Search This Blog
Sunday, April 29, 2012
சித்திரை புகைப்பட கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள்
லேபிள்கள்:
சித்திரை புகைப்பட கண்காட்சி
Saturday, April 28, 2012
சித்திரை புகைப்படக் கண்காட்சி
வீடியோ-ஆடியோ எடிட்டிங், கிராபிக்ஸ், அனிமேஷன், ஜர்னலிசம், விசுவல் கம்யூனிகேஷன் ஆகிய பட்டய படிப்புகளை செவ்வனே பயிற்சி அளித்துவரும் "சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்" நிறுவனம், போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது. போட்டோகிராபி பாடத்திட்டம் மூலமாக பத்திரிகைகள், தொலைகாட்சி மையங்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் தொழிற்மையங்களில் வேலைவாய்ப்பை பெறலாம்.
மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்க மற்றும் சிறந்த மாணவர்களை, கலைத்துறையில் அடையாளம் காட்ட ஆண்டுதோறும் சித்திரை புகைப்படக் கண்காட்சியை சாஃப்ட்வியூ நிறுவனம் நடத்தி வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் செல்லாஸ்-இல் காலை 10.00 மணி முதல் சிறப்புடன் நடைபெற்றது. பல தலைப்புகளுடன் (சமூகம், நீர்வளம், கழனி, பாவனைகள், நொடி) நடத்தப்படும் இப்புகைப்படக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பங்கு ஏற்கின்றன. சிறந்த மாணவர்களுக்கு விருதுகளும், வேலைவாய்ப்பையும் அளித்து சாஃப்ட்வியூ கவனிக்கிறது. இவ்வருட 2012 சித்திரைப் புகைப்படக் கண்காட்சியில் இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் ஜே.எஸ். நந்தினி, சின்னத்திரை நட்சத்திரங்கள் பிரியா, கௌரி ஆகியோர் கலந்து கொண்டனர். வயல் வரப்பு குறித்த புகைப்படத்தை எடுத்த சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தமிழ் இலக்கியன் முதல் பரிசு பெற்றார். இச்சித்திரைப் புகைப்படக் கண்காட்சியில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வீடியோ கிராபி மற்றும் போட்டோகிராபி பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆழமாக கற்றுத்தரப்படுகிறது. இதன் அடுத்த வகுப்பு மே 5ம் தேதி (சனிக்கிழமை) இதன் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றது. கூடுதல் விவரங்களை அறிய அணுகவும்
திருமதி.கவிதா, சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் 117, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி : 044 - 4211 35 35, 99400 84476 E-Mail: softviewindia@gmail.com
Click and View the Photo Gallery at www.tamilcinema.com
Click and View the Invitation at Vallamai
Click and view the Nakkeran Magazine News
Click and view the news in Webulagam.com
Click and View the Photo Gallery at www.tamilcinema.com
Click and View the Invitation at Vallamai
Click and view the Nakkeran Magazine News
Click and view the news in Webulagam.com
லேபிள்கள்:
Softview,
சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்
Saturday, April 21, 2012
லண்டன் ஒலிம்பிக் பாடலில் தமிழ்!
2012 ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெறவுள்ளது. (27 July 2012) ஒலிம்பிக்
போட்டிக்கு உலக மொழிகள் பேசும் அனைவரையும் வரவேற்க “வரவேற்பு வீடியோ” தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு
வீடியோ ஒலிம்பிக் தொடங்க இருக்கும் 100 நாட்களை
முன்னிட்டு வெளியிடப் பட்டுள்ளது. இந்த வீடியோவின் முதல் சொல்லாக ‘தமிழ் மொழி’ இருப்பது பெருமையாகவுள்ளது. வாழ்க
தமிழ்! வளர்க தமிழ்!
Wednesday, April 18, 2012
முதல் தமிழ்க்கணினி கருத்தரங்கு
FIRST TAMIL COMPUTING CONFERENCE
முதல் தமிழ்க்கணினி கருத்தரங்கு அண்ணாப்பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5,6 தேதிகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் பணிகளை பேரா.வெ.கிருஷ்ணஞமூர்த்தி மேற்கொண்டார். அக்கருத்தரங்கை ஒட்டி தரமான ஆய்வுத்தொகுப்பும் வெளியிடப்பட்டது. இதன் ஆலோசனைக்குழுவில் முனைவர். மு.ஆனந்தகிருஷ்ணன், முனைவர்.அவ்வைநடராசன், முனைவர்.வி.ஞானபிரகாசம், சுஜாதா மற்றும் டி.எஸ்.முத்துகிருஷ்ணன் இடம் பெற்றனர். ஆய்வு மலரை தங்களுக்காக தொகுத்துள்ளேன்.
http://kanithamizh.in/Tamizhum_kaniporiyum_ScanBy_Softview.pdfhttp://kanithamizh.in/Tamizhum_kaniporiyum_ScanBy_Softview.pdf
ஜுனியர் விகடனில் 'புத்தகதினம்' சிறப்பு கட்டுரை
ஜுனியர் விகடனில் 'புத்தக தினம்' சிறப்பு கட்டுரையை (18/4/2012) பத்திகையாளர் தமிழ் மகன் படைத்துள்ளார். கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் ஆண்டோபீட்டர் மற்றும் ஏ.ஜி ராமகிருஷ்ணனின் செய்திகளும் வெளியாகியுள்ளன.
Wednesday, April 11, 2012
தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருது பட்டியல்
Friday, April 6, 2012
தினத்தந்தி கோகுலம் கதிரில் கணினி கட்டுரை
தினத்தந்தி கோகுலம் கதிரில் கணினி கட்டுரை
தினத்தந்தி நாளிதழ் ராணி, ரராணிமுத்து ஆகிய இதழ்களை வெளியிட்டு வருகிறது. தற்போது அவர்களுடைய கோகுலம் கதிர் இதழுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினத்தந்தி ஏப்ரல் மாத கோகுலம் கதிரில் நான் எழுதிய கணினி கட்டுரையை படியுங்கள்
Thursday, April 5, 2012
கம்ப்யூட்டர் கேம்ஸ் தயாரிப்பது எப்படி? (பயிற்சி)
கம்ப்யூட்டர், வீடியோ மற்றும் செல்போனில் கேம்ஸ்களை விளையாடி பார்த்தால் ஜாலி தான். இதே கேம்ஸ்களை நாமே தயாரித்துப் பார்த்தால் எப்படி இருக்கும். கேமிங் தயாரிப்பிற்கான ஆர்வம் மிகப்பெரிய அளவில் பெருகி வருகிறது. கேம்ஸ்களை தயாரிக்க அனிமேஷன் சாப்ட்வேர்களில் பிளாஷ் மற்றும் போட்டோஷாப் அறிவு மிகவும் தேவை. புரோகிராமிங் அறிவிற்கு ஆக்க்ஷன் ஸ்கிரிப்ட் சாப்ட்வேரின் அறிவு அவசியாகும். அது 'சி' மொழியின் அடிப்படையில் உருவானது. சி மொழியை ஆழமாக தெரிந்தவர்கள் ஆக்க்ஷன் ஸ்கிரிப்ட் மற்றும் கேமிங் துறையில் சாதிக்கலாம். கேமிங் சாப்ட்வேர் தயாரிப்பிற்கு வேலைவாய்ப்பு டிமாண்ட்டும் பெருகியுள்ளது. நாமும் கல்லூரி இறுதி ஆண்டு புராஜெக்ட் திட்டத்திற்கு கேமிங் புராஜெக்ட்டுகளை தயாரிக்கலாம். கல்லூரி இறுதி ஆண்டு புராஜெக்ட் திட்டத்தில், கேமிங் டெவலப்மென்ட் தயாரித்தால் பிற மாணவர்களிடமிருந்து வித்தியாசமாகவும், அதிசயமாகவும் நம் பணி இருக்கும்.
எங்களுடைய பயிற்சி மையமும் கல்லூரி மாணவர்களுக்கு கேமிங் டெவலப்மென்ட் பயிற்சியை முழு முனைப்புடன் கற்றுக்கொடுக்க இவ்வாண்டு திட்டமிட்டுள்ளது. எங்களிடமுள்ள சில கேம்ஸ்களை பாருங்கள். உங்களுக்கே சொந்தமாக மற்றும் புதிதாக தயாரிக்க ஆசை வரும்.
பரமபதம் (Snake & Ladders):
இது தமிழர்களின் புகழ்பெற்ற பரமபதம் கேமிங்காகும். மகா சிவராத்திரி மற்றும் வைகுண்ட ஏகாதேசி அன்று பலரும் இந்த கேமிங்கை விளையாடி வருகின்றனர். இதில் இருவர் விளையாட வேண்டும். இந்த கேமிங்கில் நாம் ஒரு ஆட்டக்காரராகவும், கணிப்பொறி மற்றொரு ஆட்டக்காரராகவும் இருப்போம். இரண்டு காயின்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் 100 கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களில் பாம்பும், சில கட்டங்களில் ஏணியும் இருக்கும். டைஸ் (Dice) எனப்படும் தாயக்கட்டை போன்ற வடிவத்தை நாம் க்ளிக் செய்தால் அது சுழன்று எந்த எண்ணிக்கை வருகிறதோ அந்த எண்ணிக்கை உள்ள கட்டத்திற்கு நமது காயின் நகர்ந்து செல்லும். உதாரணமாக முதலில் நாம் அந்த தாயத்தை உருட்டினால் 3 என்ற எண்ணிக்கை வந்தால் நமது காயின் 3வது கட்டத்திற்கு நகர்ந்துவிடும். நாம் தாயத்தை உருட்டும் பொழுது 6 எண்ணிக்கை வந்தால் மற்றொரு முறை தாயம் உருட்டும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். பாம்பின் தலை உள்ள கட்டத்திற்கும் நாம் சென்றால் அதில் வழுக்கி பாம்பின் வால் உள்ள கட்டத்திற்கு இறங்கிவிடுவோம். ஏணியின் அடிபாகம் இருக்கும் கட்டத்திற்கு நாம் சென்றால் ஏணியின் மேல் பாகம் இருக்கும் கட்டத்திற்கு ஏறி விடுவோம். 100 கட்டத்தை முதலில் அடைபவர் வெற்றி பெறுபவர் ஆவார்.
முட்டை பிடித்து விளையாடல் (Egg Catching):
இந்த கேமிங்கில் நாம் கூடை போன்ற வலை கூடு உருவத்தை கட்டுப்படுத்துவோம். ஒரு கம்பத்தில் நான்கு கோழிகள் இடைவெளி விட்டு அமர்ந்திருக்கும். அவற்றிலிருந்து ஒரு நேரத்தில் ஒரு கோழி முட்டையிடும். நாம் கட்டுப்படுத்தும் கூடை வடிவத்தைக் கொண்டு அந்த முட்டைகளை கீழே விழாமல் பிடிக்க வேண்டும். 5 முட்டைகளை பிடித்தபின் ஸ்பேஸ்பார் (Space bar) கீயை அழுத்தி கூடையை காலி செய்ய வேண்டும். பின்பு முட்டைகளை பிடிக்க வேண்டும். தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து முட்டைகளை பிடிக்க தவறினால் நாம் இந்த கேமிங்கில் தோற்று விடுவோம்.
பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://softview.in/diploma_gamedevelopment.php?current=courses
பயிற்சி முகவரி:
Mr.RameshKumar
Softview Media College
117, Nelson Manickam Road
Chennai - 29
Ph: 044-4211355
Email: softviewindia@gmail.com
Tuesday, April 3, 2012
3டி திரைப்படங்களை தயாரிக்க உதவும் மோக்கா ப்ரோ சாப்ட்வேர்
மைடியர் குட்டி
சாத்தான், அவதார், அம்புலி ஆகிய திரைப்படங்கள்
3டியில் வெளி வந்து கலக்கியுள்ளன. இத்திரைப்படங்களை பார்க்க நாம்
தியேட்டரில் 3டி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கண்ணாடி அணிய வேண்டும், தற்போது டைட்டனிக் திரைப்படமும் 3டியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படங்களின்
அடிப்படைகள் மோக்கா ப்ரோ என்ற சாப்ட்வேர் மூலமாக தயாரிக்கப்படுகிறது. மோக்கா ப்ரோ
சாப்ட்வேரின் தயாரிப்பு நிறுவனம் இங்கிலாந்தில் உள்ளது. தற்போது என்னுடைய
நிறுவனமும் மோக்கா ப்ரோ சாப்ட்வேரின் டிப்ளமோ பயிற்சி திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சாப்ட்வேருக்கு அதிக வேலைவாய்ப்பு டிமாண்ட்
உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாப்ட்வேரின்
சில சிறப்பம்சங்களை பார்ப்போம்?
·
இந்த மென்பொருள் மூலம் ஒரு வீடியோ காட்சியில் இடம்பெறாத ஒரு
பொருளை இடம் பெற செய்யலாம்.
·
ஒரு வீடியோவில் தேவையற்ற பொருட்களை நீக்கிக் கொள்ளலாம்.
புதிதாக பொறுத்தியும் கொள்ளலாம்.
·
ஒரு 2D படத்தை 3D எனப்படும் முப்பரிமாண படமாக மாற்ற எந்த
பொருட்கள் அவ்வாறு 3D Depth
எனப்படும் முப்பரிமாணத்தில் இடம்பெற வேண்டுமோ அந்த பொருளை தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்.
·
ஒரு வீடியோவில் உள்ள ஒரு பொருளையோ அல்லது உருவத்தையோ தனியாக
பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
·
ஒரு வீடியோவின் பின்னணி காட்சியை மாற்றிக் கொள்ளலாம்.
Sunday, April 1, 2012
ஆன்ட்ராய்டில் தமிழ்
Tamil in Android
ஆன்டிராய்டு 4 அடிப்படையிலான கணிப்பலகையை ( Tablet) கிருஷ்ணகிரியை சேர்ந்த விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் தமிழ் ஒத்திசைவு இல்லாத காரணத்தினால் அதன் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இது குறித்து பல்வேறு விவாதக்களங்களில் காணப்பட்ட செய்தி என்னவெனில் ஆன்டிராய்டு , விண்டோஸ் அடிப்படையிலான கணிப்பலகைகள்(tablet) மற்றும் அலைபேசிகளுக்கு தமிழ் ஒத்திசைவை தரவில்லை. ஆகையால் ஓபேரா வை நிறுவி அதன் வழியாக மாற்றங்களை செய்து தமிழ் செய்திகளை படித்திருந்தோம்.ஆனால் ஆன்டிராய்டு 1.6 -ல் தமிழை பயன்படுத்தி தட்டச்சு செய்திடதமிழ்விசை தமிழா குழுவினரால் கொண்டுவரப்பட்டு பின் அனைவரும் பயன்படுத்த ஏதுவாக இருந்தது.
எனவே நிச்சயமாக இது எழுத்துரு சம்பந்தமான பிரச்னையாகத்தான் இருக்கும் என்று என்று எண்ணி தேடியபோது நிச்சயமாக இது எழுத்துரு பிரச்னையாகவே இருந்தது.
என்னவெனில் ஆன்டிராய்டு தன்னுடன் வழங்கும் எழுத்துருக்களில் தமிழ் உட்பட பல மொழிகளுக்கான எழுத்துருக்கள் சேர்க்கப்படவில்லை. எனவே அதன் தன்னியல்பான எழுத்துருவான DroidSansFallback எழுத்துருவில் யுனிகோடு அடிப்படையிலான தமிழ் இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. எனவே பான்ட் கிரியேட்டர் வழியாக தமிழ் எழுத்துருவை சேர்க்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் வேறு ஒரு குழுவில் வேறு மொழி பிரச்னைக்கு மைக்ரோசாப்ட்-ன் லதா எழுத்துருவை DroidSansFallback என பெயர் மாற்றம் செய்து பாண்ட் கோப்பில் இட்டால் எல்லா மொழியையையும் காணலாம் என்று கூறியிருந்தார்கள்.
அதனடிப்படையில் லதா எழுத்துருவை ரீநேம் செய்தும் பாண்ட் கோப்பில் இட்டும் தமிழ் கட்டம் கட்டமாகவே வந்தது. கடைசியாக எல்ஜி ஆப்டிமைஸ் -ல் சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு தமிழ் வசதி வந்தது நினைவில் வந்தது. எனவே அதில் இருந்த Framework.jar என்ற பைலை root\system\framework -, கணிப்பலகைக்கு மாற்றி ரீஸ்டார்ட் செய்தவுடன் ஆன்டிராய்டு 4 வெகு சிறப்பாக தமிழ் மொழியை காட்டியது :)
கூடவே தமிழ் விசை வழியாக தமிழும் சிறப்பாக தட்டச்சவும் முடிந்தது. ஆனால் சில இடங்களில் முழுமையாக ரெண்டரிங் ஆகவில்லை என்றாலும் தட்டச்சு செய்து பதிந்த பின் மிகச்சரியாக தமிழ் வந்தது.
எனவே ஆன்டிராய்டு எல்லா பதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட எழுத்துருக்களை நிறுவி தமிழ் உட்பட எல்லா மொழியினையும் கொண்டுவரலாம். மேலும் திரு.தகடூர் கோபி அவர்கள் பல்வேறு விதமான எழுத்துருக்களை யுனிகோடு வடிவில் வெளியிட்டுள்ளார். எனவே எழுத்துரு மாற்றம் வேண்டுபவர்கள் அந்த எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பெயர் மாற்றி ஆன்டிராய்டுல் பயன்படுத்தலாம் வித விதமான எழுத்துருக்களுடன் :)
எச்சரிக்கை.சில மொபைல்களில் ரூட்டிங் வசதியை அனுமதிப்பதில்லை. இல்லையேல் உங்கள் மொபைலின் வாரண்டி போய்விடும். எனவே கவனமாக பயன்படுத்தவும்
ஆன்டிராய்டில் தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்க
http://dl.dropbox.com/u/
ரூட்டிங்கிற்கு பயன்படுத்திய மென்பொருள்
https://play.google.com/store/
நமக்கு பிடித்தமான எழுத்துருக்களை சேர்க்க
http://www.higopi.com/index.
ஏற்கனே TAM அடிப்படையில் உள்ள எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றி ஆன்டிராய்ட் உட்பட எல்லா மொழிகளிலும் கொண்டு வர வழிமுறைகள் பற்றி திரு.தகடூர் கோபி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை
http://higopi.blogspot.in/
http://itnewshot.blogspot.in/
Subscribe to:
Posts (Atom)