Search This Blog

Monday, September 26, 2011

சென்னை எலியட்ஸ் பீச்சின் அவலநிலை

சென்னையின் கடற்கரைகளில் மெரினா பீச்சை விட அழகும், சுகமும் உடையது பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச்சாகும்.1995 ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், என் வீட்டிலிருந்து 30 km டூவீலர் ஓட்டிச் சென்று சுகமான காற்றை அனுபவித்து வருவேன். சந்தனக்காற்றே, செந்தமிழ் ஊற்றே, சந்தோஷ பாட்டே வாவா!! என பாடிவிட்டுவருவேன். கடின உழைப்பின் நடுவே பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச்சின் தென்றல் சுகத்தை அளிக்கும். மெரினாவை விட்டுவிட்டு எலியட்ஸ் பீச்சிற்கு ஏன் சென்றேன் என நினைக்கலாம். முக்கியமாக எலியட்ஸ் பீச் தூய்மையாக இருக்கும். வெண்மையான மணற்பரப்பு. எந்த மாசும், நாற்றமும் இருக்காது. காதலர்கூட்டமும் குறைவாக இருக்கும். விளையாடுபவர்கள் இருக்கமாட்டார்கள். படித்தவர்கள் கூட்டம் எலியட்ஸ் பீச்சிற்கு உண்டு என்ற சிறு முத்திரை கூட இருக்கும். நேரம் கிடைத்தால் வேளாங்கன்னி மாதாகோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு விசிட் செய்யலாம். இரவு மென்மையும் சுகத்துடன் இல்லம் திரும்புவேன்.

இன்றோ எலியட்ஸ் பீச்சும் மெரினாவைப் போல தலைகீழாக உள்ளது. ஒரே குப்பை கூளங்களும், கடைகளாகவுள்ளது. நாம் மணலில் எங்கு அமர்வதென தெரியாத அளவிற்கு கடைகள் குவிந்துள்ளன. அப்பளம், பாப்கார்ன், கூல் ட்ரிங்ஸ், பொரித்த மீன் கடை, மிளகா பஜ்ஜி, காலிப்ளவர் பக்கோடா, பலூன், பொம்மை கடைகள், ஜஸ்வண்டி, சுண்டல், வேர்க்கடலை என கடைகள் குவிந்து எரிச்சலூட்ட வைத்துள்ளது. இது தவிரை பத்திற்கும் மேற்பட்ட ராட்டினம், கிளி ஜோஷியம், குறி, கழைக்கூத்து, துப்பாக்கி சுடுதல் என அடர்த்தியான வணிகர்களால் மனம் வேதனைப்பட்டது. இது அனைத்தும் இப்போது வந்த மாற்றமே.இது தவிர வாகன பார்க்கிங் தட்டுப்பாடும் பெரிய அளவில் உள்ளது. கடைகளையும், வணிகர்களையும், குப்பைகளையும் அகற்ற அப்பகுதி சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்யவேண்டும்.



1 comment:

  1. அங்கே கடை போட்டு இருக்கும் யாரும் மல்டி மில்லியனர் இல்லியே...!
    ஏழை மக்கள் என்ன செய்வார்கள் பாவம்....?
    **************************************************
    தி நகர் ரங்கநாதன் தெருவும் தான் மழைகாலத்தில் நடக்கவே முடியல.. என்ன பன்றாங்க, சகித்துகொண்டு தானே போறாங்க....!

    ReplyDelete