மைக்ரோசாப்ட்டின் இந்திய மொழிகளின் தொழில்நுட்ப வசதிக்காக www.bhashaindia.com என்ற இணைய தளத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தகவல்கொழில்நுட்பச் செய்திகள், மைக்ரோசாப்ட் செய்திகள், சமூக இணையச் செய்திகள், மைக்ரோசாட்டின் கருவிகள், பதிவிறக்கங்கள் மற்றும் மொழி சார்ந்த செய்திகளும் இந்த இணையத்தில் தொகுக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ் ஆபிஸில் தமிழ் உள்ளீடு செய்யும் மென்பொருட்கள் (Driver software) மற்றும் முழுமையாக விண்டோஸை தமிழில் வேலை செய்ய வைக்கக்கூடிய கருவிகளும் (IME's) இந்த இணையத்தில் அளிக்கப்படுகின்றன. இவையனைத்தையும் நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த இந்திய மொழிகளின் தொழில்நுட்பவசதிக்கான இணையம் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்குனி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுக்காக இயக்கப்படுகிறது. செய்திச் சேவைக்காக இவ்விணையம் விருதுகளையும் பெற்றுள்ளது.
http://bhashaindia.com/Pages/AboutBhashaIndia.aspx
No comments:
Post a Comment