
பத்தாம் தமிழ் இணைய மாநாடு முடிந்த மதியமே அமெரிக்க சுற்றுலாவிற்கு தயாரானோம். கவியரசன் தலைமையில் எட்டு பேர் இருக்கையாக அமரக்கூடிய டயோட்டா ரதத்தில் சுற்றுலா துவங்கினோம். எங்களுடன் ஆண்டவர் மற்றும் மலேசிய இளைஞர் தமிழ்ப்படையும் வந்தது. சரவணன், செல்வா, நாரா, இளந்தமிழ் ஆகிய நால்வரும் நான்கு தூண்களாக சுற்றுலாவில் இருந்தனர். இனிமையான மாலைப்பொழுதில் வாஷிங்டன் பாராளுமன்றத்தை சென்றடைந்தோம். இப்புகைப்படத்தின் முன்புறம் அமெரிக்க பாரளுமன்றமும், பின்புறம் லிங்கன் ஸ்கொயரும் உள்ளது. உலகின் தலைநகராகிய வாஷிங்டன் சென்றடைந்த மகிழ்ச்சியில் உறங்கினேன். தூங்கிய ஓட்டலின் பில் தான் அடுத்தநாள் சற்று கலக்கத்தை கொடுத்தது. காலையே சுற்றுலா தலைவர் கவியரசன் அசராது ரதத்தை ஒட்டத்துவங்கினார்.
No comments:
Post a Comment