Search This Blog

Tuesday, June 28, 2011

மெய்சிலிர்க்க வைத்த முத்துமணி


பிலடெல்பியா நகரம் உலக அரங்கில் கல்விக்கு புகழ்பெற்றது. பிலடெல்பியா பல்கலைக்கழகத்தையும், மருத்துவ கல்வி மையத்தையும் வாசு ரங்கநாதனின் நண்பர் முத்துமணி சுற்றி காண்பித்தார். தமிழ் இணைய மாநாட்டின் அலுவல் பணிகளை செய்த முத்துமணி மருத்துவ ஆராய்ச்சியாளர் என்பதை உணர்ந்தேன். இவர் ஒரு வைராலாஜி ஸ்பெஷலிஸ்ட் எச்ஐவி முதல் டெங்கு காய்ச்சல் வரை பல்வேறு நோய்களின் வைரஸ்களை வளர்த்து வருகிறார். சிக்கன்குனியாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளார். ஆராய்ச்சியாளர் முத்துமணியுடன் உலகின் முதல் இருதய பைபாஸ் சர்ஜரி நடந்த அரங்கை சுற்றிப்பார்த்தோம். மருத்துவமனையை சுற்றிப்பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.

முத்துமணி 2000 ஆம் ஆண்டும் இளம் அறிஞர்களுக்கான நோபல் பரிசு சான்றிதழை பெற்றுள்ளார். முத்துமணியின் மருத்துவ அலுவலகத்தில் பத்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளார்களாம். இவரும் விரைவில் நோபலை பெற்று தமிழனின் பெருமையை நிலைநாட்டுவார் என நம்புகிறேன்.

1 comment:

  1. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
    இன்னும் பல சாதனைகள் படைக்கட்டும்...

    ReplyDelete