
ஈரோட்டில் புத்தகக்கண்காட்சி ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஈரோடு வ.உ.சி பூங்காவில் நடைபெறுகிறது. தினமும் கண்காட்சி காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை கண்காட்சி நடைபெறும் கொங்குமண்டலத்தில் புத்தக வாசிப்பு பழக்கத்தையும், புத்தகச்சந்தையையும் ஈரோடு புத்தகக்ககாட்சி உருவாக்கியுள்ளது.
ஈரோட்டில் நடைபெறும் மாபெரும் திருவிழாவாகவும், விருந்தினர்கள் பெருவாரியாக திரளும் சக்தியாக இப்புத்தகக்கண்காட்சி உருவாகியுள்ளது. இப்புத்தகக்காட்சியை பொறுப்பேற்று நடத்தி வருபவர் அண்ணன் ஸ்டாலின் குணசேகரன் ஆவார். இவர் ஈரோடு மக்கள் சிந்தனை என்ற அமைப்பை நடத்தி வரும் கம்யூனிசிய மற்றும் சமூகநலவாதி ஆவார். இவருடைய 'விடுலை வேள்வியில் தமிழகம்' (பாகம் 1 & 2 ) மிகவும் புகழ்பெற்றதாகும். தமிழகத்திலிருந்து இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றை சேகரித்து தொகுக்கப்பட்ட நூல். தென்னிந்தியப் புரட்சி முதல் சிறைச்சாலைக் கொடுமைகள் வரை 100 கட்டுரைகள் இந்நூலில் எழுதி ஸ்டாலின்குணசேகரன் தலைநிமிர்ந்துள்ளார்.
ஈரோடு புத்தகக்கண்காட்சியில் என்னுடைய பதிப்பக கடை எண்: 154 , என்னுடைய சாஃப்ட்வியூ நிறுவன பிரதிநிதி சாமிக்கண்ணன் கடையில் இருப்பார். (9840078699) அனைவரும் வருக.
No comments:
Post a Comment