Search This Blog

Sunday, November 20, 2011

இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் ரயில்



உலகின் மிக்பபெரிய ரயில் பாதை மாஸ்கோ விலிருந்து விளாடி வியஸ்க் வரை உள்ள (9259 கிமீ) ரஷ்ய ரயில் பாதையாகும். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாதை அமைக்கப்பட்டு 'விவேக் எக்ஸ்பிரஸ்' விடப்படவுள்ளது. இந்த ரயில் பாதை தூரம் 4286 கிமீ ஆகும். இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து , அஸ்ஸாமின் திம்ப்பூர் வரை நவம்பர் 26 முதல் செல்கிறது. பயண நேரம் 82.30 மணி நேரமாகும். இந்த ரயில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இந்த ரயில் பாதை உலகின் 8வது பெரிய ரயில்வழியாகும். ஐரோப்பாவில் ரயிலில் பயணம் செய்யும் போதே மலைப்பாக இருக்கும். இந்தியர்களுக்கு இந்த ரயில் பாதை பெரிய வரப்பிரசாதம் தான். அது இருக்கட்டும், தமிழகத்தில் அகல ரயில் பாதைக்காக, பல ரயில் பாதைகள் தோண்டப்பட்டு நிறைவேறாமல் உள்ளது. அதையும் சற்று கவன்ம் செலுத்தினால் நலமாக இருக்கும்.

1 comment:

  1. நல்ல செய்தி சொன்னீங்க சார். உங்க கட்டுரைகளை பல பத்திரிக்கைகளில் படிச்சிருக்கேன் சார். என்னுடைய ஓவிய ஆர்வததுக்கும் நீங்களும் ஒரு காரணம் சார். நன்றி.

    ReplyDelete