Search This Blog

Monday, May 28, 2012

அனிமேஷன் படிப்புகள் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் துவக்கம்


 செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி 1923 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியாக தென்தமிழ்நாட்டில் திறக்கப்பட்டது. இக்கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு, சென்னையில் உள்ள சாஃப்ட்வியூ நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு அனிமேஷன் வகுப்புகளை தனி பிரிவாக நடத்தவுள்ளது.

சாஃப்ட்வியூ நிறுவனத் தலைவர் திரு. மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் செயின்ட் சேவியர்ஸ்- சாஃப்ட்வியூ அனிமேஷன் கல்வி ஒருங்கிணைப்பாளராவார். செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியின் அனிமேஷன் லேபில் அனிமேஷன், அச்சுப்பணி, இணையதளம் உருவாக்கம், மல்ட்டிமீடியா, ஈலேர்னிங் என்ற இணையவழி கல்வி உருவாக்கம், வீடியோ எடிட்டிங் பற்றிய பல வகையான பட்டய படிப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் தேவைக்கேற்ப பட்டய படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இந்த பட்டிய படிப்பு மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.





1 comment:

  1. திரு ஆண்டோ பீட்டர் அவர்கள் இயக்கத்தில் சாப்ட்வியுஅனிமேஷன் படிப்புக்கள் தூய சவேரியார் கல்லூரியில் துவக்கப் படுவது மிகப் பெருமை..தொழில் சார்ந்த மிகவும் விரும்பப்படும் துறை அனிமேஷன்... தமிழில் தங்குதடையின்றி மிக எளிதாக கலைச் சொற்களையும் உருவாக்கி தமிழில் கணினிப்படிப்பைஅனைவரும் கற்றுக் கொள்ள வகை செய்த திரு ஆண்டோ பீட்டர் நிறுவனத்துடன் இணைவது நல்ல விஷயம்...வாழ்த்துக்கள்.

    ReplyDelete