Search This Blog

Tuesday, June 28, 2011

அமெரிக்கா: தமிழ் இணையம்


2002 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டிற்கு எனக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டது. பல ஆண்டுகள் காத்திருந்தேன். இவ்வாண்டின் தமிழ் இணைய மாநாடு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஜூன் 17 முதல் 19 வரை நடத்தப்பட்டதையொட்டி நியூயார்க் நகரத்திற்கு 16ந் தேதி விரைந்தோம். நியூயார்க் நகரம் வாயிலாக மாநாடு நடக்கும் பிலடெல்பியா நகரை சென்றடைந்தோம். இந்தியாவிலிருந்து டாக்டர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் 18 போர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டை வாசுரங்கநாதன், கல்யாண சுந்தரம் மற்றும் பெருங்கணிக்கோ கவியரசன் ஆகியோர் சிறப்புடன் நடத்தினர். இதுவரை நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் சிறந்த மாநாடாக அமெரிக்க மாநாடு நடைபெற்றதாக டாக்டர்.ஆனந்தகிருஷ்ணன் மனம்திறந்து கூறினார். நான்கு நாட்கள் பிலடெல்பியா நகரில் இருந்துவிட்டு வாஷிங்டன் சென்றடைந்தேன்.

No comments:

Post a Comment