Search This Blog

Saturday, June 16, 2012

என் வீட்டுத்தோட்டத்தில்

மின் தமிழ் குழுமத்தில் சகோதரி சுபாஷினி தன்னுடைய தோட்டப்பணிகளை தொகுத்து வருவதை ரசிப்பேன்.   ஜெர்மனி தோட்டத்தை விட என் தோட்டம் குறைந்தது அல்ல என்று என் மனதிற்குபட்டது. ஆகையால் கடந்த நான்கு மாதங்களாக என் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்கள், காய், கனிகளை புகைப்படம் எடுக்க துவங்கினேன். எப்படி இருக்கு ? இத்தோட்டத்தில் நம்ம காய்கறிகளை பாருங்க... ஒட்டு யாருக்கு ?

பன்னீர் ரோஜா


டிசம்பர் மலர்


ஹம்மிங் பெர்ட் மலர்


திருநீத்துப்பச்சை (மாலையில் கட்டும் நறுமண இலை)


தங்க அரளிப்பூ


டபுள் ஆக்ட்


மஞ்சள் கனகாம்பரம்


வாழைக்காய்மாந்தளிர்பப்பாளி பழம்


இட்லி மலர்புத்தர் மலர்


தேங்காய்


வெற்றிலை


கும்பளங்காய் ( நெல்லிக்காய் வகை)துளசி


நித்தியகல்யாணி


பட்டன் ரோஜா


குண்டு மல்லிகை


வாஸ்துப்பூ


பசலைக் கீரை


குளோரி லில்லி (தமிழக மாநில மலர்)


புதினா


நட்சத்திர பழம் (நியூசிலாந்தில் விளையக்கூடியது)
பலாப் பழம்கறிவேப்பிலை


வெண்டைக்காய்அதிக புகைப்படங்களை பதித்தால் இந்த பிளாக்கு திணறுகிறது.  என்னால் பதிக்க முடியவில்லை. ஆகையால் தற்போது விளைச்சலில் இருக்கும் கீழ் கண்ட செடிகளின் புகைப்படங்களை வெளியிட முடியவில்லை


மரவள்ளி கிழங்கு
ரம்பை இலை
வசம்பு 
பிரியாணி இலை
கொய்யா பழம்
நாவல் பழம்
சாம்ப காய்
மூங்கில்
பனை மரம்
குரோட்டன்ஸ் (26 வகைகள்)
இரட்டை அடுக்கு மல்லி
ஜாதி மல்லி
ஈக்கி மல்லி
சாத்துக்குடி
மாதுளம்பழம்
லச்சக்கொட்டை
முருங்கை மரம்
சீதாப்பழம்
ராமர் சீதாப் பழம்
பங்கனப்பள்ளி மாம்பழம்
சப்போட்டா
மொச்சைக்கொட்டை
கற்பூரவல்லி

மற்றும் பல துளிர்களாக உள்ளன.7 comments:

 1. அடேயப்பா,எத்தனை வகைகள்! விருக்ஷியை நானும் இட்லிப் பூனு தான் சொல்லிட்டு இருந்தேன். சென்னை வந்தப்புறம் விருக்ஷினு சொல்ல ஆரம்பிச்சு இப்போ அப்படியே. இதிலே ரோஸ் நிறத்தில் ஒரு வகை இருக்கு. மிச்சம் உள்ளதும் கொஞ்சம் கொஞ்சமாப் போடுங்க. முதல்லே தோட்டத்துக்கு திருஷ்டிப் பூஷணி வைங்க. ஆனாலும் என் ஓட் சுபாவுக்குத் தான். :))))))

  ReplyDelete
 2. போதுண்டா சாமி, உங்க வலைப்பக்கத்திலே பின்னூட்டம் கொடுக்கிறதுக்குள்ளே ஒரு வழி பண்ணிடுச்சு. :P:P:P:P

  ReplyDelete
 3. 'சார், நல்லதொரு பதிவு....! மிகுந்த அக்கறையோடு பராமரித்து வருகிறீர்கள். பாராட்டுகள்.
  ஆமாம், இது எங்க சார் சென்னையா இல்ல வேற ஊரா.....? '

  ReplyDelete
 4. அன்புச் சகோதரர் ஆண்ட்டோ,

  அருமை.. அருமை... தோட்டம் அழகாக பராமரிப்பது என்பது ஒரு அரிய கலை... சுபாவின் கைவண்ணமும், ராஜம் அம்மாவின் அபரிமிதமான ஆர்வமும் எனக்கு எப்பொழுதும் ஆச்சரியமேற்படுத்தக்கூடியது.... உங்கள் மனைவியிடம் ஒளிந்து கொண்டிருக்கும் இவ்வரிய திறமை சுபா சொல்லக் கேட்டு ஆச்சரியமாக இருக்கிறது.. அவருக்கு மனமார்ந்த வாழ்த்தைச் சொல்லுங்கள். புகைப்படம் அழகாக எடுத்து அதை பகிர்ந்து கொண்டு எங்கள் கண்களுக்கும் ,மனதிற்கும் விருந்தளித்த உங்களுக்கும் நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி.

  ReplyDelete
 5. ஆமாம், உங்கள் வீடு 13.25 ஏக்கர் நிலத்துலயா இருக்குது?

  ReplyDelete
 6. இவை அனைத்தும் சென்னை வீட்டில் தான்

  ReplyDelete
 7. கும்பளங்காய் இது தானோ?

  மார்த்தாண்டம் குளச்சல் பகுதிகளில் வெண்பூசணியை கும்பளங்காய் என்கிறார்கள். எது சரி?

  ReplyDelete