Search This Blog

Sunday, September 19, 2010

கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி

செல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை அலங்கரிக்க வந்துள்ளது.

முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியில் உள்ள தமிழ்ச் சொற்களை இந்த நவீனக் கருவியில் நீங்கள் தமிழிலேயே தேடலாம். இந்தச் செயலியின் உதவிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள சில விளக்கங்களை இணைப்பில் உள்ள படம் காண்பிக்கின்றது.

மேலும் இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி என்பதால், ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானத் தமிழ்ச் சொற்களைத் தேடுவது கடினம். என்றாலும், ஆங்கிலச் சொற்களைத் தேடும் போது, அந்தச் சொற்கள் தோன்றும் விளக்கங்களைக் கொண்ட தமிழ்ச் சொற்கள் பட்டியலிலப்படும்.

இந்தச் செயலி இன்று ஆப்பிள் நிறுவனத்தின் ‘செயலிக்கூடத்தில்’ (App Store) பதிப்பிக்கப்பட்டுள்ளது. செல்லினத்தைப் போன்று இது இலவசப் பதிவிறக்கம் அன்று. சிறிய கட்டணம் உண்டு. US$4.99 மட்டுமே!

அரிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து நாங்கள் வழங்கிவருவதற்கு இந்தச் சிறிய தொகை உழைப்பிற்கான ஊதியத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

மேலும் படங்களையும் விவரங்களையும் இந்த முகவரியில் காணலாம்

http://itunes.apple.com/app/lifco-sellinam-tamil-dictionary/id391740615?mt=8

No comments:

Post a Comment