கி.தனவேல் ஐஏஎஸின் வாழ்த்துரை
‘கம்ப்யூட்டர் வைரஸ்’ என்னும் இந்த நூலில் வைரஸ் என்றால் என்ன என்பது பற்றியும், வைரஸிலிருந்து கம்ப்யூட்டர்களை காப்பது எப்படி? கம்ப்யூட்டர்களை பாதிக்கக்கூடிய வைரஸ் வகைகள் என்னென்ன? அவைகளால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மை என்னென்ன? பொதுவாக கம்ப்யூட்டர்களை பராமரிப்பது எப்படி? கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவைகள் எவை? என்பன குறித்து பல பயனுள்ள விவரங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மேலும், செல்பேசி வைரஸ்கள் பற்றியும், பயனுள்ள இணையங்கள் குறித்த விவரங்களையும் கூறியுள்ளார். கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் வகையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.
தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி தமிழ்நாட்டில் கணினி அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில், இத்தகைய நூல்கள் வெளியிடப்படுவது வரவேற்கத்தக்கது.
இளமைக் காலந்தொட்டே நண்பர் மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் கணித்தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு செயலாற்றி வருவதை நான் நன்கு அறிவேன். அவரது இந்த நல்ல முயற்சிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பெயர் : “கணியரசு” மா.ஆண்டோபீட்டர்
பதிப்பக முகவரி : சாப்ட்வியூ பதிப்பகம். 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை–29
தொலைபேசி : 23741053,wwww.softview.in
விலை : ரூ.60/-
பக்கங்கள் : 80
No comments:
Post a Comment