Search This Blog

Friday, November 25, 2011

பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வி யலையும் வரலாற் றையும் பிரதி பலிக்கும் "பாலை" திரைப் படம் தமிழகமெங்கும் வெளியானது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன. நாம்தமிழர் சீமான் தமிழன் வரலாற்றை தமிழர் வாழ்வியலை சிறப்பாக எடுத்து காட்டி இருக்கும் இத்திரைப்படத்தை தமிழர்கள் நாம் வெற்றி பெற செய்ய வேண்டியது நம் கடமை. இப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டுகளித்து பெரு வெற்றி பெற செய்யுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது… இயக்குநர் தங்கர் பச்சான் ‘இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்’ இயக்குநர் வெ.சேகர் ‘இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்’ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ‘வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்’ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ‘ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட’ ஓவியர் புகழேந்தி மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம், ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் “எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்”

No comments:

Post a Comment