
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கூட்டம் சனிக்கிழமை உட்லட்ண்ஸ் ஒட்டலில் நடைபெற்றது. நடராசன்.இஆப, விக்கிரமன், காசிஆனந்தன், மணா, ஒவியர் அரசு மற்றும் பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். பார்வையாளராக வந்த காசி ஆனந்தனை, நடராசன் அவர்கள் மேடையில் அமரக்கோரினார். காசி ஆனந்தன் அவர்கள் 5 நிமிடம் பேசியபோது அறையே அமைதி காத்தது. தன்னுடைய எழுத்துப்பணிக்கு கலைமாமணி விக்கிரமன் அவர்களும் ஒரு வழிகாட்டியாக இருந்ததாக தெரிவித்தார். பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் சஞ்சீவி, வையாபுரிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றப்பெருமை தமக்கு உண்டென கூறினார். இவர்கள் ஆசிரியராக இருந்தமையே என் எழுத்துப்பணிக்கு சீரிய பலம் கிடைத்ததாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் கற்ற தமிழை ஈழப்போருக்கும், பிரச்சனைகளுக்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக கூறினார். கற்ற மொழி, என் தொப்புள்கொடி மக்களுக்கு ஆயுதமாக உதவி பெறுவது தமிழுக்கும், தமிழகத்திற்கும், என் ஆசிரியர்களுக்கும் பெருமை என்று கூறினார். மேடையில் பேசிய அனைத்து பேச்சாளர்களும் காசிஆனந்தன் இந்த கூட்டத்திற்கு வந்ததே, இக்கூட்டத்திற்கு பெருமை என்று தெரிவித்தனர். எழுத்தாளர் விக்கிரமனின் மருத்துவ செலவிற்காக நடராசன் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவினார்.
தமிழாயுதம் பெருமைக்குரிய செய்திகளை அரி(றி)ந்து தரும்.
ReplyDelete// பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் சஞ்சீவி, வையாபுரிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றப்பெருமை தமக்கு உண்டென கூறினார் //..
ReplyDeleteதெரியாத தகவலை பகிர்ந்து கொண்ட கணியரசு அவர்களுக்கு நன்றிகள் பற்பல...
தமிமீழ விடுதலை போராட்டத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் அய்யா காசி ஆனந்தன் அவர்களே.......
ReplyDeleteஅய்யாவின் ”நறுக்குகள்” அருமையான எழுத்தாக்கமாகும்.....
ReplyDeleteஇலங்கை தமிழருக்காக துடிக்கும் ஓர் உண்மை தமிழன்....