒத்துழைத்துச் சிறப்பித்ததுடன் வாழ்த்தியுள்ளமைக்கும் நன்றி. உங்களைப் போல் ஒவ்வொரு கணியறிஞரும் தமிழைக் காப்போம் என முன்வந்தால் தமிழ்த்தாய் விரைவில் நலமடைவாள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete