Search This Blog

Wednesday, July 6, 2011

நயாகரா குறவஞ்சி


அமெரிக்க பயணத்தில் நெஞ்சையும், மனதையும் குளிர வைத்த நாள் "நயாகரா பயணம்" செய்த நாள். அழகு, குளிர், மென்மை, அதிசயம், வெள்ளம், சாரல் ஆகியவற்றின் உலகின் 'அதிசய மூலை' என சொல்லலாம். வாழ்வின் குளிரையும், பிரமிப்பையும் அசர வைத்த நாள். அமெரிக்க மற்றும் கனடா நாட்டை இணைக்கும் முனையில், பப்பல்லோ என்ற நகரின் அருகில் நயாகரா அருவி உள்ளது. நயாகரா ஆற்றிலிருந்து அருவியின் அருகில் சென்று வட்டமிட படகு சவாரியும் உள்ளது. படகில் செல்லும் போது நாம் அருவியில் நனையாமல் இருக்க மழை சட்டையும் அளிக்கப்படுகிறது. ஒரு குற்றலாத்திலே இரவெல்லாம் கும்மாளம் போடுவோம், ஆயிரம் குற்றாலத்தை ஓரே நேரத்தில் ஒரே சடையாக பார்த்தால் அதிசயம் தானே... நயாகரா படகில் நண்பர் ஆண்டவர் தன் தந்தையின் நயாகரா குறவஞ்சியையும் அள்ளி வீசினார்.

No comments:

Post a Comment