வீட்டு மனைக்கண்காட்சி: வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் செய்து பார்
உலகின் சிறந்த முதலீடு வீடும், மனையும் தான். குறிப்பிட்ட வயதில் நாம் வீட்டைக் கட்டி குடிபுகுந்தாலே சமூகத்தில் நமக்கு நல்ல அந்தஸ்து கிடைக்கிறது. வீடு கட்டுதலை பாரமாக நினைப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு இன்று ஆறுதலாக உள்ளது.
கம்ப்யூட்டர் புரட்சிக்கு முன் ரியல் எஸ்டேட் மேதாவிகளே உலகின் பெரிய பணக்காரர்களாக வலம் வந்துள்ளனர். அந்த அளவுக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாக ரியல் எஸ்டேட் உள்ளது. இன்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகளை பார்ப்போர் பலரும் உள்ளனர். பணம் வைத்திருந்தும் நல்ல சொத்துக்களை வாங்க முடியாமல் பலரும் திணறுகின்றனர். நல்ல இடத்தில், நல்ல வாஸ்துவுடன் மற்றும் நல்ல வசதியுடன் கூடிய சொத்தை வாங்குவதை தான் பலரும் விரும்புகின்றனர். வீட்டு மனை, வீடு, அலுவலகம், தோட்டம், பண்ணை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு ஆகியவற்றை மொத்தமாக திரட்டி விற்பதற்கு கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. இக்கண்காட்சிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.
ஜூன் 23-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'ரியல்லூக் மீடியா நிறுவனம்' பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் கண்காட்சியை துவக்கியது. கண்காட்சியை சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், கணித்தமிழ்ச்சங்க தலைவர் மா. ஆண்டோ பீட்டர் மற்றும் தொழிலதிபர் செந்தில் துவக்கி வைத்தனர். கண்காட்சியின் கூட்டத்தை கண்டு அனைவரும் மலைத்தனர்.
No comments:
Post a Comment