Search This Blog

Friday, July 27, 2012

கணியரசு மா.ஆண்டோ பீட்டரின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி அழைப்பு பத்திரிக்கை




Tuesday, July 10, 2012

திருக்குறளும் அரிய தகவல்களும்


* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812
 * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்
 * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
 * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
 * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700
 * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250
 * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330
 * திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
 * திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194
 * திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
 * திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
 * திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
 * திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
 * திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü
 * திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
 * திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
 * திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி
 * திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் - ளீ, ங
 * திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்
 * திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
 * திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
 * திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்.
 * திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
 * திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
 * "எழுபது கோடி' என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
 * "ஏழு' என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
 * திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது
 * திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் வெளிவந்துள்ளது.
 * திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
 * திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 * திருக்குறளுக்கு ஒரு வரியில் இருவர் உரை எழுதியுள்ளனர்.


Friday, July 6, 2012

அமெரிக்கா கவியரசனின் நூல் வெளியீட்டு விழா


அமெரிக்காவின் கொலம்பஸ் ஒஹியோவில் கணினி நிதிசார் சேவையில் கவியரசன் பணிபுரிந்து வருகிறார். கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் உத்தமத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்த கவியரசனின் நூல் வெளியிட்டு விழா வரும் 14ந் தேதி சென்னை காஞ்சி ஓட்டலில் நடைபெறுகிறது.  அழைப்பிதழ் இணைத்துள்ளேன்






Thursday, July 5, 2012

ஆனந்த விகடன் பேட்டி

100  சதவீத வேலைவாய்ப்பை அளிக்கும் என்னுடைய சாப்ட்வியூ மீடியா காலேஜ் குறித்து நான் அளித்த பேட்டி ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. நீங்களும் படித்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் என் நிறுவனத்தை பற்றி கூறலாமே.... ( ஆனந்த (என்) விகடன் தேதி: 11.7.2012)






தினத்தந்தி கோகுலம் கதிரில் "பயனுள்ள 10 இணையத்தளங்கள்" கட்டுரை

தினத்தந்தி கோகுலம் கதிரில் "பயனுள்ள 10 இணையத்தளங்கள்" கட்டுரை வெளியாகியுள்ளது. கம்ப்யூட்டரை பயன்படுத்த தேவையான பத்து இணையத்தளங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. நீங்களும் படியுங்கள்.




Monday, July 2, 2012

வைரமுத்து கவிதை நூல் வெளியிட்டு விழா- அழைப்பிதழ்

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் கவிதை நூல் வெளியிட்டு விழா ஜூலை 13ந்தேதி மாலை 6 மணிக்கு காமராசர் அரங்கில் நடைபெறுகிறது.
(அழைப்பிதழ் காண்க)






திரைப்படஇயக்குநர் சீமான் ஆவணப்படம் வெளியீட்டார்


திரைப்பட இயக்குநர் சீமான் 

ஆவணப்படம் வெளியீடு



சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் சுனில்குமார் இயக்கிய ‘அழியாத ஈமங்கள்’ மற்றும் ருத்ரவேல் யக்கிய ‘டாக்குமென்ட்ரி பண்ண போறோம்’ ஆகிய ஆவணப்படங்கள் சென்னையிலுள்ள ஆழ்வார்திருநகரில் (1.7.2012) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. திரைப்பட இயக்குநர் சீமான் வெளியிட, தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சாஃப்ட்வியூ இயக்குநர் மா.ஆண்டோ பீட்டர் மற்றும் பெருவாரியான சாஃப்ட்வேர் மீடியா காலேஜ் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

1, இயக்குநர்  சீமான் வெளியீட்டின் கூடுதல் புகைப்படங்களை பார்க்க :


2. இயக்குநர்  சீமான் வெளியீட்டின்  வீடியோவை பார்க்க :
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/july/seeman.asp


3. இயக்குநர் சீமான் வெளியீட்டை  ஆங்கிலத்தில் படிக்க :