Search This Blog

Thursday, December 29, 2011

ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகள்

ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகள் -------------------------------------------
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்த போட்டியை நடத்த சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, 77 நிபந்தனைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் இன்று அறிவித்துள்ளார்.
ரூபாய் 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும், புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும், 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது. ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது. கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும், போதை வஸ்துகள் காளைகளுக்கு கொடுக்கக் கூடாது, காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் காட்டி பதிவு சான்றிதழ் பெற வேண்டும், மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது, மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக்குழு இருக்க வேண்டும், வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும், போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும் போன்ற உச்சநீதிமன்ற விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டும்
என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த 77 நிபந்தனைகளில் ஒரு சிலவற்றை தவிர, மற்றவைகளை கடைபிடிக்க அடிப்படை வசதிகள் கிராமத்தில் இல்லாதது, காளைபிடி வீரர்களையும், பொதுமக்களையும், ரசிகர்களையும் பெரும் அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது.

No comments:

Post a Comment