Search This Blog

Thursday, July 7, 2011

நியூயார்க் 'முரட்டுக்காளை'


நியூயார்க்கின் ட்வின் டவர், டைம்ஸ் ஸ்கொயர், வேர்ல்ட் ட்ரேடு சென்டர், எம்பயர் எஸ்டேட், சுதந்திரதேவி சிலை என நியூயார்க்கில் அனைத்தையும் சுற்றி மகிழ்ந்தோம். எங்கள் அமெரிக்க சுற்றுலா அணி நியூயார்க் சென்ற மாலை மிகவும் களைப்பான நாள். ஆனாலும் நியூயார்க்கில் இரவெல்லாம் சுற்றினோம். நியூயார்க் நகரம் உலகின் நிதிக்கான தலைநகரமாகும். நியூயார்க்கில் காலடி வைத்தமை மதிப்பான உணர்வை அளித்தது. களைப்பிலும் பங்குச்சந்தைக்கு அடித்தளமான "வால் ஸ்டீரிட்" செல்லவேண்டும் என்ற ஆவல் மிகவும் உறுத்தியது. வால் ஸ்டீரிட்டிற்கு நடந்தே சென்றோம். பணக்காரர்களின் நடமாட்டமும், அயல்நாட்டு நிறுவனங்களின் தோற்றமும், உலகத்தலைவர்களின் அறிவிப்புமுடைய நடைபாதையும் வால் ஸ்டீரிட்டை அலங்கரித்தன. பங்குசந்தையின் அடையாளச் சின்னமான "காளை" வால் ஸ்டீரிட்டில் பிரம்மாண்டமாக உள்ளது. அயல்நாட்டிலிருந்து வருகை தரும் அனைவரும் முரட்டுக்காளையின் அருகே நின்று அதன் கொம்புடனும், கொட்டையுடனும் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இரவு பங்களாதேஷி ஒட்டலில் சாப்பிட்டமை சுவையை அளித்தது. நியூயார்க் இரவு இனிமையான இரவாகும்.

No comments:

Post a Comment