Search This Blog

Monday, July 11, 2011

சூடானைப் போல் தமிழனுக்கு ஈழத்தை சூடு


உலகின் 193வது நாடு மற்றும் ஆப்பிரிக்காவின் 53வது நாடாக சூடான் உதித்துள்ளது. ஆப்பிரிக்காவில் சூடான் நாடுதான் இன்று வரை, பரப்பளவில் பெரிய நாடாக இருந்தது. அந்த நாட்டில் கனிம வளங்கள் அதிகம். அதனைக் குறிவைத்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானை மேற்கத்திய நாடுகள் ஆக்கிரமித்திருந்தன. பிறநாடுகளின் ஆதிக்கத்திலிருந்து சூடான் விடுபட்டாலும், தெற்குசூடான் மக்கள் மட்டும் ‘அடிமை வாழ்வு’க்குள்ளாக வேண்டிய அவலம் நீடித்தது. கருப்பர் இன மக்களைடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அடிமையை வெட்டியெறிந்து இன்று சூடானுக்கு விடுதலை கிடைத்துள்ளது. பல நாடுகள் உருவாகுகின்றன, தமிழனுக்கு ஈழநாடு எப்போது உருவாகும். தமிழக முதல்வரின் தமிழக சட்டசபை தீர்மானமும் இலங்கை மக்களுக்கு பேராதரவையும், மனநிறைவையும் அளித்துள்ளது.

உலகின் மிக சிறியநாடு வாட்டிகன், இந்நாட்டை நடந்தே பார்த்துவிடலாம். அழகான நாடுகளில் லக்ஸம்பர்க்-கும் ஒன்று. இந்நாட்டை பேருந்து மூலமாக 30 நிமிடங்களில் பார்த்துவிடலாம். இவையெல்லாம் இருக்க 3கோடி மக்கள் தொகையுடைய ஈழத்தமிழனுக்கு தனிநாடு அளிக்க கூடாதா? அகதிகளாக உலகமெங்கும் தமிழன் தலை குனிந்து வாழவேண்டுமா? ஐநா மற்றும் உலக அமைப்புகள் ஈழத்தமிழனுக்கும், ஈழமண்ணிற்கும் ஆதரவு தாருங்கள். ஈழ மக்களிடையே அந்நாட்டின் சர்வாதிகார மன்னனுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்துங்கள். தனி அங்கீகாரம் அளித்து உலக அரங்கில் ஈழத்திற்கு பெருமை சேருங்கள். ஈழ மண்ணின் ஒவ்வொரு மண் துகள்களும் உலக அரங்கிற்கு விசுவாசமாக இருக்கும்.

5 comments:

  1. நிலத்திலும்,புலத்திலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கும் போது ஈழம் மலர்ந்தே தீரும்.

    ReplyDelete
  2. ஈழம் நிச்சயம் மலரும் பொறுமையாய் அரசியல் செய்வோம். சூடான், ஈழம் என்பது போல் அல் பஷீர் - ராஜபக்க்ஷேக்களையும் சொல்லியிருந்தா பதிவே ஒரு கெத்தா இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. //அகதிகளாக உலகமெங்கும் தமிழன் தலை குனிந்து வாழவேண்டுமா? //
    இந்தியாவின் தமிழகத்தில் மட்டும் தான் ஈழ தமிழன் அகதியாக தலை குனிந்து வாழ்கிறான். மற்றும் படி உலகமெங்கும் தலை நிமிர்ந்து தான் வாழ்கிறான். ஈழநாடு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் 2009 பின்பு வெளிநாட்டில் இருந்து வருடத்துக்கு ஓரிரு தடவை ஹொலிடேக்கு இலங்கை போய் வருவது மாதிரி தொடர்ந்தும் போய் வருவார்கள்.

    ReplyDelete
  4. *ஈழம் வெல்லும்...
    *காலம் பதில் சொல்லும்....

    சித்தம் கலங்குதே சிந்தித்தால்
    நித்தம் நடந்த யுத்தத்தால்
    சிங்கள வெறியனின் பித்தத்தால்
    புத்தன் குளித்தான் ரத்தத்தால்
    தமிழ் ரத்தத்தால்........

    நிலை மாறும்
    மாற்றுவோம்........

    ReplyDelete