Search This Blog
Friday, July 27, 2012
கணியரசு மா.ஆண்டோ பீட்டரின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி அழைப்பு பத்திரிக்கை
லேபிள்கள்:
Anto Peter,
ஆண்டோ பீட்டர்
Tuesday, July 10, 2012
திருக்குறளும் அரிய தகவல்களும்
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812
* திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் - ளீ, ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்.
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
* திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
* "எழுபது கோடி' என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
* "ஏழு' என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது
* திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
* திருக்குறளுக்கு ஒரு வரியில் இருவர் உரை எழுதியுள்ளனர்.
Friday, July 6, 2012
அமெரிக்கா கவியரசனின் நூல் வெளியீட்டு விழா
அமெரிக்காவின் கொலம்பஸ் ஒஹியோவில் கணினி நிதிசார் சேவையில் கவியரசன் பணிபுரிந்து வருகிறார். கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் உத்தமத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்த கவியரசனின் நூல் வெளியிட்டு விழா வரும் 14ந் தேதி சென்னை காஞ்சி ஓட்டலில் நடைபெறுகிறது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன்
லேபிள்கள்:
Anto Peter
Thursday, July 5, 2012
ஆனந்த விகடன் பேட்டி
100 சதவீத வேலைவாய்ப்பை அளிக்கும் என்னுடைய சாப்ட்வியூ மீடியா காலேஜ் குறித்து நான் அளித்த பேட்டி ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. நீங்களும் படித்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் என் நிறுவனத்தை பற்றி கூறலாமே.... ( ஆனந்த (என்) விகடன் தேதி: 11.7.2012)
தினத்தந்தி கோகுலம் கதிரில் "பயனுள்ள 10 இணையத்தளங்கள்" கட்டுரை
தினத்தந்தி கோகுலம் கதிரில் "பயனுள்ள 10 இணையத்தளங்கள்" கட்டுரை வெளியாகியுள்ளது. கம்ப்யூட்டரை பயன்படுத்த தேவையான பத்து இணையத்தளங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. நீங்களும் படியுங்கள்.
Monday, July 2, 2012
வைரமுத்து கவிதை நூல் வெளியிட்டு விழா- அழைப்பிதழ்
வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் கவிதை நூல் வெளியிட்டு விழா ஜூலை 13ந்தேதி மாலை 6 மணிக்கு காமராசர் அரங்கில் நடைபெறுகிறது.
(அழைப்பிதழ் காண்க)
(அழைப்பிதழ் காண்க)
திரைப்படஇயக்குநர் சீமான் ஆவணப்படம் வெளியீட்டார்
திரைப்பட இயக்குநர் சீமான்
ஆவணப்படம் வெளியீடு
சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் சுனில்குமார் இயக்கிய ‘அழியாத ஈமங்கள்’ மற்றும் ருத்ரவேல் இயக்கிய ‘டாக்குமென்ட்ரி பண்ண போறோம்’ ஆகிய ஆவணப்படங்கள்
சென்னையிலுள்ள ஆழ்வார்திருநகரில் (1.7.2012) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. திரைப்பட இயக்குநர் சீமான் வெளியிட, தமிழன் தொலைக்காட்சி
நிறுவனர் கலைக்கோட்டு உதயம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சாஃப்ட்வியூ இயக்குநர்
மா.ஆண்டோ பீட்டர் மற்றும் பெருவாரியான சாஃப்ட்வேர்
மீடியா காலேஜ் மாணவர்கள் கலந்து
கொண்டார்கள்.
1, இயக்குநர் சீமான் வெளியீட்டின் கூடுதல் புகைப்படங்களை பார்க்க :
2. இயக்குநர் சீமான் வெளியீட்டின் வீடியோவை பார்க்க :
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/july/seeman.asp
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/july/seeman.asp
3. இயக்குநர் சீமான் வெளியீட்டை ஆங்கிலத்தில் படிக்க :
Saturday, June 30, 2012
கும்பகோணத்தில் உள்ள திருபனந்தாள் சிவன் கோவில் தலபுராணம்: டாக்குமென்ட்ரி பண்ண போறோம்
கும்பகோணத்தில் உள்ள திருபனந்தாள் சிவன் கோவில் தலபுராணம்:
டாக்குமென்ட்ரி பண்ண போறோம் ( MY STUDENTS DOCUMENTARY II )
டாக்குமென்ட்ரி பண்ண போறோம் ( MY STUDENTS DOCUMENTARY II )
தலைப்பிலே ஒரு
வித்தியாசத்தை காட்டியுள்ளனர் சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்-ல் பயிலும் ருத்ரவேல்
மற்றும் பிற மாணவர்கள். இவர்கள் படைத்துள்ள ஆவணப்படம் கும்பகோணத்தில் உள்ள
திருபனந்தாள் சிவன் கோவில் பற்றிய தல வரலாற்றை தெளிவாகவும் ஒரு புதுயுத்தியுடனும்
காட்டியுள்ளனர்.
இந்த ஆவணப்படத்தில்
இக்கோவிலை பற்றியும், தல விருட்சம்
பற்றியும் அதை சுற்றியுள்ள மக்கள் மற்றும் கோவிலின் சிறப்பு தன்மை பற்றியும் புது
கோணங்களில் படைத்துள்ளனர். இக்கோவிலின் சில காட்சிகளை அனிமேஷன் மூலமாக மிக
தத்ரூபமாக காட்டியுள்ளனர். “டாக்குமென்ட்ரி
பண்ண போறோம்” என்ற இந்த
ஆவணப்படம் மனமகிழ்ச்சியை காண்போருக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமே இல்லை.
இவ்வகையான ஆவணப்படங்கள் நம்முடைய சரித்திரங்களையும், உண்மைகளையும் பாதுகாக்க உதவும்.
வீடியோ பார்க்க: http://www.youtube.com/watch?v=7i7ssHu9VdQ
Friday, June 29, 2012
தமிழகத்தில் 'அழியாத ஈமங்கள்' : Video Documentry
அழியாத ஈமங்கள்
சாஃப்ட்வேர் மீடியா
காலேஜில் பயிலும் மாணவர் சுனில்குமார் தனது சக மாணவர்களுடன் இணைந்து, இறுதி திட்டத் தயாரிப்பாக டாக்குமென்ட்ரி திரைப்படம் படைத்துள்ளனர். அழியாத ஈமங்கள் என்ற
தலைப்பில் வெளிவந்துள்ள இந்த டாக்குமென்ட்ரி ஒரு புது களத்தை தன் கதை கருவாகக்
கொண்டுள்ளது.
கி.மு. 3200 வாழ்ந்த தமிழ் மக்களின் புராதான ஈமங்கள்
பற்றியும், அதன் நம்பிக்கைகள்
பற்றியும் மிக அழகாகவும், தெளிவாகவும்
படம்பிடித்துள்ளனர். இதுவரை யாரும் முயற்சிக்காத ஒரு கதையை எடுத்து, மக்களுக்கு ஒரு பொக்கிஷத்தை தெரிய
படுத்தியுள்ளனர். இந்த டாக்குமென்ட்ரி கிருஷ்ணகிரி மாவட்த்தில் உள்ள கருமலையில் பல
ஆயிரம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஈம கற்கள் உள்ளன. அதன் தற்போது நிலை என்ன,
அந்த காலத்தில் இக்கற்களின்
முக்கியத்துவம் மற்றும் மக்கள் எவ்வாறு வழிபட்டனர் என்று மிகவும்
உணர்ச்சிபூர்வமாகவும், புதுசிந்தனையுடன்
அனைவருக்கும் ஒரு புதிய செய்தியை கொண்டு சேர்த்துள்ளது இந்த டாக்குமென்ட்ரி.
அண்ணா மேம்பாலத்தில் பேருந்தை விபத்துக்குள்ளாக்கிய டிரைவர் போட்டோ:
அண்ணா மேம்பாலத்தில் பேருந்தை விபத்துக்குள்ளாக்கிய டிரைவர் போட்டோ:
அண்ணா மேம்பாலத்தில் பேருந்தை விபத்துக்குள்ளாக்கிய, டிரைவர் பிரசாத் கைதாகி ஜாமீனில் விடப்பட்டார். அவரின் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தேகிக்கக்கூடிய தவறுகள்:
1. டிரைவர் செல்போனில் பேசிருக்கலாம்
2. டிரைவர் போதையில் இருந்திருக்கலாம் (தினகரன் நாளிதழ்)
3. டிரைவர் சீட் ரிப்பேராகி, கயிற்றில் கட்டப்பட்டிருந்தது
4. பாதுகாப்பற்ற, சர்வீஸ் செய்யப்படாத பழைய பஸ்
5. பிரேக் பெயிலியர்
இரு கால்கள் உடைந்த நிலையில் டிரைவர்
Thursday, June 28, 2012
அமெரிக்க தமிழ்த் திருவிழா
அமெரிக்க தமிழ்த் திருவிழா
FETNA நடத்தும் அமெரிக்க ஆண்டு தமிழ்த் திருவிழா மேரிலான்ட்டில் உள்ள பால்டிமோரில் நடைபெறுகிறது. ஜுலை 6 முதல் நடைபெறும் இவ்விழாவில் பல திரை நட்சத்திரங்களும், தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இவ்வாண்டு மு.வா-வின் நூற்றாண்டு விழாவாக கொண்டாப்படுகிறது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன்
Saturday, June 23, 2012
வீட்டு மனைக்கண்காட்சி: வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் செய்து பார்
வீட்டு மனைக்கண்காட்சி: வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் செய்து பார்
உலகின் சிறந்த முதலீடு வீடும், மனையும் தான். குறிப்பிட்ட வயதில் நாம் வீட்டைக் கட்டி குடிபுகுந்தாலே சமூகத்தில் நமக்கு நல்ல அந்தஸ்து கிடைக்கிறது. வீடு கட்டுதலை பாரமாக நினைப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு இன்று ஆறுதலாக உள்ளது.
கம்ப்யூட்டர் புரட்சிக்கு முன் ரியல் எஸ்டேட் மேதாவிகளே உலகின் பெரிய பணக்காரர்களாக வலம் வந்துள்ளனர். அந்த அளவுக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாக ரியல் எஸ்டேட் உள்ளது. இன்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகளை பார்ப்போர் பலரும் உள்ளனர். பணம் வைத்திருந்தும் நல்ல சொத்துக்களை வாங்க முடியாமல் பலரும் திணறுகின்றனர். நல்ல இடத்தில், நல்ல வாஸ்துவுடன் மற்றும் நல்ல வசதியுடன் கூடிய சொத்தை வாங்குவதை தான் பலரும் விரும்புகின்றனர். வீட்டு மனை, வீடு, அலுவலகம், தோட்டம், பண்ணை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு ஆகியவற்றை மொத்தமாக திரட்டி விற்பதற்கு கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. இக்கண்காட்சிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.
ஜூன் 23-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'ரியல்லூக் மீடியா நிறுவனம்' பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் கண்காட்சியை துவக்கியது. கண்காட்சியை சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், கணித்தமிழ்ச்சங்க தலைவர் மா. ஆண்டோ பீட்டர் மற்றும் தொழிலதிபர் செந்தில் துவக்கி வைத்தனர். கண்காட்சியின் கூட்டத்தை கண்டு அனைவரும் மலைத்தனர்.
Friday, June 22, 2012
பள்ளி ஆசிரியராக என்னென்ன படிப்புகள் படிக்கவேண்டும் ?
பள்ளி ஆசிரியராக என்னென்ன படிப்புகள் படிக்கவேண்டும் ?
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பட்டப் படிப்புகளில் 9 பட்டப் படிப்புகள் மற்ற படிப்புகளுக்கு இணையானது என்றும், 2 பட்டங்கள் இணையில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 12ம் தேதி தகுதித் தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 50 ண்டுஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தவர்களில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்து பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
அதில் சில பட்டப் படிப்புகள் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதி உள்ளவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சுமார் 23 பட்டப் படிப்புகள் மற்ற படிப்புகளுக்கு இணையானதா என்று கேட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன் பேரில், இணையான படிப்புகள் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செய லாளர் சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கல்வித் தகுதி, குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு இணையானதா என்று சான்றளிக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கேட்டிருந்தார். அதன்படி 23 பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையானதுதானா என்பது குறித்து சமநிலைக் குழு ஆய்வு செய்தது. சமநிலைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் 9 பட்டப் படிப்புகள் இணையானவை என்றும் 2 பட்டங்கள் இணையில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி,
!!! சென்னைப் பல்கலைக் கழக பி.எஸ்சி (புள்ளியியல்) பட்டப் படிப்பு , பி.எஸ்சி (கணக்கு)க்கு இணையானது. ஆனால் அவர்கள் பிஎட் படித்திருக்க வேண்டும்.
!!! சென்னைப் பல்கலைக் கழக பி.எஸ்சி பிளாண்ட் பயோ டெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக பி.எஸ்சி சுற்றுச் சூழல் பயாலஜி, ஆகியவை, பி.எஸ்சி (தாவரவியல்) படிப்புக்கு இணையானவை.
!!! சென்னைப் பல்கலைக் கழக பி.எஸ்சி(சுற்றுச் சூழல் விலங்கியல்), பிஎஸ்சி (விலங்கியல்)க்கு இணையானது.
!!! சென்னைப் பல்கலைக் கழக எம்.எஸ்சி ( 5 ஆண்டு வேதியியல் படிப்பு) , பி.எஸ்சி(வேதியியல்) படிப்புக்கு இணையானது.
!!! பாரதிதாசன் பல்கலைக் கழக பிஎஸ்சி (இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்) , பி.எஸ்சி (இயற்பியல்) படிப்புக்கு இணையானது(பிஎஸ்சி இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பி.எட்(இயற்பியல்) பட்டம் பெற்றவர்கள் பள்ளிகளில் இயற்பியல் பாடம் நடத்த தகுதியானவர்கள்)
!!! பெரியார் பல்கலைக் கழக பி.ஏ ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), அவினாசி லிங்கம் பல்கலைக கழக பி.ஏ (பங்ஷனல் இங்கிலீஷ்) ஆகிய இரண்டும் பி.ஏ ஆங்கில பட்டத்துக்கு இணையானவை. மேற்கண்டவை தவிர சென்னைப் பல்கலைக் கழக பி.ஏ சிறப்பு ஆங்கிலம், வணிகவியல் ஆங்கிலம் ஆகிய இரண்டு படிப்புகளும், பி.ஏ ஆங்கிலத்துக்கு இணையானவை அல்ல. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Saturday, June 16, 2012
என் வீட்டுத்தோட்டத்தில்
மின் தமிழ் குழுமத்தில் சகோதரி சுபாஷினி தன்னுடைய தோட்டப்பணிகளை தொகுத்து வருவதை ரசிப்பேன். ஜெர்மனி தோட்டத்தை விட என் தோட்டம் குறைந்தது அல்ல என்று என் மனதிற்குபட்டது. ஆகையால் கடந்த நான்கு மாதங்களாக என் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்கள், காய், கனிகளை புகைப்படம் எடுக்க துவங்கினேன். எப்படி இருக்கு ? இத்தோட்டத்தில் நம்ம காய்கறிகளை பாருங்க... ஒட்டு யாருக்கு ?
பன்னீர் ரோஜா
டிசம்பர் மலர்
ஹம்மிங் பெர்ட் மலர்
திருநீத்துப்பச்சை (மாலையில் கட்டும் நறுமண இலை)
தங்க அரளிப்பூ
டபுள் ஆக்ட்
மஞ்சள் கனகாம்பரம்
வாழைக்காய்
மாந்தளிர்
பப்பாளி பழம்
இட்லி மலர்
புத்தர் மலர்
தேங்காய்
வெற்றிலை
கும்பளங்காய் ( நெல்லிக்காய் வகை)
துளசி
நித்தியகல்யாணி
பட்டன் ரோஜா
குண்டு மல்லிகை
வாஸ்துப்பூ
பசலைக் கீரை
குளோரி லில்லி (தமிழக மாநில மலர்)
புதினா
நட்சத்திர பழம் (நியூசிலாந்தில் விளையக்கூடியது)
பலாப் பழம்
கறிவேப்பிலை
வெண்டைக்காய்
அதிக புகைப்படங்களை பதித்தால் இந்த பிளாக்கு திணறுகிறது. என்னால் பதிக்க முடியவில்லை. ஆகையால் தற்போது விளைச்சலில் இருக்கும் கீழ் கண்ட செடிகளின் புகைப்படங்களை வெளியிட முடியவில்லை
மரவள்ளி கிழங்கு
ரம்பை இலை
வசம்பு
பிரியாணி இலை
கொய்யா பழம்
நாவல் பழம்
சாம்ப காய்
மூங்கில்
பனை மரம்
குரோட்டன்ஸ் (26 வகைகள்)
இரட்டை அடுக்கு மல்லி
ஜாதி மல்லி
ஈக்கி மல்லி
சாத்துக்குடி
மாதுளம்பழம்
லச்சக்கொட்டை
முருங்கை மரம்
சீதாப்பழம்
ராமர் சீதாப் பழம்
பங்கனப்பள்ளி மாம்பழம்
சப்போட்டா
மொச்சைக்கொட்டை
கற்பூரவல்லி
மற்றும் பல துளிர்களாக உள்ளன.
Wednesday, June 13, 2012
இந்திய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி?: போட்டியிட தகுதி என்ன?
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்றது நமது இந்தியா. இதன் முதல் குடிமகன் ஜனாதிபதி. ஒரு சாதாரண குடிமகனும் ஜனாதிபதி ஆக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. பதவி காலம் 5 ஆண்டுகள். ஆனால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவரை தேர்ந்து எடுக்கலாம்.
பெருமைமிக்க இந்திய ஜனாதிபதி பதவிக்கு வர இந்திய நாட்டில் பிறந்த எல்லோருக்கும் உரிமை உண்டு. 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நமது நாட்டின் முதல் ஜனாதிபதி ஆனவர் ராஜேந்திரபிரசாத். அடுத்து வந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை தொடர்ந்து ஜனாதிபதியாக பலர் பதவி ஏற்றனர்.
இந்திய ஜனாதிபதி பதவிக்கு பெருமை சேர்ந்தவர்களில் அப்துல்கலாமை அடுத்து ஜனாதிபதி ஆனவர் பிரதீபா பாட்டீல். இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது 5 ஆண்டு பதவிகாலம் ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்...
பெருமைமிக்க ஜனாதிபதி பதவிக்கு யாரும் வரலாம்... என்றாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அதுபற்றி கனவுகூட காண முடியாது. இந்த பதவிக்கு போட்டியிட சில தகுதிகள் வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.
அதன்படி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பி இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவராக இருக்க வேண்டும் ரூ.15 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது முக்கிய விதி முறைகளாகும். இந்த தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு 50 எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஒரு வேட்பாளருக்குத்தான் முன்மொழிய முடியும்.
புதிய ஜனாதிபதிக்கான வேட்பு மனு வருகிற 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை ஜூலை 2-ந்தேதியும், வாபஸ் பெறும் நாள் 4-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டு எண்ணிக்கை தேதி ஜூலை 22. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போடும் ஓட்டுகளில் அதிக ஓட்டு பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்.
எம்.பி., எம்எ.ல்.ஏ.க்களின் ஓட்டுக்களுக்கு தனித்தனி மதிப்பீடு உள்ளது. தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரத்து 168. இதை 234 சட்டசபை தொகுதி எண்ணிக்கையால் வகுத்து வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 176. எனவே தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டின் மதிப்பு 176. இதுபோல புதுச்சேரியில் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 லட்சத்து 71 ஆயிரத்து 707. இங்கு எம்.எல்.ஏ. தொகுதி 30. இதன்படி கணக்கிட்டால் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 16. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாறும். பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டின் மதிப்பு அதிகமாக இருக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120. இவர்களின் மொத்த ஓட்டுகளின் மதிப்பு 5,49,474.
இதுபோல் எம்.பி.க்களின் ஓட்டுக்களுக்கும் தனிமதிப்பு உள்ளது. பாராளுமன்றத்தில் 543 எம்.பி.க்களும் டெல்லி மேல்சபையில் 233 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 776. இதைக் கொண்டு எம்.எல்.க்களின் மொத்த ஓட்டுக்களை வகுத்தால் கிடைக்கும் எண் 708. இதுவே ஒரு எம்.பி. ஓட்டின் மதிப்பு ஆகும்.
எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882. இதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்களைப் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். எம்.பி.க்கள் டெல்லி பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நாளில் ஓட்டுப் போட வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைமை செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்வாவடிகளில் ஓட்டுப் போடவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எம்.பி.க்கள் 10 நாட்களுக்கு முன்பு முன் அனுமதி பெற்று மாநில தலைநகரங்களில் ஓட்டுப் போடலாம்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடும் போது 2 வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடலாம். இதில் ஒருவருக்கு முதல் ஓட்டும், மற்றொருவருக்கு 2-வது ஓட்டும் போட வேண்டும். ஓட்டுச் சீட்டு முறையில் இது நடைபெறும். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளர் வாக்கு பெறாவிட்டால் 2-வது சுற்று ஓட்டுக்கள் எண்ணப்படும். முடிவில் அதிக ஓட்டுக்கள் பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.
மத்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் ஜனாதிபதி தேர்தலுக்கான முறையான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரியாக டெல்லி மேல்-சபை செயலாளர் அக்னி கோத்ரி நியமிக்கபட்டுள்ளார். தமிழ் நாட்டில் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் மேற்பார்வையில் தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு நடைபெறும். புதுச்சேரியில் சட்டமன்ற செயலாளர் அன்பழகன் உதவி தேர்தல் அதிகாரியாக இருப்பார். இதுபோல் மற்ற மாநிலங்களிலும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. என்றாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. அடுத்த ஜனாதிபதி கீரிடம் யாருக்கு என்பதை நாடே... ஏன் உலகமே ஆவலோடு எதிர்பார்க்கிறது.
முப்படைத் தளபதி இந்திய ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைப்படியே செயல்பட முடியும். என்றாலும் அவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. ஜனாதிபதி இந்திய அரசின் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். மத்திய கூட்டாட்சி நிர்வாக குழுவின் தலைவரான இவர் இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கிறார்.
* இந்திய பாராளு மன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்கும்படி அழைக்கும் உரிமை.
* அவரை பிரதமராக நியமித்தல்.
* பிரதமரின் பரிந்துரையின்படி மத்திய மந்திரிகளை நியமித்தல்.
* நாட்டை மந்திரி சபை மூலம் நிர்வகித்தல்.
* பாராளுமன்றத்தை கூட்டுவது, தள்ளி வைப்பது, பாராளுமன்றத்தில் உரையாற்றுவது.
* பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களில் கையெழுத்திட்டு சட்ட அங்கீகாரம் வழங்குதல்.
* மாநில கவர்னர், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியோருக்கு பிரதமரின் அறிவுறுத்தலின்படி பதவி பிரமாணம் செய்து வைப்பது.
* நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய 352-வது சட்டப்பிரிவை பயன்படுத்துவது.
*பாராளுமன்றத்தை கலைப்பது. தேர்தல் நடத்துவது அவசர ஆணை பிறப்பிப்பது.
* 356-வது சட்டப் பிரிவுகளின்படி மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம்.
* சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை குறைக்கும் சிறப்பு அதிகாரம்...
என்று ஜனாதிபதியிடம் இந்திய ஆட்சி முறையின் முக்கிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
Thursday, June 7, 2012
Friday, June 1, 2012
வல்லவனுக்கு வல்லவன்: விஸ்வநாதன் ஆனந்த்
Hats off to Viswanathan Anand...
தமிழன் விளையாட்டுத்துறையில் சாதித்தது அல்லது உலக அளவில் புகழ்பெற்றமை மிக சொற்பமே...
பாஸ்கரன், தன்ராஜ்பிள்ளை (ஹாக்கி)
முத்தையா முரளிதரன், ஸ்ரீகாந்த் (கிரிக்கெட்)
ஜோஸ்னா (ஸ்குவாஷ்)
இளவழகி (கேரம்)
தற்போதைய கபடி டீம்...
என விரல்விட்டு எண்ணலாம். விளையாட்டால் நம் நாடு மற்றும் இனத்திற்கே பெருமை கிடைக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றாலே பல நாடுகள் நமக்கே தெரிய வருகிறது. விளையாட்டில் சாதிக்க விடாமுயற்சியும், உழைப்பும், ஊக்கமும் தேவை.
அறிவையும் சிந்தனையும் கசக்கி விளையாடும் செஸ்ஸில் நம் தமிழன் விஸ்வநாதன் ஆனந்த் என்றும் முன்னணி கதாநாயகனாக திகழ்கின்றார். ரஷிய நாடு தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த செஸ் விளையாட்டில் உலக நாயகனாக விஸ்வநாதன் ஆனந்த் திகழ்கின்றார். நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தையும், இந்தியாவின் மதிப்புமிகு பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். அவர் பெற்ற விருதால் தமிழகமே பெருமைபடுகிறதென கூறலாம். ஆனந்த் சென்னை லயோலா கல்லூரி மாணவர் ஆவார்.
அவரை வாழ்த்தி பாராட்டு மழைகள் குவிகின்றன. மன்மோகன்சிங், ஜெயலலிதா மற்றும் உலக விளையாட்டு அமைப்புகள் ஆனந்தை பாராட்டி வருகின்றன. ரஷிய அதிபர் பல வேலைபளுக்கிடையே விஸ்வநாதன் ஆனந்த்திற்கு தேநீர் விருந்து கொடுத்து பாராட்டியுள்ளார். இத்தருணத்தில் நாமும் அவரை பாராட்டுவோம்.
Other Links:
விஸ்வநாதன் ஆனந்த்:
Wikipedia Informations
பள்ளிகளில் செஸ் கிளப் துவக்க அரசு உத்தரவு
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=14710
ஆனந்த்துக்கு ரூ.2.கோடி தமிழக முதல்வர் அறிவிப்பு
http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0-2-164507791.html http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0-2-164507791.html
இன்று சென்னை திரும்புகிறார் உலக சாம்பியன் ஆனந்த்
http://tamil.webdunia.com/sports/othersports/news/1206/02/1120602011_1.htm
தமிழன் விளையாட்டுத்துறையில் சாதித்தது அல்லது உலக அளவில் புகழ்பெற்றமை மிக சொற்பமே...
பாஸ்கரன், தன்ராஜ்பிள்ளை (ஹாக்கி)
முத்தையா முரளிதரன், ஸ்ரீகாந்த் (கிரிக்கெட்)
ஜோஸ்னா (ஸ்குவாஷ்)
இளவழகி (கேரம்)
தற்போதைய கபடி டீம்...
என விரல்விட்டு எண்ணலாம். விளையாட்டால் நம் நாடு மற்றும் இனத்திற்கே பெருமை கிடைக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றாலே பல நாடுகள் நமக்கே தெரிய வருகிறது. விளையாட்டில் சாதிக்க விடாமுயற்சியும், உழைப்பும், ஊக்கமும் தேவை.
அறிவையும் சிந்தனையும் கசக்கி விளையாடும் செஸ்ஸில் நம் தமிழன் விஸ்வநாதன் ஆனந்த் என்றும் முன்னணி கதாநாயகனாக திகழ்கின்றார். ரஷிய நாடு தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த செஸ் விளையாட்டில் உலக நாயகனாக விஸ்வநாதன் ஆனந்த் திகழ்கின்றார். நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தையும், இந்தியாவின் மதிப்புமிகு பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். அவர் பெற்ற விருதால் தமிழகமே பெருமைபடுகிறதென கூறலாம். ஆனந்த் சென்னை லயோலா கல்லூரி மாணவர் ஆவார்.
அவரை வாழ்த்தி பாராட்டு மழைகள் குவிகின்றன. மன்மோகன்சிங், ஜெயலலிதா மற்றும் உலக விளையாட்டு அமைப்புகள் ஆனந்தை பாராட்டி வருகின்றன. ரஷிய அதிபர் பல வேலைபளுக்கிடையே விஸ்வநாதன் ஆனந்த்திற்கு தேநீர் விருந்து கொடுத்து பாராட்டியுள்ளார். இத்தருணத்தில் நாமும் அவரை பாராட்டுவோம்.
Other Links:
விஸ்வநாதன் ஆனந்த்:
Wikipedia Informations
பள்ளிகளில் செஸ் கிளப் துவக்க அரசு உத்தரவு
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=14710
ஆனந்த்துக்கு ரூ.2.கோடி தமிழக முதல்வர் அறிவிப்பு
http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0-2-164507791.html http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D-%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0-2-164507791.html
இன்று சென்னை திரும்புகிறார் உலக சாம்பியன் ஆனந்த்
http://tamil.webdunia.com/sports/othersports/news/1206/02/1120602011_1.htm
Anand arrives to a ceremonial receptionhttp://www.thehindu.com/sport/article3484134.ece
Monday, May 28, 2012
அனிமேஷன் படிப்புகள் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் துவக்கம்
செயின்ட்
சேவியர்ஸ் கல்லூரி 1923 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும்
கலைக்கல்லூரியாக தென்தமிழ்நாட்டில் திறக்கப்பட்டது. இக்கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு, சென்னையில் உள்ள சாஃப்ட்வியூ நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு அனிமேஷன்
வகுப்புகளை தனி பிரிவாக நடத்தவுள்ளது.
சாஃப்ட்வியூ நிறுவனத்
தலைவர் திரு. மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் செயின்ட் சேவியர்ஸ்- சாஃப்ட்வியூ அனிமேஷன்
கல்வி ஒருங்கிணைப்பாளராவார். செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியின் அனிமேஷன் லேபில்
அனிமேஷன், அச்சுப்பணி, இணையதளம் உருவாக்கம், மல்ட்டிமீடியா, ஈலேர்னிங் என்ற இணையவழி கல்வி உருவாக்கம், வீடியோ எடிட்டிங் பற்றிய பல வகையான பட்டய படிப்புகள் நடத்தப்படும்.
மாணவர்கள் தேவைக்கேற்ப பட்டய படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இந்த பட்டிய
படிப்பு மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
Sunday, May 27, 2012
தமிழ் அறிஞர்கள் நால்வருக்கு பாராட்டு விழா
கணித்தமிழ் சங்கம் தகவல் தொழிற்நுட்பத் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கணித்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கணினி சார்ந்த
வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் தயாரிப்பளார்கள் உறுப்பினராக
உள்ளனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இந்திய மொழிகளுக்காக செய்திடும் தகவல்தொழில்நுட்ப மறுமலர்ச்சிக்கு பல்வேறு வகையான மேம்பாட்டுப்பணிகயையும் கணித்தமிழ்ச்சங்கம் செய்து வருகிறது. தமிழக அரசின் தமிழ்க்கணினி திட்டங்களுக்கு கணித்தமிழ்ச் சங்கம் பல
ஆண்டுகளாக இணைந்து பணியாற்றுவது மட்டுமின்றி பல விழிப்புணர்வு பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. இணைய
முகவரி: www.kanithamizh.in
கணித்தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழ்மொழி டாட்
காம் துவக்க விழா சென்னை மைலாப்பூரில் லக்சணா அரங்கில் (26.05.2012) நடைபெற்றது. இக்கூட்டத்தில்
இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், மா.ஆண்டோ பீட்டர் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ் தொண்டாற்றும் நால்வருக்கு
கவுரவிப்பு செய்யப்பட்டது. திரு. க.ஜெயகிருஷ்ணன், திரு. வீரமணிபாரதிதாசன்,
திரு.சி.வெற்றிவேல் மற்றும் திரு. பத்ரிசேஷாத்திரி ஆகியோர் ஆவர்.
தமிழில் முதன் முதலாக வாசகர்களுக்காக கணினி
இதழை வெளியிட்ட க.ஜெயகிருஷ்ணனுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவரின்
‘தமிழ்க்கம்ப்யூட்டர்’ இதழ் 21 ஆண்டுகளாக வெளி வருகிறது. தமிழ் ஊடகப்பேரவை,
கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் பதிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இவர் உள்ளார்.
சென்ற நூற்றண்டின் தலைசிறந்த தமிழ் அறிஞர்
பாரதிதாசனின் பேரன் வீரமணிபாரதிதாசனுக்கு கவுரவம் செய்யப்பட்டது. பாரதிதாசன்
நாத்திகவாதி, ஆனால் இவரோ ஆன்மீகவாதி. உலககெங்கும் சென்று இவர் ஆன்மீக
தமிழ்ச்சொற்பொழிவை ஆற்றி வருகிறார்.
பள்ளி ஆசிரியர் சி.
வெற்றிவேலுக்கு ஒரு வரியில் திருக்குறள் எழுதியமைக்கு கவுரவம் செய்யப்பட்டது. இவர்
150க்கும் மேற்பட்ட திருக்குறள் உரை மற்றும் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களை
சேகரித்து வைத்துள்ளார். தற்போது தன் சொந்த இணையத்தை
தொகுத்து வருகிறார்.
கிழக்கு பதிப்பகத்தின்
நிர்வாகி பத்ரிசேஷாத்திரிக்கு கவுரவம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் பேராசிரியராக
பணியாற்றிய இவர் அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், நாவல், பயோகிராபி, மருத்துவம்,
இசை, கலை மற்றும் எண்ணெற்ற தலைப்புகளில் நூல்கள் பதித்துள்ளார். இவருடைய
என்.எச்.எம் ரைட்டர் என்ற தமிழ்மென்பொருள் பெரும் பயன்பாட்டில் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)