Search This Blog

Friday, June 22, 2012

பள்ளி ஆசிரியராக என்னென்ன படிப்புகள் படிக்கவேண்டும் ?



பள்ளி ஆசிரியராக என்னென்ன படிப்புகள் படிக்கவேண்டும் ?


தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பட்டப் படிப்புகளில் 9 பட்டப் படிப்புகள் மற்ற படிப்புகளுக்கு இணையானது என்றும், 2 பட்டங்கள் இணையில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 12ம் தேதி தகுதித் தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 50 ண்டுஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தவர்களில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்து பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

அதில் சில பட்டப் படிப்புகள் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதி உள்ளவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சுமார் 23 பட்டப் படிப்புகள் மற்ற படிப்புகளுக்கு இணையானதா என்று கேட்டு  ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.  அதன் பேரில், இணையான படிப்புகள் பட்டியலை  பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செய லாளர் சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு  விண்ணப்பித்துள்ளவர்களின் கல்வித் தகுதி, குறிப்பிட்ட சில  படிப்புகளுக்கு இணையானதா என்று சான்றளிக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கேட்டிருந்தார். அதன்படி 23 பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையானதுதானா என்பது குறித்து சமநிலைக் குழு  ஆய்வு செய்தது. சமநிலைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் 9 பட்டப் படிப்புகள் இணையானவை என்றும் 2 பட்டங்கள் இணையில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி,

!!! சென்னைப் பல்கலைக் கழக பி.எஸ்சி (புள்ளியியல்) பட்டப் படிப்பு , பி.எஸ்சி (கணக்கு)க்கு இணையானது. ஆனால் அவர்கள் பிஎட் படித்திருக்க வேண்டும்.

!!! சென்னைப் பல்கலைக் கழக பி.எஸ்சி பிளாண்ட் பயோ டெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி,  மதுரை காமராஜர் பல்கலைக் கழக பி.எஸ்சி சுற்றுச் சூழல் பயாலஜி, ஆகியவை, பி.எஸ்சி (தாவரவியல்) படிப்புக்கு இணையானவை.

!!! சென்னைப் பல்கலைக் கழக பி.எஸ்சி(சுற்றுச் சூழல் விலங்கியல்), பிஎஸ்சி (விலங்கியல்)க்கு இணையானது.

!!! சென்னைப் பல்கலைக் கழக எம்.எஸ்சி ( 5 ஆண்டு வேதியியல் படிப்பு) , பி.எஸ்சி(வேதியியல்) படிப்புக்கு இணையானது.

!!! பாரதிதாசன் பல்கலைக் கழக பிஎஸ்சி (இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்) , பி.எஸ்சி (இயற்பியல்) படிப்புக்கு இணையானது(பிஎஸ்சி இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பி.எட்(இயற்பியல்) பட்டம் பெற்றவர்கள் பள்ளிகளில் இயற்பியல் பாடம் நடத்த தகுதியானவர்கள்)

!!! பெரியார் பல்கலைக் கழக பி.ஏ ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), அவினாசி லிங்கம் பல்கலைக கழக பி.ஏ (பங்ஷனல் இங்கிலீஷ்) ஆகிய இரண்டும் பி.ஏ ஆங்கில பட்டத்துக்கு இணையானவை. மேற்கண்டவை தவிர சென்னைப் பல்கலைக் கழக பி.ஏ சிறப்பு ஆங்கிலம், வணிகவியல் ஆங்கிலம் ஆகிய இரண்டு படிப்புகளும், பி.ஏ ஆங்கிலத்துக்கு இணையானவை அல்ல. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


1 comment: