
அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் மலேசிய தமிழ் நண்பர்களுக்கும், எனக்கும் முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் கவியரசன். அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு நாட்கள் கொலம்பஸ் ஓகியோவிலுள்ள கவியரசன் வீட்டில் ஒய்வுக்காக தங்கினோம். வெகுநாட்களுக்கு பின் தமிழகத்தில் சுவைக்கும் மீன்குழம்பு முதல் ரஸ்தாளி வரை தின்று மகிழ்ந்தோம். முழுக்கமுழுக்க தமிழக உணர்வை சுவாசித்தோம். கவியரசன் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்: தமிழ் உணர்வு, பண்பாடு, மரியாதை, உடை, ஒழுக்கம் என பட்டியலிட முடியாத பலவற்றையும் கவியரசனின் மனைவி முத்துமாரி (அண்ணி) குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்துள்ளார். இவர் சுறுசுறுப்பான மங்கை, சுவையான சமையற்காரி மற்றும் சுட்டியான அம்மா ஆவார். இவர்களுக்கு பாவை மற்றும் கவின் என பொறுப்பான மழலைகள் உள்ளனர். என்னை பாவை வங்கி மற்றும் கடைதெருவிற்கும், கவின் கொலம்பஸ் மிருகக்காட்சி சாலைக்கும் இட்டுச்சென்றனர். இவர்கள் நால்வரும் அமெரிக்காவில் வேலைப்பொறுப்பில் உள்ளது, மகிழ்வுதரும் அம்சமாகும். கவியரசனின் பல்கலைக்கழகம் அருகே இரு கலைக்கல்லூரிகளும் உள்ளன. இவை கவியரசனின் தம்பி தமிழ்மணிகண்டன் மற்றும் அண்ணியின் தம்பி பத்மாவின் குடும்பமாகும். கலைக்கல்லூரிகளும் சுவையான தமிழக உணவை அமெரிக்காவில் போட்டிபோட்டு படைத்தனர். தமிழ்மணிகண்டன் என்னை கொலம்பஸ் நகரை சுற்றிக்காட்டினார். மொத்தத்தில் கொலம்பஸின் அனைத்து இல்லங்களிலும் தமிழ் மணம் வீசியது.
எங்கிருந்தாலும் தமிழர்களின் பண்பு உயர்ந்தே விளங்கும்.அதை அழகான தலைப்பிட்டு நீங்கள் சொல்லியுள்ள விதம் சிறப்பு.
ReplyDelete