ஜூன் துவக்கத்தில் தமிழ் மற்றும் கணிதத்தின் ஒற்றுமை குறித்த ஆய்வு படிப்பை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் துவக்கினேன். இச்சீரிய படைப்பு தமிழ் சமுதாயத்திற்கு பயன்படும் என நம்புகிறேன். இவ்வாய்வு ஏன்?
மொழியும், கணிதமும் தான் மனிதன் கற்க வேண்டிய அடிப்படையாகும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்பன மொழியாகும். வேதியியல், புவியியல், புள்ளியியல், கணினியியல், தொழில்நுட்பவியல் என பல நுட்பவியல் முறைகளும் பாடங்களாக உள்ளன. இவை யனைத்திற்கும் அடிப்படை கணிதமே ஆகும்.
நம் தமிழ் மொழிக்கு எவ்வாறு சங்கத்தமிழ், செவ்வியல் மொழி என அடையாளம் உள்ளது. அதேபோல் அளவைகள், சூத்திரங்கள், வாய்ப்பாடுகள், கணக்கு வழக்கு முறைகள் அனைத்தும் நம் தமிழ் சமுதாயத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கணிதம் தமிழனின் சமுதாயத்தில் உருவானதா?. கணிதம் நம் தமிழ் மொழியின் வேரா? கணிதத்தின் சங்க இலக்கிய சான்றுகள் மற்றும் தமிழுக்கும், கணிதத்திற்கும் உள்ள ஒற்றுமைச் சான்றுகள் குறித்து இவ்வாய்வில் தேடவுள்ளேன்.
அளவுகள், எண்ணிக்கை, கணக்கிடுதல், ஆகியன என்னென்ன நிலைகளில் உருவெடுத்துள்ளது. பல்வகை கணித பாட முறைகள், கருவிகள், அறிவியல் மற்றும் கணித புள்ளியியல் வழிகள் தமிழில் எவ்வாறு உருவெடுத்தது என்பன இவ்வாய்வில் ஆராயவுள்ளேன். தமிழ் கணித சான்று காண்போர், கண்டோர் உதவவும்.
மிகத் தாமதமாக தங்களின் இப்பக்கத்தைக் காண்கிறேன். தமிழ் செய்யுள்களில் நேரசை நிரையசை உள்ளது. இது தான் செய்யுள் கட்டமைப்பிற்கு ஆதாரம். இந்த செய்யுள் கட்டமைப்பிற்கு ஏதேனும் கணித விதி கண்டறியப்பட்டுள்ளதா ஐயா? தங்களின் ஆய்வேடு முடிந்ததா? காணக்கிடைக்குமா ஐயா?
ReplyDelete