Search This Blog

Monday, August 22, 2011

பெரியார் திடலில் இதழியல் பயிற்சி


பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் களம் ஆண்டுதோறும் இளைஞர்களுக்கு தமிழ் இதழியல் அறிவை அளித்திட பயிற்சிப்பட்டறை நடத்தி வருகிறது. இவ்வாண்டின் இதழியல் பயிற்சி ஆகஸ்டு 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்றது. திராவிடர் கழகம் உறுப்பினரின் ஒப்புதல் பெற்ற இளைஞர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ளலாம். இவ்வாண்டு சரிவர கல்லூரிகள் திறக்காவிட்டாலும் சுமார் 25 மாணவர்கள் இந்த இதழியல் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். இவற்றில் மூவர் என்னுடைய மாணவர்களாவர்.

ஊடகத்துறையிலுள்ள பிரபலங்கள் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்ற அழைக்கப்படுவார்கள். இதழியல் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தமிழ் இணைய இதழ்கள் குறித்த தலைப்பில் பேச சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள். மாணவர்களுடன் ஒரு மணி நேரம் நான் உரையாற்றினேன். பெரியார் திடலில் நடைபெற்ற இப்பயிற்சியை நண்பர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் சிறப்புடன் வழிநடத்தினார்.