அடோப் பிரீமியர் - புத்தக விமர்சனம்
(வீடியோ எடிட்டிங் தொழில்நுட்ப கையேடு)
திரைப்படத்தொகுப்பு மென்பொருட்களில் முக்கியமானது அடோப் பிரீமியர் ஆகும். பிரீமியர் மென்பொருளை அடிப்படையாக தெரிந்தாலே எடிட்டிங் துறையில் நாம் வெற்றி பெற முடியும். இந்த மென்பொருளின் இயக்கம் பற்றியும் ஒவ்வொரு தேர்வு கருவிகளை பற்றியும் விளக்கமாக இந்நூல் தமிழில் படைக்கப்பட்டுள்ளது.
வீடியோகிராபி, ஆடியோ, போஸ்ட் புரொடெக்சன், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ் அனிமேஷன், முக்கிய பிளேக் இன்ஸ், இணையதளங்கள் மற்றும் அடோப் பிரீமியர் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைப்பாடுகள் பற்றியும், கட்டளைகள் பற்றியும் தெளிவாகவும் விரிவாகவும் உள்ளது.
அடோப் பிரீமியர் என்ற வீடியோ மென்பொருள் கலை நூலை மா.ஆண்டோ பீட்டர் நுணுக்கமாக எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே கிராபிக்ஸ் அனிமேஷன் மற்றும் வரைகலைகளுக்கு பல நூல்களை எழுதியுள்ளார்.
வீடியோ கிளிப்பின் அளவை மாற்றுதல், ஒளி ஊடுருவும் தன்மை ஆடியோ மிக்ஸர் என அடோப் பிரீமியரில் உள்ள சிறப்புகளை இந்நூல் கூறுகிறது. தமிழகமெங்கும் பரவியுள்ள கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல் வல்லுனர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். வீடியோ மென்பொருள் துறையில் எந்தவொரு மென்பொருளின் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலத்தில் கைடு வழங்கப்படும். ஆனால் தமிழில் இதுவரை மென்பொருள் கைடு இல்லை எனும் குறையை போக்குகிறது இந்த புத்தகம்.
>ஆசிரியர் பெயர் : “கணியரசு” மா.ஆண்டோபீட்டர்
பதிப்பக முகவரி : சாப்ட்வியூ பதிப்பகம்.
118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை–29
தொலைபேசி : 23741053,wwww.softview.in
விலை: ரூ.110/-
பக்கங்கள்: 160
No comments:
Post a Comment