Search This Blog

Friday, April 1, 2011

உலகத் தமிழனின் மக்கள் தொகை 11 கோடிக்கு மேல்


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.

இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7 வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001 ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011 ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது. எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011 ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் 7.25 கோடி உள்ளதென்றால், தமிழகத்திற்கு வெளியே 4 கோடி தமிழன் இருக்கமாட்டானா? சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் வளைகுடாநாடுகளில் பெரும்பான்மை தமிழர்களே வாழ்கின்றனர். ஈழத்தமிழன் உலகெல்லாம் படர்ந்து விரிந்து கிடக்கிறான். ஆகையால் உலகிலுள்ள தமிழனில் மக்கள் தொகை என்னவென்றால் 11 கோடி என்று குறிப்பிடுங்கள். மேடைப்பேச்சாளர்கள் எப்போதும் தமிழன் 8 கோடி பேர் உள்ளதாகவே குறிப்பிடுகிறார்கள். அது தவறு? இனி தரணியெங்கும் தோராயமாக 11 கோடிக்கு மேல் தமிழன் உள்ளதாக குறிப்பிடுங்கள்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாளர் சந்திரமௌலி தமிழர் என்பது குயிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப முன்னாள் செயலாளர் என்பது குறிப்படத்தக்கது. கணித்தமிழ்ச்சங்கத்திற்கு துணையாக நின்றவர். தற்போது அரசுப்பணிக்காக புதுதில்லியில் குடியேறியுள்ளார்.

No comments:

Post a Comment