

சென்னை மைலாப்பூரிலுள்ள தேஜா பவனில் புதுமைப்பித்தன் கவிதைகள் மற்றும் கல்வி சிடிக்கள் வெளியீட்டு விழா வியாழக்கிழமை காலை (25.11.2010) அன்று நடைபெற்றது. சிடிக்களை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை அரசுச் செயலர் டபிள்யு.சி.டேவிதார் ஐ.ஏ.எஸ், அவர்கள் வெளியிட தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றச் செயலர் கவிஞர் இளையபாரதி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மேலும் விழாவில் கணித்தமிழ்ச் சங்கத் தலைவர் மா. ஆண்டோபீட்டர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் டாக்டர் அருள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக ஊடகவியல்துறை துறைத் தலைவர் சுந்தரவேஸ்ரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.