Search This Blog

Showing posts with label Softview. Show all posts
Showing posts with label Softview. Show all posts

Saturday, April 28, 2012

சித்திரை புகைப்படக் கண்காட்சி

வீடியோ-ஆடியோ எடிட்டிங், கிராபிக்ஸ், அனிமேஷன், ஜர்னலிசம், விசுவல் கம்யூனிகேஷன் ஆகிய பட்டய படிப்புகளை செவ்வனே பயிற்சி அளித்துவரும் "சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்" நிறுவனம், போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது. போட்டோகிராபி பாடத்திட்டம் மூலமாக பத்திரிகைகள், தொலைகாட்சி மையங்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் தொழிற்மையங்களில் வேலைவாய்ப்பை பெறலாம்.

மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்க மற்றும் சிறந்த மாணவர்களை, கலைத்துறையில் அடையாளம் காட்ட ஆண்டுதோறும் சித்திரை புகைப்படக் கண்காட்சியை சாஃப்ட்வியூ நிறுவனம் நடத்தி வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் செல்லாஸ்-இல் காலை 10.00 மணி முதல் சிறப்புடன் நடைபெற்றது. பல தலைப்புகளுடன் (சமூகம், நீர்வளம், கழனி, பாவனைகள்,  நொடி) நடத்தப்படும் இப்புகைப்படக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பங்கு ஏற்கின்றன. சிறந்த மாணவர்களுக்கு விருதுகளும், வேலைவாய்ப்பையும் அளித்து சாஃப்ட்வியூ கவனிக்கிறது. இவ்வருட 2012 சித்திரைப் புகைப்படக் கண்காட்சியில் இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் ஜே.எஸ். நந்தினி, சின்னத்திரை நட்சத்திரங்கள் பிரியா, கௌரி ஆகியோர் கலந்து கொண்டனர். வயல் வரப்பு குறித்த புகைப்படத்தை எடுத்த சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தமிழ் இலக்கியன் முதல் பரிசு பெற்றார். இச்சித்திரைப் புகைப்படக் கண்காட்சியில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வீடியோ கிராபி மற்றும் போட்டோகிராபி பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆழமாக கற்றுத்தரப்படுகிறது. இதன் அடுத்த வகுப்பு மே 5ம் தேதி (சனிக்கிழமை) இதன் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றது. கூடுதல் விவரங்களை அறிய அணுகவும்

திருமதி.கவிதா, சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் 117, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி : 044 - 4211 35 35, 99400 84476 E-Mail: softviewindia@gmail.com


Click and View the Photo Gallery at www.tamilcinema.com


Click and View the Invitation at Vallamai


Click and view the Nakkeran Magazine News


Click and view the news in Webulagam.com



Wednesday, July 20, 2011

ஜூலை 19 : சிஎஸ்சிக்கு கருப்பு தினம்


சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷனின் நிறுவனர் திரு.த.அய்யம்பெருமாள் (வயது 56) காலமானார். விருதுநகரில் பிறந்த இவர் எம்ஈ பட்டம் பெற்றவர். தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் 525 கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். தமிழகத்தின் கணிப்பொறி வரலாற்றில் பட்டிதொட்டியெங்கும் கணிப்பொறி பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து 83 சிஎஸ்சி கிளை அனிமேஷன் துறைக்காக நடத்தி வருகிறேன். சிஎஸ்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 1,80,000 பேர் கணிப்ப்பொறி பயிற்சி பெற்று வருகின்றனர். ஜூலை 19 (செவ்வாய்க்கிழமை) மாலை 8.45 அளவில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கடும் மாரடைப்பால் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு ஆதம்பாக்கத்தில் 20ந் தேதி மாலை நடைபெற்றது. அன்னாரின் அஸ்தி பெசன்ட்நகர் கடற்கரையில் இன்றே கரைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு சிஎஸ்சியின் விருது நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் ஐடித்துறை நசிவடைந்து மோசமாக இருந்தது. அச்சூழலிலும் நிர்வாகம் அடிபடாமல், தடையின்றி முக்கிய கருவியாக செயல்பட அய்யம்பெருமாளின் ஆலோசனைகள் இருந்தன. ஆகையால் அன்று அவரை "இரும்பு மனிதர்" என்று அழைத்தேன். இன்று அந்த இரும்பு தரைமட்டமாகிவிட்டது. தமிழகத்தில் இலட்சக்கணக்கில் கணினி படித்த மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் பணிபுரியும் சிஎஸ்சி ஊழியர்கள் அனைவருக்கும் ஜூலை 19 கருப்பு தினம் தான். கணினி உலகில் சுறுசுறுப்பான தமிழனை நம் மண் இழந்துவிட்டது.

Sri.IyemPerumal interview in Microsoft's bhashaindia:
http://bhashaindia.com/Patrons/SuccessStories/ta/pages/Iyamperumal.aspx

கீழே ஸ்ரீ.அய்யம்பெருமாள் அவர்களிடம் தங்கள் கண்ட அனுபவங்களையும், குறிப்புகளையும் எழுதினால், அவரைப்பற்றி நர்ன் எழுதும் நூலுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

Wednesday, July 13, 2011

வணிக கதிரின் அட்டைப்படம்


வணிக கதிர் மாத இதழின் ஜூலை மாத அட்டைப்படம் என்னை அலங்கரித்து, என்னுடைய பேட்டியை வெளியிட்டமை, என்னை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என்னுடைய பேட்டியையும் இணைத்துள்ளேன்.
http://www.softview.in/vanigakathir.pdf