
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு. கோயில், பலகாரம், பொருட்கள் என கூறிக்கொண்டே போகலாம். ஆனால் புதுக் கோட்டையை பொறுத்த அளவில் என்னை கவர்ந்தது 'ஞானாலயா' நூலகமே. புதுக்கோட்டையில் நுழைந்தவுடன் திருக்கோகர்ணம் என்ற புறநகர் ஊரின், பழனியப்பா நகரில் 'ஞானாலயா' நூலகம் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். இலட்சித்திற்கும் அதிகமான பழமையான நூல்கள் இங்கு உள்ளது. திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் துணைவியாருட்ன் தன் சொத்தைப்போல இந்நூலகத்தை பாதுகாத்து வருகிறார். தம்பதிகள் பழகுவதற்கு மிகவும் இனிமயானவர்கள். அரிய நூல்களாக காந்தியடிகள், பாரதிதாசன், பாரதியார், உவேசா ஆகியோரின் படைப்புகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட நூல்களும் உள்ளன. ஆய்வு செய்வோரும், அயல்நாட்டினரும் இந்நூலகத்திற்கு கண்டிப்பாக விஜயம் செய்கிறார்கள். இந்த வருடம் ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் இந்நூலகத்தைப்பற்றி கட்டுரை வெளியானதை கண்டு மகிழ்ந்தேன். வாசகர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து படிக்கவும். http://www.softview.in//antopeter/g.pdf தமிழ் மரபு அறக்கட்டைளையின் சார்பாக நானும் இந்நூலகத்திற்கு சென்றுள்ளேன். முகவரி: 6. பழனியப்பா நகர்,திருக்கோகர்ணம் அஞ்சல் நிலையம், புதுங்ககோட்டை-2 தொலைபேசி: 0432-2221059
No comments:
Post a Comment