தேர்தல் கருத்துகணிப்பு: சைதை துரைசாமியா ? மா.சுப்பிரமணியனா ?
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சாப்ட்வியூ ஊடக கல்லூரி இதழியல் சார்ந்த காட்சி ஊடக படிப்பினை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்த ஊடக கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசியல் மற்றும் சமூகம் குறித்த ஆய்வுகளையும் கருத்து கணிப்பையும் அரையாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறேன். இந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கான கருத்து கணிப்பை என் கல்லூரி மாணவர்கள் செய்தார்கள்.
சைதை துரைசாமியா ? மா.சுப்பிரமணியனா ? எனும் கேள்விக்கு விடை காண 35 மாணவர்கள் களத்தில் இறங்கினர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் கருத்து கணிப்பு தரவுகள் அக்டோபர் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் ஆய்வுகளை நடத்தினர். ஆனால் தேர்தல் கருத்துக்கணிப்பு தேர்தல் ஆணையம் 19ந்தேதி வரை தடைவிதித்திருந்தது.
கருத்துக்கணிப்பின் முடிவில்
தமிழக அரசியல் தலைவராக ஜெயலலிதாவை 60% மக்கள் அனைவரும் ஆணித்தரமாக தெரிவித்தனர். ஆளுங்கட்சிக்கு நற்பெயரும், இலவச திட்டங்களுக்கு மதிப்பும் பொதுமக்களிடையே பரவியுள்ளது.
சென்னை மேயரின் (மா.சுப்பிரமணியன்) சாதனைகளை பெரும்பாலோர் பாராட்டுகின்றனர். ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் நன்மை என்பதாலேயே அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளதாக 45.8% மக்கள் தெரிவித்தனர். மேயர் மா.சுப்பிரமணியனை சுலபமாக அணுக முடியும் . புதிய மேயரை சுலபாக அணுக முடியுமா ? என்ற மனக்குறையும் மக்களிடம் உள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய மண்டலங்கள் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. வார்டு உறுப்பினர்கள் சுமார் 165 பேர் அதிமுக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர் என்றும் ஆய்வில் தெரிந்தது.
No comments:
Post a Comment