Search This Blog

Sunday, October 9, 2011

வீரமாமுனிவர்


தமிழ்மேதைகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் கிறித்துவ மதகுரு வீரமாமுனிவர். தமிழில் தேம்பாவனியை படைத்தவர். வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மங்கலம்பேட்டை என்ற சிற்றூரின் அருகிலுள்ள (5.8 கிமீ தூரத்தில்) கோணங்குப்பம் என்ற தாழ்த்தப்பட்ட கிரமாத்தில் (காடு) பெரியநாயகி மாதா கோவிலில் உள்ளது. (படத்தில் காண்க) வீரமாமுனிவர் இத்தாலி நாட்டின் வெனிசுலாவில் 1680 ஆம்ஆண்டு பிறந்தார். தமிழகத்திற்கு வந்த அவர் தமிழ்கலாச்சரத்திற்கு ரசிகனாகி தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் கற்றுள்ளார். மேரிமாதாவை தமிழ்பெண்ணாக வடிவமைத்து பிலிப்பைன்ஸில் சிலையை வடிவமைத்துள்ளார். இது அழகான முகபாவம் கொண்ட சிற்பமாகும். கிறித்துவ கோயில்களில் மாதாவிற்கு சேலை உடுத்துவதும், சேலையை காணிக்கையாக அளிப்பதும் இந்த பெரியநாயகி மாதா திருத்தலத்தில் தான். (மாதா காதில் ஜிமிக்கியும் உண்டு)

250 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி காடாக இருந்துள்ளது. ஓநாய்களும், நரிகளும், காட்டுப்பன்றி வாழ்ந்த இடமாகும். வீரமாமுனிவர் இரு மாதாசிற்பங்களுடன் இந்த காட்டிற்கு வந்துள்ளார். அவர் காட்டில் உறங்கும் போது சிறுவர்கள் ஒரு சிலையை மண்ணில் புதைத்து ஒளித்துவிட்டார்கள். சிலை தொலைந்து விட்டதை அறிந்த வீரமாமுனிவர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மிகவும் மனக்கவலையுடன் நொந்து அக்காட்டைவிட்டு தஞ்சை சென்றுள்ளார். தஞ்சை சென்ற அவர் ஏலக்குறிச்சியில் ஒரு கோயிலைக்கட்டி தன்னிடம் இருந்த மற்றொரு சிலையை நிறுவியுள்ளார். பல ஆண்டுகள் கழித்து கோணங்குப்பம் வந்த அவர் இப்பகுதியின் குறுநிலமன்னரை சந்தித்துள்ளார். குழந்தைபேறு இல்லாத இக்குறுநில மன்னர் தனக்கு குழந்தை வரம் வேண்டி வீரமாமுனிவரிடம் முறையிட்டுள்ளார். வீரமாமுனிவரின் அருளாலும், பிராத்தனையாலும் அக்குறுநிலமன்னருக்கு குழந்தை பேறுகிடைத்தது. அதற்கு கைமாறாக வீரமாமுனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க கோணங்குப்பத்தில் அச்செல்வந்தர் பெரியநாயகி திருத்தலத்தை கட்டியுள்ளார். அத்திருத்தல வாயிலில் வீரமாமுனிவருக்கு ஆள் உயர சிலை பராமரிப்பு இல்லாமல் உள்ளமை எனக்கு கவலையாக இருந்தது. விஜயதசமி விடுமுறையில் என்னை மெய்சிலிர்க்க வைத்த தமிழ் திருத்தலம் ஆகும்.

நவம்பர் 8 : வீரமாமுனிவர் நினைவுதினம் ( என் தந்தை மறந்த தினம் )

கூடுதல் தகவல்கள்: http://en.wikipedia.org/wiki/Konankuppam

1 comment:

  1. வீரமாமுனிவருக்கு முன்னர் தமிழில் எகரம் ஏகாரமாவும்,மேல் புள்ளி வைத்த எகரம் ஏகாரமாவம் இருந்து வந்ததாக அறியப்படுகின்றது.வீரமாமுனிவர் எகர ஏகார வரிவத்தினை மாற்றி அமைத்தவர் ஆவார். அது போல் ெ என்பது ஏகாரக் கிறியீடாகவும் ெ என்பதன் மீது ப்ளியிட்டால் ஏகாலக் குறியீடாகவும் இருந்தது. மற்பொதுள்ள எகர, ஏகார உயிர்க் குறியீடுகள் முறையே ெ மற்றும் ே ஆகியவை வீரமாமுனிவர் ஏற்படுத்தியதாகும்.

    ReplyDelete