Search This Blog

Friday, November 4, 2011

மெட்ராஸ் தமிழ் படிங்க வாத்தியாரே?



CHENNAI TAMIL DICTIONARY

அண்ணாத்தை – அண்ணன்
அய்ய – என்ன
அல்பம் -- கஞ்சன்
அல்பாயுசு -- குறைந்த ஆயுள்
அப்பால- அப்புறம்
அவுல் குடுக்குறது- ஏமாற்றுவது
அட்டு- சுமாரான
அம்டுகினியாசு -- மாட்டிக்கொண்டான்
அமுக்கிக்கோ – பேசாதே
அஸ்கு – வேண்டாம்
அப்பீட்டு- வெளியேறுதல்
ஆட்டிகினு -- நேரம் கடத்தல்
இப்பிடிகா- இந்த வழியாக
இட்டுனு- கூட்டிக்கொண்டு
இஸ்குல் -- பள்ளி
இஷ்துக்கினு -- காலம்கடத்தல், இழுத்தல்
ஊத்திகினு – குடித்துவிட்டு
எகிரு- வேகமாக ஓடு
ஒண்டியா – தனியாக
ஒத்து – தள்ளு
ஒரு தபா -- ஒரு தடவை
கம்னாட்டி -- துரோகி
கபாலுனு -- தீடீரென்று
கம்முனு -- அமைதி
கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
கலீஜ்- அசுத்தம்
கட்டு – சீட்டாட்டம்
கவ்ராதே -- ஏமாந்துவிடாதே
கன்பீஸ்-குழப்பம்
காவு – பழிவாங்கு
காண்டு- கோபம்
கஸ்மாலம்,கேனை-முட்டாள்
கில்பான்ஸ்- பளபளப்பான ஆள்
கில்லி- திறமையான ஆள்
கிச்சிலிக்கா – கூச்சம்
கீரான் – இருக்கிறான்
கிச்சிறுவேன் – அழித்துவிடுவேன்
கீது- இருக்கு
குந்திகினு -- அமர்ந்துகொண்டு
குஜால்ஸ்- கொஞ்சல்
குஜிலி- இளம்பெண்
கிருஷ்ணாயில்-மண்ணெண்ணெய்
குந்து-அமர்
கொசுறு -- சிறிய அளவிலான இலவசம்
கெயங்கு – கிழங்கு
கைத்து – கழுத்து
கேலிச்சுடேன் -- வெற்றிசூடல்
கைத -- கழுதை
சல்பேட்டா- மலிவுவிலை மது
சொக்கா – அழகாக
சோத்து கை – வலதுகை
சோமாரி-ஒழுக்கமற்றவன்ல
தவ்லவுண்டு -- கொஞ்சம்
தில்லு – தைரியம்
தேன்டகேசு – பயனற்றது
மாமு, மச்சி -- நண்பன்
மெய்யாலுமே – உண்மை
பன்னாடை -- பயனற்றவன்
பல்பு வுட்டுட்டான்- இறந்துட்டான்
பகிலு- இடுப்பு பகுதி
பலுப்பு -- குழாய்
பாடை -- மரணம்
புட்டுக்கிச்சு -- முடிந்தது
புட்டகேசு -- ஒழிந்தது
பீச்சாங்கை -- இடது கை
பிகிலு—விசில்
பீலா- பொய் சொல்வது
போங்கு- பொறாமை
பேஜார்- அறுவை
போதுக்கு – குண்டு
பையம் – பழம்
டகுள் -- பொய்
டர்- பயம்
டாவு -- காதலி
டுமீல்- பொய்
டொச்சு- அழகில்லா
டமாசு -- சிரிப்பு
வூட்டாண்ட-வீட்டிற்கு பக்கத்தில்
டப்பு-பணம்
மால், மாலு-கமிஷன்
மஜா-கேளிக்கை
மட்டை-போதையில் விழுந்து கிடப்பது
மெர்சல்-பயம்
சொக்கா-சட்டை
பீட்டர்- பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
தொங்குறது- ஒதுங்குதல்
டபாய்குறது- ஏமாற்றுதல்
டம்மி பீஸ்- ஒப்புக்கு சப்பாணி
மெரிச்சிருவேன்- மிதித்துவிடுவேன்
ஜகா வாங்குறது- பின்வாங்குவது
ஜலுப்பு – சளி
ஜல்பு- ஜலதோஷம்
ஜல்சா –சரசம்
ஸட – பயனற்ற

4 comments:

  1. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...

    ReplyDelete
  2. தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்!
    தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்!

    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    சுடர்தந்த தேன்

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    வயிரத் தின் வாள்

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்....
    #############################################

    இப்படி ஒரு பாட்டு எழுதுன பாரதிதாசன் இந்த சென்னை தமிழ் அகராதியை பார்த்தால் வருத்தம் கொள்வார்..
    நல்லவேலை...
    மனுசன் போய் சேர்ந்துட்டார்...

    வாழ்க தமிழ்...!!!

    ReplyDelete
  3. இன்னா நைனா? புச்சா மெட்ராஸ் தமிலு கத்துக்கிரியா? LKG கூட தாண்ட மாட்ட போலுக்குதே. இதுக்குன்னு தனியா க்ராமர்லாங்குது தெர்மா? அண்ணாத்தேல்லாம் போயி எவ்லோ நால் ஆய்ச்சிபா. இப்போல்லாம் ணோவ் தான். அட்டுன்னா சுமாரில்லபா - டுப்லிகெட்டு. அசி ன்னா ஒர்ஜினலு. அட்டுப்பிகருன்னா டூப்லிகெட்டு பிகரு - உன்மியான அலகு இல்லன்ன அர்த்தம். புரீதா நைனா? அதே மேரி பேஜார்னா அருவ இல்ல - தொந்த்ரோவு. பேஜார் புச்சவன்னா தொந்த்ரோவு புச்சவன். நெரியா மிஷ்டேக் உட்ரியே.

    சும்மா ஒரு நகைச்சுவைக்கு. தவறா நெனைக்காதீங்க. நான் பெறந்து வளர்ந்ததெல்லாம் மெட்ராசு தான். ஆனா ஒழுங்காத்தான் தமிழ் பேசுவேன். மெட்ராஸ்காரங்க படுவேகமா பேசுறதாலயும் தெலுங்கு இங்க்ளிஷ் வார்த்தைங்கள நெறய கலக்குறதாலயும் இப்படி ஆகிடுது.

    ReplyDelete