Search This Blog

Saturday, December 31, 2011

2011 இழந்த இரு கம்ப்யூட்டர் ஜாம்பாவன்கள்

2011 கம்ப்யூட்டர் துறை, இழந்த இரு ஜாம்பாவன்களாக ஸ்டீவ் ஜாப்ஸையும், த.அய்யம்பெருமாளையும் கருதுகிறேன். ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவிக்கு மகனாக பிறந்தவர். இவரை ஒரு ஏழ்மைக்குடும்பம் தத்து எடுத்து எடுத்து வளர்த்தது. தத்து எடுத்து வளரும் போது, அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிறந்த மகள் திருமணம் செய்து கொண்ட பின்பு தான், அவளுக்கு தனக்கு அண்ணன் உண்டு என்பது தெரியும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் பௌத்த மதத்தை சேர்ந்தவர். கணைய புற்றுநோயால் மரணம் அடைவோம் என்று தெரிந்தும் அவருடைய உழைப்பை அவர் நிறுத்தவில்லை. கான்பரேன்ஸ் அறையில் கூட்டம் நடத்தும் போது கூட மயக்கம் அடைந்துள்ளார். மைக்ரோ சாஃப்ட் துவங்கிய காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் புரோஜக்ட் பெற்ற நிறுவனமாகும். 20 வயதில் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார். 30 வயதில் 4000 பேர் அவர் நிறுவனத்தில் பணி புரிந்தனர். 40 வது வயதில் இணைய வழி தயாரிப்புகள் மற்றும் வன்பொருள் கண்டுபிடிப்புகளில் இறங்கினார். 50 வயதில் கம்யூனிகேஷன் வன்பொருள் தயாரிப்பில் முதல் இடத்திற்கு இவர் நிறுவனம் சென்றது. 1989 ஆண்டு ஒன்றரை ஆண்டுகள் நான் ஆப்பிள் கணினிக்கான மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் பணிபுரிந்தேன்.ஆப்பிள் மெக்கின்டோஸ் விலை கூடுதலாக இருந்தாலும் அதன் தரத்தை யாரும் குறை கூறியதில்லை. இன்று ஐபோன், ஐபேட் என பல தயாரிப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது. விருதுநகரில் நடுத்தர குடும்பத்தில் திரு.த.அய்யம்பொருள் பிறந்தார். இவர் பள்ளிக் கல்வி மற்றும் இளநிலை பட்டப்படிப்பு தூத்துக்குடியிலும், முதுநிலை பட்டப்படிப்பு கோவையிலும் ஆகும். பட்டம் முடிந்தவுடன் சென்னை வந்தவர் சென்னை எண்ணுர் பவுண்ட்ரிஸ் நிறுவனத்தில் சாதரண உதவியாளராக சேர்ந்தார். தொழிற்சாலையில் நற்பெயரை பெற்ற இவர் படிப்படியாக வளர்ந்து கணினி ஆய்வாளரானார். எண்ணுர் பவுண்ட்ரிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போதே பல கணினி பயிற்சி மையங்களில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றினார். பிறகு 1986 ஆம் ஆண்டு சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷன் என்ற பயிற்சி மையத்தை துவங்கினார். இன்று சிஎஸ்சி கம்ப்யூட்டர் எஜூகேஷன் பயிற்சி மையத்தில் 525 கிளைகள் உள்ளன. கணினி அடிப்படைகள், மென்பொருள், வன்போருள் & நெட்வேர்ர்க்கிங், அனிமேஷன், மல்டிமீடியா, ஆங்கிலப் பயிற்சி, ரோபொடிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான பயிற்சிகள் என பல திட்டங்கள் உள்ளன.
நான் 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக சிங்கப்பூர் கணினி தொழில் நுட்ப மாநாட்டிற்கு சென்று திரும்பிய பின், அய்யம்பெருமாளை உடனடியாக அணுகும் படி அழைப்பு வந்தது. அய்யம்பெருமாள் அன்று ஒரு கார் ஷேட்டில் சாதரணமாக அமர்ந்திருந்தார். என்னை சந்தித்து பல ரவுண்டுகள் பேசிய பின்பு
ஆண்டோபீட்டர் ஐடி இண்டஸ்ட்ரி சரிந்துள்ளது. நாம் இருவரும் தோள் கொடுத்து வேலை செய்வோமா?
என்று கேட்டார். அவருடைய உழைப்பின் அருமையை நன்கு அறிந்தவன் நான். அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய உழைப்பை அவருடைய குணத்திற்காகவும், உழைப்பிற்காகவும், சிந்தனைக்காகவும் தான், சிஎஸ்சி நிறுவனத்திற்கு அளித்துள்ளேன். காலம் மாற, மாற நல்ல நண்பரானார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் நெருக்கமாக இருப்பது போல, அவரிடம் இருந்து சிஎஸ்சிக்காக பணிபுரிந்தேன். பல நடுத்தர இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கியுள்ளார். ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் படிக்கிறார்கள் என்றால், அந்த பெருமை த.அய்யம்பெருமாளுக்கே உண்டு. உடல்நலத்தை பேணுவதில் அதிக அக்கறை எடுப்பவர். பலருக்கும் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்குபவர். அனைவரும் சுலபமாக இந்த கோடீசுவரரை சந்திக்க முடியும். என்னை அடிக்கடி குடும்பத்தோடு வீட்டிற்கு வர சொல்வார். ஆனால் அவரின் மரணத்திற்கு தான் நான் குடும்பத்தோடு செல்ல முடிந்தது. இயற்கையை யார் வெல்ல முடியும். செல்வத்தால் மரணத்தை வெல்ல முடியவில்லையே. 2011ல் ஸ்டீவ் ஜாப்ஸ், த.அய்யம்பெருமாள் மரணத்தை இவ்வுலகே ஏற்றுக்கொள்ளாது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனாக அனைவருடைய கைகளிலும் உள்ளார். த.அய்யம்பெருமாள் என் குடும்பத்தின் அனைவருடைய மனதிலும் உயிருடன் உள்ளார். அமரர் திரு.த.அய்யம்பெருமாள் மறைந்ததாக நான் நினைக்கவில்லை.
( இந்த வலைப்பக்கத்தை படித்து விட்டு எழுத்தாளர்.மு.சிவலிங்கம் சி மொழியை கண்டுபிடித்த ரிச்சியை ஏன் குறிப்படவில்லை என கேட்டார். இந்த வலைப்பக்கத்தை பொறுத்த வரை பொருளாதார அளவில் வெற்றி பெற்ற, இவர்களை இழந்துள்ளோம் )


Thursday, December 29, 2011

ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகள்

ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகள் -------------------------------------------
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்த போட்டியை நடத்த சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, 77 நிபந்தனைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் இன்று அறிவித்துள்ளார்.
ரூபாய் 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும், புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும், 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது. ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது. கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும், போதை வஸ்துகள் காளைகளுக்கு கொடுக்கக் கூடாது, காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் காட்டி பதிவு சான்றிதழ் பெற வேண்டும், மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது, மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக்குழு இருக்க வேண்டும், வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும், போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும் போன்ற உச்சநீதிமன்ற விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டும்
என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த 77 நிபந்தனைகளில் ஒரு சிலவற்றை தவிர, மற்றவைகளை கடைபிடிக்க அடிப்படை வசதிகள் கிராமத்தில் இல்லாதது, காளைபிடி வீரர்களையும், பொதுமக்களையும், ரசிகர்களையும் பெரும் அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது.

Wednesday, December 28, 2011

டேலி தமிழில்

டேலி தமிழில்
கணக்குவழக்குகளை நிறுவனங்கள் நோட்டு புத்தகங்களிலேயே எழுதி வந்தனர். ஒரு சில கணக்குகளை மீண்டும் பார்க்க அல்லது சரிபார்க்க அனைத்து நோட்டையும் புரட்டி எடுக்கவேண்டும். கணக்கு புத்தகங்ககையும் நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இதில் கணக்குபிள்ளையின் பந்தா வேறு இருக்கும். நேரம் தான் வீணாகும். இந்த குறைகளை எல்லாம் அடித்து நொருக்கியது கம்ப்யூட்டர் யுகம். இதற்கு துணை நின்றது தான் டேலி ஸாப்ட்வேர். கோயங்கா குடும்பம் தயாரித்த இந்த மென்பொருளே இன்று அக்கவுண்ட்ஸிற்கு முன்னணி ஸாப்ட்வேராக உள்ளது. விங்ஸ், ஈஎக்ஸ் என பல மென்பொருட்கள் வந்தாலும் டேலி தான் முன்னணியில் உள்ளது. தெற்காசிய நாடுகளின் நிறுவனங்கள் பெரும்பாலும் டேலி ஸாப்வேரை தான் பயன்படுத்துகின்றன. பொருளாதாரம் பட்டம் படித்தவர்கள் டேலி படித்தால் உடனடி வேலை என்ற சூழல் பரவியுள்ளது. ஆயிரக்கான மாணவர்களும் அங்கீகாரம் பெற்ற டேலி பயிற்சி மையங்களில் இம்மென்பொருளை படித்து வருகிறார்கள். பட்டித்தொட்டியெங்கும் உள்ள அனைவரும் பயன் அடையும் வகையில் எங்கள் ஸாப்ட்வியூ நிறுவனம் டேலி மென்பொருளுக்கு வீடியோ ட்யூட்டர் தயாரித்துள்ளது. இந்த வீடியோ ட்யூட்டரை தயாரித்தவர் திரு.அ.கிருஷ்ணன் ஆவார்.இவர் டேலி மென்பொருளை பதினாறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிஏ ஆர்ட்டிக்கள் ஷிப் பட்டம் பெற்றவர். தமிழகத்தின் டேலி மென்பொருளின் அம்பாஸிட்டர் என இவரை குறிப்படலாம். இவர் டேலி வீடியோ ட்யூட்டரில், மென்பொருளை நடத்தும் விதத்தைக் கண்டு பலரும் மெயய்சிலிர்த்தனர். ஒரே நாளில் டேலி ஸாப்ட்வரை கற்றுக் கொள்ள வரப்பபிரசாதமாக இந்த மென்பொருள் அமைந்துள்ளது. Introduction Video: -------------------------- TALLY in Tamil http://www.youtube.com/watch?v=73YYg6TydJY DVD Available at: --------------------------- Price: Rs.100-00 Softview Media 117, Nelson Manickam Road, Chennai - 29, India. Phone: 23741053 Email : softviewindia@gmail.com

Saturday, December 24, 2011

சென்னை புத்தகக்கண்காட்சி கடைகள் பட்டியல்

சென்னை புத்தகக்கண்காட்சி ஆண்டுதோறும் திருவிழாவாக பொங்கல் காலங்களில் நடத்தப்படுகிறது.400க்கும்மேற்பட்ட புத்தக கடைகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன. தமிழ், ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளுக்கான புத்தகங்கள் நன்கு விற்பனைகின்றன. புத்தகக்கண்காட்சி ஜனவரி 5ந்தேதி துவங்கி 17ந்தேதி முடிவடைகிறது. சென்னை அமிஞ்சிகரையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.
ஜனவரி 8ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் மாலை 4.45மணிக்கு உரையாற்றுகிறார். சென்னை புத்தகக்கண்காட்சி கடைகள் பட்டியல் http://bapasi.com/StallList2012.asp

Saturday, December 17, 2011

ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்

ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்
சுறுசுறுப்பான என் நண்பர் அருணகிரியின் புத்தக வெளியிட்டு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டி

என்னுடைய 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி பேட்டி Puthiya Thalaimurai TV Video Link http://www.youtube.com/watch?v=N3Phsdt-6aw

Wednesday, December 14, 2011

பாரதியார் பற்றிய இணையத் தளம்

பாரதி புகழ் ஓங்குக!!
பாரதியாரின் இணையத்தளம் மகாகவி பாரதியாரின் 130 ஆவது பிறந்த நாளான 11.12.2011 அன்று முதல் பாரதியாரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் வழங்க www.mahakavibharathiyar.info என்னும் இணையதளம் தஞ்சாவூர் பாரதி சங்கத்தால் தொடங்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பாரதியார் நான் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்ததை எண்ணி பெருமையடைகிறேன்.

Tuesday, December 6, 2011

மைக்ரோசாப்ட்டின் இந்திய மொழிகளுக்கான இணையம்

மைக்ரோசாப்ட்டின் இந்திய மொழிகளின் தொழில்நுட்ப வசதிக்காக www.bhashaindia.com என்ற இணைய தளத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தகவல்கொழில்நுட்பச் செய்திகள், மைக்ரோசாப்ட் செய்திகள், சமூக இணையச் செய்திகள், மைக்ரோசாட்டின் கருவிகள், பதிவிறக்கங்கள் மற்றும் மொழி சார்ந்த செய்திகளும் இந்த இணையத்தில் தொகுக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ் ஆபிஸில் தமிழ் உள்ளீடு செய்யும் மென்பொருட்கள் (Driver software) மற்றும் முழுமையாக விண்டோஸை தமிழில் வேலை செய்ய வைக்கக்கூடிய கருவிகளும் (IME's) இந்த இணையத்தில் அளிக்கப்படுகின்றன. இவையனைத்தையும் நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த இந்திய மொழிகளின் தொழில்நுட்பவசதிக்கான இணையம் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்குனி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுக்காக இயக்கப்படுகிறது. செய்திச் சேவைக்காக இவ்விணையம் விருதுகளையும் பெற்றுள்ளது. http://bhashaindia.com/Pages/AboutBhashaIndia.aspx

அடோப் பிரீமியர் - புத்தக விமர்சனம்

அடோப் பிரீமியர் - புத்தக விமர்சனம் (வீடியோ எடிட்டிங் தொழில்நுட்ப கையேடு) திரைப்படத்தொகுப்பு மென்பொருட்களில் முக்கியமானது அடோப் பிரீமியர் ஆகும். பிரீமியர் மென்பொருளை அடிப்படையாக தெரிந்தாலே எடிட்டிங் துறையில் நாம் வெற்றி பெற முடியும். இந்த மென்பொருளின் இயக்கம் பற்றியும் ஒவ்வொரு தேர்வு கருவிகளை பற்றியும் விளக்கமாக இந்நூல் தமிழில் படைக்கப்பட்டுள்ளது. வீடியோகிராபி, ஆடியோ, போஸ்ட் புரொடெக்சன், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ் அனிமேஷன், முக்கிய பிளேக் இன்ஸ், இணையதளங்கள் மற்றும் அடோப் பிரீமியர் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைப்பாடுகள் பற்றியும், கட்டளைகள் பற்றியும் தெளிவாகவும் விரிவாகவும் உள்ளது. அடோப் பிரீமியர் என்ற வீடியோ மென்பொருள் கலை நூலை மா.ஆண்டோ பீட்டர் நுணுக்கமாக எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே கிராபிக்ஸ் அனிமேஷன் மற்றும் வரைகலைகளுக்கு பல நூல்களை எழுதியுள்ளார். வீடியோ கிளிப்பின் அளவை மாற்றுதல், ஒளி ஊடுருவும் தன்மை ஆடியோ மிக்ஸர் என அடோப் பிரீமியரில் உள்ள சிறப்புகளை இந்நூல் கூறுகிறது. தமிழகமெங்கும் பரவியுள்ள கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல் வல்லுனர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். வீடியோ மென்பொருள் துறையில் எந்தவொரு மென்பொருளின் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலத்தில் கைடு வழங்கப்படும். ஆனால் தமிழில் இதுவரை மென்பொருள் கைடு இல்லை எனும் குறையை போக்குகிறது இந்த புத்தகம். >ஆசிரியர் பெயர் : “கணியரசு” மா.ஆண்டோபீட்டர்
பதிப்பக முகவரி : சாப்ட்வியூ பதிப்பகம். 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை–29
தொலைபேசி : 23741053,wwww.softview.in
விலை: ரூ.110/-
பக்கங்கள்: 160