Search This Blog

Friday, May 11, 2012

சமச்சீர் பாடப்புத்தகங்கள் இலவசமாக ஆப்பிள் ஐ-பேடில் பெறலாம்


விஷ்வக் சொல்யூஷன்ஸ் நிறுவனம்:

விஷ்வக் சொல்யூஷன்ஸ் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, இன்று 9 நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் இந்நிறுவன கிளைகள் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ளது. இணையம் மற்றும் செல்பேசி தொழில்நுட்பத்தில்  நிபுநரான திரு.வெங்கட்ரங்கன் திருமலையின் தலைமையில் இந்நிறுவனம் க்ளவுட்  (Cloud) சொல்யூஷன்ஸ், மைக்ரோசாஃப்ட் ஷேர்பாயின்ட் மற்றும் என்டர்பிரைஸ் மொபிலிட்டி ஆகியவற்றில் நிறைய வளர்ச்சிகளை செய்துள்ளது. இந்நிறுவனச் சேவையை பாராட்டி பல்வேறு நாடுகள் பல விருதுகளையும் அளித்துள்ளது.

செல்பேசி சேவைகள்:

விஷ்வக்கின் செல்பேசி தொழில்நுட்பமானது மிக பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் ஐபோன், ப்ளாக்பெர்ரி, ஆன்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் செல்பேசிகளுக்கு நிறைய மென்பொருட்களை தயாரித்துள்ளது. மேலும் செல்பேசியில் உள்ள தகவல்களை கணிப்பொறி மற்றும் தொலைக் காட்சியிலும் பார்ப்பதற்கு உண்டான மென்பொருளையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் குறிப்பிடக்கூடிய மென்பொருளான யூ.ஆர்.எல். செக்கர் என்பது ஒரு இணைய முகவரி வேலை செய்கிறதா இல்லையா என்பதை பயனீட்டாளருக்கு தெரிவித்து விடும்.  ஸோரோகேவ் எனும் மென்பொருள் விண்டோஸ் செல்பேசிக்கும், ஃபைன்ட் மிஸ்ஸிங் லெட்டர்ஸ் என்ற மென்பொருள் ஐபோன், ஆன்ட்ராய்ட், ப்ளாக்பெர்ரி செல்பேசிகளுக்கும் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் மென்பொருளாகும்.


சமச்சீர் கல்வி புத்தகங்கள்:

இவர்கள் சமீபத்தில் “Tamilnadu Tx” என்ற மென்பொருளை தயாரித்துள்ளனர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சமச்சீர் கல்வியின் பாட புத்தகங்கள் அனைத்தும் 1 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் இந்த மென்பொருளில் அடங்கியிருக்கும். இதனை ஆப்பிள்                   ஐ-பேடில் இலவசமாக படித்துக் கொள்ளலாம். http://itunes.apple.com/ app/tamilnadu_tx/id509199835?mt=8 மற்றும் http://vspl.in/TNTXB  மற்றும் http://www.vishwak.com என்ற இணைய தளத்தில் படிக்கவோ, பதிவிறக்கமோ செய்து கொள்ளலாம். அதாவது மாணவர்கள் தங்கள் எடைக்கு சமமாக பாடப்புத்தகங்களை எடுத்துச் செல்லும் காலம் மறைந்து ஒரே ஒரு ஐபேட்டை எடுத்துக் கொண்டு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். மேலும் இந்த பாடப் புத்தகங்கள் எவ்வளவு முறை படித்தாலும் முதலில் படித்தது எப்படி இருந்ததோ அதே போலவே இருக்கும். ஆனால் பாடத்தை புத்தகத்தின் வாயிலாக படித்தாலோ சீக்கிரமாக கிழிய வாய்ப்புள்ளது. இவை இந்த ஐபேடில் சாத்தியமில்லை.
இந்த மென்பொருளில் கூடிய விரைவில் புக்மார்க்கிங் மற்றும் நோட்டேக்கிங் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெறும் என விஷ்வக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். முக்கிய பகுதிகளை குறித்து வைக்க புக்மார்க்கிங் பயன் படும். வேண்டிய குறிப்புகளை எழுதிக்கொள்ள நோட்டேக்கிங் பயன்படும். இதன் மூலம் மாணவர்கள் எளிய முறையில் பாடங்களை படிக்க முடியும். இப்பாடப் புத்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை இம்மென்பொருளிலும் மாற்றி விடுவோம்  என விஷ்வக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இம்மென் பொருளை ஐட்யூன் தளத்தில் இலவசமாக நாம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். http://vspl.in/TNTXB


2 comments:

  1. Useful post to people want to know what's there in it? But I doubt will be useful for students.

    www.mindsbuilding.com

    ReplyDelete