சித்திரை புகைப்படக் கண்காட்சியை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் பாடலாசிரியர் மதன்கார்க்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்கள்.
பின்னர், புகைப்பட கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்களை பார்வையிட்டு, சிறந்த மூன்று புகைப்படங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். புகைப்படக் கண்காட்சியை நிறைவு செய்வதற்கு வருகை புரிந்த ‘ஆதியந்தம்’ திரைப்படத்தின் இயக்குனர் துரைப்பாண்டியன், சிறந்த புகைப்படங்கள் எடுத்த மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கினார். முதல் பரிசை ராஜமுந்திரியைச் சேர்ந்த சிவராமன் என்ற மாணவன் பெற்றார். இயக்குனர் துரைப்பாண்டியன் பேசியதாவது:
‘‘நானும் மாணவர் பருவத்திலிருந்து வந்தவன்தான். பல குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். முதன் முறையாக ‘ஆதியந்தம்’ என்கிற திரைப்பட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். புகைப்பட ரசனைதான் இயக்குனரை உருவாக்கும். எனக்கு சின்ன வயசிலிருந்தே புகைப்படம் எடுப்பதும், பார்ப்பதும் படிக்கும். மாணவர்களாகிய உங்களுடைய படங்களைப் பார்க்கும்போது, மிக பிரமாதமாக இருக்கிறது. குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், வறுமையை மட்டும் பதிவு செய்திருக்கிறீர்கள். நம்முடைய இந்தியப் பண்பாட்டில் வறுமை என்பது எப்போதாவது நடப்பது அல்லது நடந்து இன்றும் பல கலாச்சாரங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றை பதிவு செய்திருக்கலாம். வரும் காலங்களில் அப்படியான பதிவை நான் எதிர்பார்க்கிறேன்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment