Search This Blog

Tuesday, January 31, 2012

கிராபிக்ஸ் விருதுப் போட்டி

என்னுடைய நிறுவனம் ஆண்டுதோறும் கிராபிக்ஸ் விருதுப்போட்டியை நடத்திவருகிறது. இவ்வாண்டு கிராபிக்ஸ் விருதுப்போட்டி சென்னை தி.நகரில் 28ந் தேதி (சனிக்கிழமை) நடத்தியது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டக்குழு செயலர். திரு தனவேல் ஐஏஎஸ், இயக்குநர்-நடிகர் பொன்வண்ணன் மற்றும் மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர்.
முனைவர். அருள்நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  9 வது கிராபிக்ஸ் விருதுப்போட்டியில்  பாளையங்கோட்டையைச் சேர்ந்த திரு.பி.ராஜன் முதல் பரிசை பெற்றறார்.Friday, January 20, 2012

தமிழ்க் கணினி கருத்தரங்கு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும், இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்துதமிழ்க் கணினிமொழியியல்பயிலரங்கை 11 நாட்கள் நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 20ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. தலைமை உரையை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் ஆற்ற, மைசூர் சிஐஐஎல் இயக்குநர் முனைவர் எல்.இராமமூர்த்தி மையக் கருத்துரை  வழங்கினார். 


எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையை அரசு முதன்மை செயலாளர் திரு.ம. குற்றாலிங்கம் அவர்கள் ஆற்றினார்கள். கணித் தமிழ்ச்சங்க தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் .தெய்வ சுந்தரம், மணிமணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் தமிழ்க்கணினி கருத்துரை ஆற்ற 28 அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 100 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

21.1.2012 : தினமணி புகைப்படம் காண்க:

மா.ஆண்டோ பீட்டரின் நூல் வெளியீடு

15.1.2012 மாலை 5 மணிக்கு , சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் மின்தமிழ் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் என்னுடைய சாப்ட்வியூ பதிப்பக வெளியீடான SHORTCUT KEYS என்ற நூலினை சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் வடிவேல் நாகராஜள்  வெளியிட, ஜெர்மணி சுபாஷினி ட்ரெம்மல்  பெற்றுக்கொண்டார். 

குறுவட்டு வெளியீடு

15.1.2012 மாலை 5 மணிக்கு , சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் மின்தமிழ் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் என்னுடைய சாப்ட்வியூ கணினி நிறுவன வெளியீடான Inventions and Discoveries என்ற குறுவட்டினை முனைவர் நா.கொரியா கண்ணன் வெளியிட, யாகூ (இந்தியா) தமிழ் ஆசிரியர் முனைவர்.அண்ணாகண்ணன் அறிமுகப்படுத்தினார்


வல்லமையில் வெளியான செய்தியை படிக்கவும்


Wednesday, January 18, 2012

நடிகை ரோகினியின் சிறப்பு வகுப்பு

சாப்ஃட்வியூ ஊடகக்கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ரோகினி 18.1.2012 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சிறப்புரையாற்றினார். தமிழ் திரையுலக இயக்குநர்கள் பற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். சிறப்புரைக்கு பின் புத்தகக்கண்காட்சி குறித்து மாணவர்கள் தயாரித்த குறும்படத்தை பார்வையிட்டார்.Monday, January 16, 2012

ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான்: இரா.செழியன்


திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் அறிஞர்கள் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை ஆற்றிய இரா.செழியன் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான். இருண்ட காலம் நீங்கி தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுபோன்ற விடிவுகாலம் இந்தியாவுக்கும் வரவேண்டும். பெண் அறிஞர்களின் பெயர்களிலும் அரசின் சிறப்பு விருதுகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.


பெரியார் விருது புகைப்படங்கள்


சென்னை திராவிடர் கழகம் ஆண்டு தோறும் தமிழ், இலக்கியம், பண்பாடு, கலை மற்றும் அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் பெரியார் விருதுகளும் அளிக்கப்பட்டது. 15ந் தேதி பொங்கலன்று நடிகை சரண்யா, பொன்வண்ணன், இயக்குநர் சற்குணம், பாஸ்கர் சக்தி, ஒவியர் அரசு மற்றும்  எனக்கும் அளிக்கப்பட்டது. விருதுகளை ஆசிரியர் வீரமணி அளித்து சிறப்பித்தார்கள். விடுலை செய்தி தாளின் செய்தியை படிக்க கிளிக் செய்யவும்.
Saturday, January 14, 2012

பெரியார் விருது

சென்னை திராவிடர் கழகம் ஆண்டு தோறும் தமிழ், இலக்கியம், பண்பாடு, கலை மற்றும் அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கிறது. இவ்விருதுகள் பொங்கல் விழாவில் அளிக்கப்படும். இம்முறை தமிழ்மரபு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மின்தமிழ் உறுப்பினர்களுக்கு பெரியார் விருது கிடைத்துள்ளது. இம்மூவரும் மின்தமிழ் உறுப்பினர்கள் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மா. ஆண்டோ பீட்டர் - - - ஓரிசா பாலு - - - மு.இளங்கோவன்


Thursday, January 12, 2012

இயக்குநர் வெற்றிமாறன் குறுவட்டு வெளியீடு

சாஃப்ட்வியூ பதிப்பகத்தில், INVENTIONS AND DISCOVERIES என்ற குறுவட்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (11.1.2012 - புதன்கிழமை- மாலை 6.00 ) வெளியிடப்பட்டது. INVENTIONS AND DISCOVERIES என்ற குறுவட்டை ஆடுகளம் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட, தமிழ் இணையப்பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர்.நக்கீரன் மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர். திரு.சுரேஷ்பால் பெற்றுக்கொண்டனர்.


Wednesday, January 11, 2012

பழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியீடு

சாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'கம்ப்யூட்டர் வைரஸ்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (10.1.2012 - செவ்வாய் கிழமை- மாலை 7.00 ) வெளியிடப்பட்டது. 'கம்ப்யூட்டர் வைரஸ்' நூலை பழ.நெடுமாறன் வெளியிட அரங்கிற்கு வருகை தந்த சிறுவர் சிறுமியர்கள் பெற்றுக்கொண்டனர்.


பழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார்

பழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார் சாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'கம்ப்யூட்டர் வைரஸ்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (10.1.2011 - செவ்வாய் கிழமை- மாலை 7.00 ) வெளியிடப்பட்டது. 'கம்ப்யூட்டர் வைரஸ்' நூலை பழ.நெடுமாறன் வெளியிட அரங்கிற்கு வருகை தந்த சிறுவர் சிறுமியர்கள் பெற்றுக்கொண்டனர்.


Sunday, January 8, 2012

தமிழில் 'அடோப் பீரிமியர்' புத்தகம் வெளியீடு

சாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'அடோப் பீரிமியர்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (8.1.2012) வெளியிடப்பட்டது. 'அடோப் பீரிமியர்' நூலை திரைப்பட இயக்குநர். வ. கௌதமன்
வெளியிட, சின்னத்திரை தயாரிப்பாளர் த.மணிவண்ணன் மற்றும் நன்னூல் டாட் காமின், இணைய மேதை ச.அசோகன் வெளியிட்டார்.


தொலைக்காட்சி தொழில்நுட்பம் நூலை மலேசிய அமைச்சர் வெளியிட்டார்

என்னுடைய சாஃப்ட்வியூ ஊடகக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும், திரைப்பட கல்லூரியின் மாணவர் தமிழ்தாசன் எழுதிய 'தொலைக்காட்சி தொழில்நுட்பம்' நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (8.1.2012) வெளியிடப்பட்டது. 'தொலைக்காட்சி தொழில்நுட்பம்' நூலை மலேசிய துணை அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் வெளியிட, தமிழ்ப்பணி ஆசிரியர் வா.மு.சே.திருவள்ளுவன்
பெற்றுக் கொண்டார்.


Saturday, January 7, 2012

தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் கலைக்களஞ்சிய நூல்கள்

சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கழகம் பல ஆண்டுகளாக அறிவியல் தமிழ் பணிக்காக இயங்கி வருகிறது. இதன் தலைவராக அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.சி.குழந்தைசாமி பணியுற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பதிப்பு பணிகள் பெரும்பாலும் அறிவியல் கலைக்களஞ்சிய தமிழ் நூற்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கலைக்களஞ்சிய நூல்கள் உலகில் எந்த பதிப்பகத்திலும் இல்லை. தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் உள்ள முக்கிய கலைக்களஞ்சியங்கள் பின்வருமாறு: மருத்துவக் கலைக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மருத்துவக் கலைக் களஞ்சியம் 12 தொகுதிகள் மற்றும் மருத்துவ கலைச்சொல் அகராதி ஆகும். அதன் 12 தொகுதி நூல்கள் பின்வருமாறு: உடல்நலம், தாய் சேய்நலம், புலனுறுப்புகள் 1, புலனுறுப்புகள் 2, மூளை, மனநலம், செரிமான மண்டலம், தொற்று மற்றும் பால்வினை நோய்கள், இதய இரத்தநாள மண்டலம், சிறுநீரகம், எலும்பியல், மரபியல் மற்றும் மருத்துவ கலைச்சொல் ஆகியன ஆகும். இந்த 13 நூல்களின் விலை. ரூ.3750/- ஆகும். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் சித்த மருத்துவக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ தமிழ் நூல்கள் ஏழு தொகுதிகளாக உள்ளன. அவை சித்த மருத்துவ வரலாறு, அடிப்படைகள், சிறப்பியல், வாதம் 1, வாதம் 2, பித்தம், கபம், குழந்தை மருத்துவம் ஆகும். இந்த ஏழு நூற்களின் மொத்த விலை.ரூ. 1710/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு திருக்குறள் 5 உரைகள் அடங்கிய குறுவட்டு இலவசமாக அளிக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ ஆங்கில நூல்கள் ஏழு நூற்களாகும். இந்த ஆங்கில தொகுப்பின் விலை. ரூ. 1540/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் அறிவியல் நூல்கள் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் அறிவியல் நூல்கள் செயற்கைகோள், உயிரியல் தாளமுறை, மனிதன், சுற்றுச்சூழல், பரம்பரை தொடரும் பாதை ஆகும். இவற்றுடன் சாஃப்ட்வியூவின் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள், Web Directory, தமிழும் கணிப்பொறியும், கம்ப்யூட்டர் வைரஸ், கம்ப்யூட்டரில் என்ன படிக்கலாம்?, கணினி வேலைக்கு ரெடியா? ஆகிய நூல்கள் தொகுப்பாக அளிக்கப்படுகிறது. இந்த 10 நூல்களின் விலை. ரூ.522/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘உலக கண்டுபிடிப்புகள்’ குறித்த சிடி இலவசமாக அளிக்கப்படும் இயற்கை அறிவியல் நூல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயற்கை அறிவியல் நூல்கள் நீரியல் நீர்வளம், தமிழக நீர்வளம், வேளாண்மை, வனவியல் ஆகிய நான்கு நூற்களாகும். இதன் மொத்
த விலை. ரூ.900/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘என்சைக்ளோபீடியா’ சிடி இலவசமாக அளிக்கப்படும் யோகாக் கலை நூல் தொகுப்பு பெங்களூர் சுந்தரம் பதிப்பகத்தின் வலிப்பும் வனப்பும், சுந்தர யோகா சிகிச்சை, ஆனந்த ரகசியம், ராஜ யோகம், சூர்ய நமஸ்காரம், சந்திய காயத்ரி, ஜெபயோகம், சாந்தியோகம், ஆரோக்கிய உணவு, யோகா சார்ட், Yogic Therapy, The Secret of Happiness, Diet & Digestion ஆகிய 12 நூல்களின் விலை.ரூ. 1720/- ஆகும். பெங்களுர் சுந்தரமே யோகாக்கலையின் முன்னோடி ஆவார். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும். குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 நூல்களாகும். இவை தற்போது நூலாக இல்லாமல் குறுவட்டாக வெளியாகியுள்ளது. இதன் விலை. ரூ.300/- ஆகும்.

தமிழ் வளர்ச்சிக்கழகம் மற்றும் யோகாக்கலையின் நூற்களுக்கு சாஃப்ட்வியூ நிறுவனமே அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆவர். சென்னையில் நடைபெறும் புத்தக்கண்காட்சியில் இந்நூற்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை புத்தக்கண்காட்சியில் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் கடை எண் 331 ஆகும். சாஃப்ட்வியூ நிறுவன அலுவலக முகவரி: 118. நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29. தொலைபேசி: 044-23741053 மின்னஞ்சல் : softviewindia@gmail.com இணையம்: www.softview.in.


Friday, January 6, 2012

உடல் உறவு கொள்ள நாணயமா?

நாணயம் சேர்ப்பவர்களின் கவனத்திற்கு: ரோமனிய சிப்பாய்கள் விலைமாதர்களிடம் அவர்களது சேவைக்குப் பதிலாக வழங்கியதாகக் கருதப்படும் அடையாள நாணயமொன்று லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனின் புட்னி பாலத்திற்கருகிலேயே ரெகிஸ் கேர்சன் என்பவர் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
செப்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்நாணயமானது ரோமனிய படைச் சிப்பாய்கள் தங்களது பாலியல் தேவைகளுக்காக விலைமாதர்களிடம் சென்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 2000 வருடங்கள் பழைமையான இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆணும் பெண்ணும் உறவுகொள்வது போலவும், மற்றைய பக்கத்தில் 'XIIII' எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் கருத்துப்படி இவ் அடையாள நாணயமானது 14 சிறிய ரோமானிய நாணயங்களுக்குச் சமமானதெனவும், இது அக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஊழியர் ஒருவரின் ஒரு நாள் சம்பளத்திற்கு சமனானதாகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அக்காலப்பகுதியில் பெண்கள் பாலியல் அடிமைகளாக உபயோகப்படுத்தப்பட்டனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விபசாரத்தொழிலுக்கு ரோமானியர்கள் முக்கியத்துவம் அளித்ததாகவும், அப்பேரரசின் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகித்ததாகவும் இதனாலேயே அக்காலப்பகுதியில் அதிகாரிகள் விலைமாதர்களைப்ச் பதிவு செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லண்டனில் இத்தகைய நாணயமொன்று கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இது தற்போது லண்டன் நூதனசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்று மாதகாலத்திற்கு இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. (வீரகேசரி)
(புதிய செய்தியாகவும், மரபுச்செய்தியாகவும் உள்ளதால் பிரசுரித்து இருக்கிறேன்)


Thursday, January 5, 2012

வேர்கள் இதழ் வெளியீடு

சென்னை சாஃப்ட்வியூ ஊடகக் கல்லூரியின் மாணவர்களின் 'வேர்கள்' இதழை தமிழக சட்டசபை சபாநாயகர் திரு.டி.ஜெயக்குமார் புத்தக கண்காட்சியில் வெளியிட்டார். அவருடன் சாப்ட்வியூ நிறுவனர் திரு. மா. ஆண்டோ பீட்டர், இதழ் ஆசிரியர் பி.எஸ். சித்ரலேகா மற்றும் துணை ஆசிரியர் கே.மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வேர்கள் இதழை கிளிக் செய்து படிக்கவும் : : : : : : http://www.tamilcinema.com/antopeter/vergal_january_2012.pdf வேர்கள் இதழில் இடம் பெற்றுள் முக்கிய தலைப்புகள்
படைப்பாளிகளுக்கு பிடித்த 10 புத்தகங்கள்! - - - BLOG தொடங்குவது எப்படி? - - - சிறுகதை: கனவு பயணம் - - - கணினித் துறை தமிழ் நூல்களுக்கு தனி புத்தக நிலையம் -m - - சாஃப்ட்வியூ ஆவணப்படம் வெளியீடு - - - தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டுதயம் பேட்டி - - - என்றென்றும் எம்.ஜி.ஆர் - - - மாநகராட்சியும் மக்களும்: எங்கேயும் எப்போதும்..!


Sunday, January 1, 2012

தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள்

அமுதசுரபி இதழின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில், நான் எழுதிய தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள் கட்டுரை வெளியாகியுள்ளது.
தமிழக அங்காடிகளில் சாதராண பொருளாக கம்ப்யூட்டர் விற்கப்படுகிறது. தமிழனின் வீட்டில் திருக்குறள் இருக்கிறதோ?, இல்லையோ, அனைவரின் வீட்டிலும் கம்யூப்ட்டர் கண்டிப்பாக உள்ளது. கம்ப்யூட்டர் இருந்தாலும் தமிழில் இல்லையே என்ற கவலை பலரிடம் உள்ளது. தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும், என்னென்ன தமிழ் மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன, என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வாறெல்லாம் தமிழ் பயன்படுத்தலாம் என்ற ஆசையும் பலரிடம் உள்ளது. தற்போது வணிக உலகில் பயன்பாட்டில் அதிக அளவில் உள்ள மென்பொருட்களை வாசகர்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
Click the PDF file and read the article:
தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள் கட்டுரை